விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீரி செயல்பட்டதாக ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்ட 179 பட்டாசு ஆலைகளில் 161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இன்று அனுமதி அளித்துள்ளார். தொழிலாளர்களின் நலன் கருதி இந்த ஆலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக கூறிய அவர் விருதுநகர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பட்டாசு ஆலைகள் இயங்கினாலோ பணியில் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்தினாலோ ஆலையின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tag: பட்டாசு ஆலைகள்
சிவகாசி பட்டாசு ஆலைகள் மார்ச் 21ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் பட்டாசு என்றாலே நமக்கெல்லாம் ஞாபகம் வருவது விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி தான். இதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறதுஇதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் அடிக்கடி உயிரிழப்புகளும், விபத்துகளும் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் 90% பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் கொரோனா காரணமாக தமிழக அரசு கடந்த சில வாரங்கள் முன்பு முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் வருமானமின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என தொழிலார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கை ஏற்று தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய […]
அதிக லாபம் ஈட்ட வேண்டுமென்ற பட்டாசு ஆலைகளின் பேராசை தான் விபத்துகளுக்கும், உயிர் பலிக்கும் முக்கிய காரணமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தானது பட்டாசு மருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் ஏப்.20க்கு பிறகு 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என மாவட்ட ஆட்சியர் கண்ணன் அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 20 முதல் எவையெல்லாம் இயங்கும் என ஊரடங்கு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி , கிராமப் பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள் சமூக இடைவெளியுடன் இயங்கலாம் என் […]