நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பொழுது பட்டாசு வெடிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசப்பட்டதாவது, விநாயகர் சிலையின் பாதுகாப்பிற்கு அந்தந்த அமைப்பினரே பொறுப்பேற்று சிலைகள் விசர்சனம் செய்யும் வரை இரவும் பகலும் குறைந்தபட்சம் 10 நபர்கள் பாதுகாப்புடன் போலீசாருக்கு உதவியாக இருக்க வேண்டும். அதன் நகல் சம்பந்தப்பட்ட […]
Tag: பட்டாசு வெடிக்க தடை
உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அப்பகுதியில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அடைவது மட்டுமல்லாமல் மக்களும் பாதிக்கப்படுகின்றன. அதனால் தற்காலிகமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பட்டாசு வெடிப்போர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதை யாரும் பொருட்படுத்தாமல் விசேஷ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து […]
உகாண்டா அரசு, மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்திருக்கிறது. உகாண்டாவில் வருடந்தோறும் பட்டாசு வெடித்து புத்தாண்டை மக்கள் கொண்டாடுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்க தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக பட்டாசு வெடிக்க தடை அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு கொரோனா தொற்றை தடுக்க இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. […]
தமிழகத்தில் வருகின்ற 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் போன்றவற்றை வாங்கி வருகின்றனர். இதனிடையே குடிசைப்பகுதி மற்றும் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் மாவட்டம் வாரியாக விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புலிகள் மற்றும் யானைகள் உள்பட விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் […]
மேற்கு வங்காள மாநிலத்தில் தீபாவளி,கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நாட்களில் பட்டாசு வெடிக்க மாநில ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் தீபாவளி, காளி பூஜை மற்றும் புத்தாண்டு தினங்களில் இரண்டு மணி நேரம் வரை பசுமை பட்டாசுகளை வெடிக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே கொரோனா காலத்தில் பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிப்பது வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வருவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் மூன்றாம் அலையினை கவனத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வெடிக்கவும் விற்பனை செய்யவும் மாநில அரசு தடை விதித்துள்ளது. நவம்பர் மாதம் 4ஆம் […]
புத்தாண்டின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் பொதுமக்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் பாரம்பரியமான இடங்கள் போன்றவைகளை பாதுகாக்கும் வகையில் பட்டாசுகளை வெடிப்பதற்கு அரசு தடைவிதித்துள்ளது. எனினும், அரசின் இந்த சட்டத்தை சிறிதும் மதிக்காமல் பொதுமக்கள் பலரும் நடந்துகொண்டுள்ளனர். இதனால் பல உயிர்கள் பறிபோயுள்ளது. அதாவது, இத்தாலியின் தலைநகர் ரோமில் புத்தாண்டு கொண்டாடபட்டது. This is what happened in Rome. Fireworks killing birds 🐦 😭 pic.twitter.com/sCBqj1FOzQ […]
டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் பட்டாசு வெடிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிக அதிகமாக உள்ளது. அதனால் பொதுமக்கள் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டில் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரிய நகரங்கள், காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை […]
நாட்டில் காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. காற்று மாசு உயர்வு மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதிலும் காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. காற்று மாசு, மிக மிக […]
காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தேசிய தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகின்ற 14ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட இருக்கும் நிலையில் பட்டாசு வெடிப்பதற்கான ஒரு மிக முக்கிய உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது. காற்று மாசு அதிகமாக இருக்கக்கூடிய நகரங்களில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தீபாவளியை எதிர்நோக்கி இருக்கக்கூடிய இந்த தருணத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு சட்டீஸ்கர் மாநிலத்தில் பட்டாசுகளை விற்பதற்கும் வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கும், பட்டாசுகளை விற்பதற்கும் பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் சட்டீஸ்கர் மாநிலத்தில் பட்டாசு விற்பதற்கும் படிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் குளிர் காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் அம்மாநில அரசு தடை […]
கர்நாடக மாநிலத்தில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 16ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க தடை விதிப்பது பற்றி அம்மாநில அரசு பரிசீலனை செய்து வந்துள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு இராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் […]
மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் தீபாவளி பண்டிகை வருகிற 13-ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபற்றி அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை அன்று அதிக அளவிலான பட்டாசுகள் […]
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று மூன்று மாநிலங்களில் அரசு விதித்துள்ள தடையை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்தத் தொழிலில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் 6 […]