பணகுடியில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பணகுடி மங்கம்மாள் சாலை பகுதியில் வசித்து வருபவர் ராமன் என்பவருடைய மகன் 23 வயதுடைய பசுபதி. இவர் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது மது அருந்தி உள்ளார். இந்நிலையில் பணம் குடியில் உள்ள ஒரு கோவில் பின்பக்கம் பாழடைந்த வீட்டில் பசுபதி உடலில் ரத்த காயங்களுடன் பிணமாக […]
Tag: பணகுடி
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் காரில் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகேஇருக்கிறது லெப்பை குடியிருப்பு என்ற கிராமம். இந்த சிறிய கிராமத்தில் விளையாண்டு கொண்டிருந்த குழந்தைகள் 3 பேர் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடியுள்ளனர்.. இதில் நித்திசா (7) நித்திஷ் (5) இருவரும் அண்ணன் தங்கைகள்.. அதேபோல கபிலன் என்ற 4 வயது குழந்தை.. இந்த 3 குழந்தைகளும் நிறுத்தி […]
பணகுடி பேரூராட்சியில் அட்டகாசம் செய்த 2 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பேரூராட்சியில் உள்ள சூசையப்பர் வடக்கு ரத வீதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 தினங்களாக இரண்டு குரங்குகள் சுற்றி திரிந்தன. இந்த குரங்குகள் வீடுகள், சமையலறைகளில் புகுந்து பழங்கள், மீன்கள், முட்டைகள், சமையல் பொருட்களை தின்று சேதப்படுத்தி வந்துள்ளன. இதைத்தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள் குரங்குகளை விரட்டினால் அவர்கள் மீது பாய்ந்து பயமுறுத்தி உள்ளது. மேலும் ஒரு சில […]
நெல்லை மாவட்டத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த வியாபாரிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை 2ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் வியாபாரிகள் கடைகளை திறக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இதனையடுத்து நெல்லை மாவட்டம் பணகுடி வியாபாரிகள் சங்கம் சார்பில் நலிவடைந்த வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பணகுடி வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் வைத்து சங்கத் தலைவர் […]