பட்டப்பகலில் ஸ்கூட்டரில் விவசாய வைத்திருந்த 1 லட்சத்து 35 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் அருகே இருக்கும் கரட்டுப்பாளையம் பகுதியில் சேர்ந்த ராமலிங்கம் என்ற விவசாயி நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கரட்டுப்பாளையத்தில் இருந்து ஸ்கூட்டரில் வெள்ளகோவிலில் இருக்கும் ஒரு வங்கிக்கு வந்தார். பின் வங்கியிலிருந்து ஒரு லட்சம் எடுத்து அதை ஒரு பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தார். இதன்பின் அந்தப் பணப்பையை […]
Tag: பணம் அபேஸ்
பெண்ணிடம் ஏடிஎம் கார்டை திருடி 44,000 அபேஸ் செய்த மர்மநபரை போலீஸ் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் மண்டு கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த சந்திரா என்பவர் தனது வீட்டில் வங்கி கணக்கின் ஏடிஎம் கார்டை வைத்திருக்கின்றார். அதனை மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டார்கள். அந்த ஏடிஎம் கார்டுடன் ரகசிய எண்ணையும் குறித்து வைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது. அந்த கார்டை பயன்படுத்தி சந்திராவின் வங்கி கணக்கிலிருந்து 44 ஆயிரத்தை அந்த மர்ம நபர் அபேஸ் […]
பகுதிநேர வேலை தருவதாக கூறி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணிடம் 5 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது கொண்ட பெண் ஒருவர் சென்ற இரண்டாம் தேதி அவரின் செல்போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்திருக்கின்றது. அதில் பகுதிநேர வேலை தேடுபவரா? உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு! தினமும் அதிக வருமானம் பெறலாம் என வந்திருந்தது. மேலும் ஒரு இணையதள லிங்க்கும் இருந்தது. […]
குறுந்தகவலில் வந்த செய்தியை நம்பி 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்த பெண்ணிடம் மோசடி செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் ஜெகதேவி ரோடு பகுதியில் வசித்து வரும் ஹேமபிரியா என்பவர் ஜவுளிக்கடை ஒன்றை வைத்துள்ளார். இவரின் செல்போன் எண்ணுக்கு குறைந்த அளவில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபத்துடன் வருமானம் கிடைக்கும் எனவும் ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. […]
ஏலச்சீட்டு நடத்தி பணத்தை அபேஸ் செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் வி. மாதேப்பள்ளி கூட்டு சாலை பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, பாகலூர், பேரிகை, ஓசூர், கர்நாடகா, ஆந்திராவில் சேர்ந்த நிறைய பேர் சீட்டு கட்டி வந்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆறு மாதங்களாக கட்டிய சீட்டு பணத்தை கொடுக்காமல் பல லட்சம் ரூபாய் அபேஸ் செய்துள்ளார். […]
கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப்பில் “குட் மார்னிங்” என்று மின்னஞ்சல் வந்துள்ளது. இதை ஒரு பெண் அனுப்பியதாக நினைத்து அவரும் தொடர்ந்து வாட்ஸ் ஆப்பில் உரையாடி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 8ஆம் தேதி அவர் அனுப்பிய முகவரிக்குச் சென்றுள்ளார். அப்போது விடுதி அறையில் மூன்று ஆண்கள் இருந்துள்ளனர். இதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அந்த மூன்று பேரும் காவல்துறை அதிகாரிகள் என […]