பாரத மக்கள் கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் தாக்கப்பட்ட நிலையில், அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சேலம் மாநகராட்சி 1 ஆவது வார்டில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதே போல அந்த மாநகராட்சியில் 1 ஆவது வார்டில் பாரத மக்கள் கட்சி தலைவரான கதிர்வேல் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். கடந்த 17 ஆம் தேதி காமநாயக்கன்பட்டி பகுதியில் சென்று கொண்டு இருந்த […]
Tag: பணம் பட்டுவாடா
சென்னை மயிலாப்பூரில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க QR Code மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலையடுத்து 9-ஆம் மண்டல தேர்தல் அதிகாரிகள் உடனடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவின் 124-வது வட்டச் செயலாளர் தங்கதுரை என்பவர் வீடு வீடாக சென்று QR Code டோக்கன் வழங்கியதை பார்த்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக மடக்கிப் பிடித்துள்ளனர். டெக்னாலஜி எப்படி பயன்படுகிறது பார்த்தீர்களா?
தி.மு.க நிர்வாகிகளின் இரண்டு கார்களை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோத்தகிரி பகுதியில் தி.மு.க நிர்வாகிகள் இரண்டு கார்களில் வந்து அந்த பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று பணம் அளித்துள்ளனர். இதனால் கோபமடைந்த கிராம மக்கள் திமுக நிர்வாகிகளின் கார்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பறக்கும் படை அதிகாரிகள் அங்கு […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதற்காக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சக்கரகோட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. அப்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தங்கபாண்டியன் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மஞ்சன மாரியம்மன் கோவில் அருகே 2 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இதனைதொடர்ந்து […]
பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியண்ணன் தலைமையிலான குழுவினர் பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சில மர்ம நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கையில் இருந்த கவர்களை அதிகாரிகளை கண்டதும் வீசிவிட்டு தப்பி ஓடினர். அந்த கவர்களை அதிகாரிகள் […]
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்தில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கூறினார். சிவகங்கையில் நிருபர்களுக்கு, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை போன்று திமுக தலைமையிலான எங்களது கூட்டணி அமோக வெற்றி பெறும். சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி […]
தேனியில் பறக்கும் படையினர் வருவதை கண்டு பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தி.மு.க கட்சியினர்கள் தப்பி ஓடினர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கினைப் பெறுவதற்காக பொதுமக்களுக்கு பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ வழங்காமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் ஆண்டிப்பட்டி தொகுதியில் தி.மு.க கட்சியினர் பொதுமக்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்வதாக பறக்கும் படை அதிகாரியான பிரேம்தாஸ் குமாருக்கு தனி […]
மதுரையில் அ.ம.மு.க கட்சியினர் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதால் அவர்களிடமிருந்த 37,000 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் நியமித்தது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அ.ம.மு.க கட்சியினர் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பறக்கும்படை அதிகாரியான கார்த்திக் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பறக்கும் படையினர் விரைந்து சென்றனர். அப்போது அதே […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பணம் பட்டுவாடா செய்ததாக வி.சி.க. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அகரதிருகோலக்கா தெரு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தி.மு.க. சார்பாக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் பறக்கும் படை அதிகாரி சிவாஜி தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு […]
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அதிமுகவினர் வினியோகம் செய்ததை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு வலையங்குளம், ஆலம்பட்டி பகுதிகளில் அதிமுக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமையில் ஆயிரம் ரூபாய் வினியோகம் செய்யப்பட்டது. அதிமுகவுக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிய காட்சிகள் வெளியாகி பிற கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தும் […]