நாமக்கல் மாவட்டத்திலுள்ள சிவ நாயக்கன்பட்டி பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டியில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் என்னிடம் நிதி உதவி செய்யுமாறு கேட்டார். அப்போது என்னிடம் பணம் இல்லை என கூறினேன். இதனையடுத்து வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என அவர் கூறியதை நம்பி எனது […]
Tag: பணம் மோசடி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூரில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி புதுக்கோட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் 8 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 20-வது தெருவில் அங்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன் கார்த்திகேயனின் ஏ.டி.எம் கார்டை எடுத்துக்கொண்டு பணம் எடுப்பதற்காக எம்.கே.பி நகர் 1-வது தெருவில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் ஏ.டி.எம் கார்டை சொருகி பணம் எடுக்க முயன்ற போது பணம் வரவில்லை. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் அங்கம்மாள் உதவி கேட்டுள்ளார். அவரும் ஏ.டி.எம் கார்டை வாங்கி எந்திரத்தில் […]
கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை குறிஞ்சி நகரில் கார் டிரைவரான சுரேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், தனது பெயர் முருகன் எனவும், தான் சென்னை தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உங்களது செல்போன் எண் குழந்தைகள் ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக உங்களிடம் விசாரணை நடத்த நீங்கள் சென்னை வரவேண்டும் என சுரேந்தரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் வினோத், காமராஜ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களிடம் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்திபட்டினத்தை சேர்ந்த வெங்கடாச்சலம், அவரது நண்பர்களான சங்கர் பாபு, கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி வினோத், காமராஜ் ஆகியோர் ரூ.3 ½ கோடி வரை கொடுத்துள்ளனர். அந்த பணத்தை பெற்று கொண்ட வெங்கடாசமும் அவரது நண்பர்களும் எந்த வித லாபத்தொகையும் கொடுக்கவில்லை. இதுகுறித்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மேலராமன் புதூரில் அழகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதிரா தேவி(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உதிரா தேவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை சி.பி.ஐ அதிகாரி என அறிமுகப்படுத்தி, உதிரா தேவியிடம் குடும்ப விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி குறித்து கேட்டுள்ளார். இதனையடுத்து தான் பலருக்கு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும், முதற்கட்டமாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் உங்களுக்கும் வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். […]
ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை தொட்டவுடன் வங்கி கணக்கு குறித்த தகவல்களை பதிவிடுமாறு கேட்கப்பட்டது. அப்போது அந்த இளம்பெண் அறியாமல் வங்கி கணக்கு தகவல்களை பதிவிட்டார். உடனடியாக வங்கியில் இருந்து 77 ஆயிரத்து 950 பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. இதனை […]
கோவை மாவட்டம் ஜோதிபுரம் முதல் வீதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி மாலதி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒரு புகார்மனு அளித்தார். அவற்றில், நான் ரத்தினபுரியிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறேன். சென்ற 2020 ஆம் வருடம் ஜெய் கணேஷ் என்பவர் என்னிடம் வந்து தான் ரத்தினபுரி சுந்தரம் வீதியில் வசிப்பதாக கூறி அறிமுகமானார். மேலும் அவர் என்னிடம் பிரதமமந்திரி யோஜன திட்டத்துக்காக வந்துள்ளேன். […]
ஆன்லைன் மூலம் தொழில் செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி வாலிபரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்த பணத்தை போலீசார் மீட்டனர். நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே இருக்கும் அகஸ்தியன்பள்ளி பகுதியைச் சேர்ந்த கவிதரன் என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நபர் ஆன்லைன் மூலம் தொழில் செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி உள்ளார். இதை கவிதரனும் நம்பி ஒரு லட்சத்து இருபது ஆயிரத்தை அந்த […]
மருத்துவ உபகரணங்கள் அனுப்புவதாக கூறி பணத்தை மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் பிரகாஷ்(40). இவருடைய நண்பர் ஒருவர் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் கம்பெனி நடத்தி வந்துள்ள நிலையில் அவரின் மெடிக்கல் குரூப் என்ற வாட்ஸ்அப் குழுவில் பிரகாஷ் இருந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய நபரொருவர் தான் குர்னூர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறியுள்ளார். இதையடுத்து […]
போலி அரசு அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே ஓரசாலை கிராமத்தில் மனோ, சிவராம் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் டாண்பாஸ்கோ நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நின்றுக் கொண்டிருந்தனர். இவர்களிடம் மனோ மற்றும் சிவராம் அரசு அதிகாரிகள் என கூறி போலி அடையாள அட்டையை காண்பித்து பணம் தரும்படி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கோத்தகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி […]
பரிசு பொருளை அனுப்புவதாக கூறி வாலிபரிடம் ரூ மூன்று லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா கலித்திரம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் 22 வயதுடைய பிரவீன்குமார். இவருக்கு பேஸ்புக் மூலம் ஒரு நபர் நண்பராக அறிமுகமாகியுள்ளார். அதன்பின் அந்த நபர் தன்னுடைய மொபைல் போனிலிருந்து பிரவின் குமாருக்கு வாட்ஸ்அப் மூலமாக பரிசுப் பொருட்களை அனுப்பி உள்ளதாக தகவலை பதிவு செய்தார். அதன் பின்னர் கடந்த ஜனவரி14 […]
மூதாட்டியிடம் பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் 67 வயதுடைய மூதாட்டி ஒருவர் தனியார் தேயிலை எஸ்டேட் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நபர் தான் இங்கிலாந்தில் இருப்பதாகவும், மனைவி இறந்துவிட்டதால் மகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இவர் மூதாட்டியிடம் எனது மகள் உங்களுக்கு பரிசு அனுப்ப விரும்புகிறாள் என கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டி குழந்தையிடமிருந்து பரிசுகளைப் […]
திருச்சி மாவட்டம் உடையான் பட்டியை சேர்ந்தவர் கீர்த்திகா. இவர் திருச்சியில் உள்ள என் ஐ டி கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு வேலைத்தேடி வந்ததோடு தனது சுய விவரங்களை ஜாப் வலைத்தளத்தில் பதிவெற்றிருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு புதிய எண்ணில் இருந்து இவருக்கு அழைப்பு வந்து தங்களுக்கு பெங்களூரில் இஞ்சினியரிங் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும் அங்கு தங்குமிடம் சாப்பாடு, விண்ணப்ப கட்டணம் என அனைத்திற்கும் ரூபாய் 3 லச்சத்து 57ஆயிரம் வழங்கவேண்டும் எனவும் […]
வேலூர் அருகில் அதிக வட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூபாய் 7 லட்சம் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு ராமன் தெருவில் வசித்து வரும் தொழிலாளி மதன்ராஜ், இவர் மனைவி 37 வயதான சுஜானா.இவர் செல்போனிற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு மெசேஜ் வந்தது. பேஸ்புக் மெசேன்ஜரில் வந்த அந்த மெசேஜ்யில் நீங்கள் செலுத்தும் பணத்திற்கு அதிக வட்டி கிடைக்கும் என்று […]
தனியார் நிறுவன சேவை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி 57 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரத்தில் வசித்து வரும் முகமது என்பவர் தான் வைத்திருக்கும் தனியார் நிறுவன கிரெடிட் கார்டின் பில் தேதி தவணை தெரியாத நிலையில், இதுகுறித்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது அதில் குறிப்பிட்டிருந்த தனியார் நிறுவனத்தின் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் முகமதின் கிரெடிட் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளார். இதனையடுத்து […]
இணையதளம் மூலமாக 7 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் பெருவிளையில் ஆல்பர்ட் செல்வ ஸ்டாலின் [வயது 22] என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆல்பர்ட் செல்வ ஸ்டாலின் செல்போன் கடை வைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து இவர் ஒரு பிரபல செல்போன் கம்பெனியில் இணையதள முகவரியில் இது தொடர்பாக விண்ணப்பித்துள்ளார். அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மேலாளர் […]
வாட்ஸ்-அப்மூலம் போலியான தகவல் அனுப்பி 2 1/2 லட்சம் மோசடி செய்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள முல்லைநகர் பகுதியில் ஜெயந்தி (38) என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு வாட்ஸ்-அப் எண்ணிலிருந்து அவருக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று இருந்துள்ளது. இதனை நம்பிய ஜெயந்தி வாட்சப் மூலம் பதிலளித்து இதுகுறித்து விபரங்களை கேட்டுள்ளார். இதனை கேட்ட சிறிது நேரத்திலேயே ஜெயந்தியின் […]
செங்குன்றத்தில் மாதச் சீட்டு நடத்தி 4 கோடி ரூபாய் மோசடி செய்த கணவனும் மனைவியும் தலைமறைவாகினர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்திலுள்ள நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்த்த ராமச்சந்திரன்- பஞ்ச வர்ண செல்வி தம்பதியினர். இருவரும் மாத சீட்டு நடத்தினர். அவர்களிடம் 300-க்கும் மேற்ப்பட்டோர் மாதச் சீட்டு செலுத்தினர். ஆனால் மாதச்சீட்டு செலுத்தியவர்களுக்கு பணம் கொடுக்காமல் 4 கோடி ஏமாற்றி இருவரும் தலைமறைவாகினர். அவர்கள் வீட்டில் இல்லை என்பதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஆவடியில் உள்ள […]
வங்கி உதவி மேலாளர் என கூறி பணத்தை மோசடி செய்த மர்மநபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் செட்டியமடை கிராமத்தில் வசந்தி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடந்த ஆண்டு நகையை அடகு வைத்துள்ளார். அதனை மீட்பதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்மநபர் ஒருவர் வசந்தியிடம் சென்று நான் வங்கியின் உதவி மேலாளர் குமார் […]
Google Pay மூலம் பண மோசடி செய்யப்பட்டதில் 24,00,000 ரூபாயை இழந்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில். விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சில ரகசிய தகவலின் படி வடமாநில கும்பலை சேர்ந்த ரோகன், ராகேஷ் குமார் சிங், சுயந்தன் முகர்ஜி, ராகுல் ஆகிய 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசார் மேற்கு வங்காளத்திலிருந்து கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்த விவகாரம் […]
சென்னை பள்ளிக்கரணையில் வினோத்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், முகநூல் விளம்பரத்தில் சுற்றுலா கப்பலில் வேலை செய்ய ஆட்கள் தேவை என்றும் கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அரண்மனை புதூர் பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். கார் டிரைவரான இவர் தனது உறவினரான வீரபாண்டி அருகே உள்ள முத்துதேவன்பட்டி சேர்ந்த முருகன் என்பவர் மகனிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய முருகன் கருப்பையா கேட்ட 2,25,000 ரூபாயை கொடுத்துள்ளார். இதனையடுத்து கருப்பையா அவரது கூட்டாளியான சென்னையை சேர்ந்த செண்பககிரி […]
போலி ரசீது சீட்டு தயார் செய்து 12 லட்சம் ரூபாய் மோசடி செய்தது குறித்து 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பாரதியார் நகரில் கௌதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் நெல்லிகுத்தி தெருவிலும், காமயகவுண்டன்பட்டியிலும் அடகு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த இரண்டு கடையின் கணக்கு வழக்குகளை கார்த்திகா என்று பெண் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் உரிமையாளர் கவுதம் திடீரென கடையின் […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த அதிமுக பிரமுகர் மற்றும் அவரது சகோதரி ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஓடப்பள்ளி கிராமத்தில் கல்யாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் நூலகராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கல்யாணி தனது சகோதரரான ஓடப்பள்ளி அதிமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் உடன் இணைந்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் கேட்டுள்ளனர். இதனை […]
போலி குறுந்தகவல் அனுப்பி பி.எஸ்.என்.எல் அதிகாரியின் வங்கியில் இருந்து நுதன முறையில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஏஞ்சலோ நகரில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாத்யூ தனது செல்போனை பார்த்து கொண்டிருந்தபோது வங்கியின் பெயரில் ஒரு போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் உங்கள் வங்கி கணக்கு காலாவதியாக போவதாகவும், அதனை புதுப்பிக்குமாறும் இருந்துள்ளது. இதனையடுத்து வங்கியில் இருந்து வந்துள்ளதாக […]
மாதசீட்டு என்று கூறி பலரிடம் இருந்து பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய நபர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானபட்டியில் வசித்து வரும் காஜா என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் மாதசீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சீட்டுத்தொகையில் பணம் செலுத்தினால் சீட்டு காலம் முடிந்ததும் சமந்தபட்டவர்களுக்கு வீட்டுமனை வழங்கப்படும் என கூறியுள்ளார். இதனை நம்பிய பலரும் சீட்டில் பணம் செலுத்தி வந்துள்ளனர். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த […]
வேலை வாங்கி தருவதாகக்கூறி பணத்தை மோசடி செய்த இளைஞனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் என்மனங்கொண்டான் பகுதியில் வெங்கட்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி ஊரிலேயே வேலை தேடியுள்ளார். ஆனால் ஊரிலேயே வேலை கிடைக்காததால் வெங்கட்குமார் இணையத்தில் வேலைவாய்ப்புகளை தேடியுள்ளார். அப்போது வெளிநாட்டில் பிரபல இணைய வியாபார நிறுவனத்தில் வேலை இருப்பதற்க்கான அறிவிப்பை பார்த்த வெங்கட் உடனடியாக அதில் […]
ஆயுள் காப்பிட்டு தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் செல்போனில் பேசி வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஏமாற்றிய மர்ம பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள போடிமெட்டு சாலையில் ரஞ்சிதம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கந்தசாமி கடந்த சில வருடத்திற்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ரஞ்சிதம் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் […]
தேனி மாவட்டத்தில் ஏ.டி.எம் மையத்திற்கு வந்த விவசாயியின் பணத்தை மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள மஞ்சளாறு பகுதியில் முருகேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்காக தேவதானப்பட்டியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த இளைஞர் ஒருவரை அழைத்து 14,000 ரூபாயை எடுத்துக் கொடுக்கும்படி கூறியுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் 10,000 […]
இணைய மோசடியில் பணம் பறி போவதை தடுப்பதற்காக தேசிய உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் இயங்கி வருகின்றது. ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புகளுடன் இந்த உதவியின் செயல்படுகின்றது. தற்போது 7 மாநிலங்கள் இதை அமல்படுத்தி வருகின்றன என்றும் மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் படி இணைய மோசடிகளால் பணம் பறிபோவதை தடுக்க […]
ஹாங்காங்கில் பிரபல கோடீஸ்வரியை அமலாக்க துறை அதிகாரி போல பேசி கோடி கணக்கில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் ஹாங்காங்கை சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரி ஆன 90 வயதான பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தன்னை ஒரு அமலாக்கத் துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். இதன்பின் சீனாவின் கடுமையான கிரிமினல் வழக்கில் உங்கள் அடையாளம் இருப்பதாகவும், உங்களிடம் […]
தேனி மாவட்டத்தில் ஆசிரியரின் மனைவிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஆசிரியர் பயிற்றுனரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி சஞ்சய்காந்தி தெருவில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். கோடாங்கிபட்டியில் வசித்து வரும் சுந்தர் என்பவரும், கருப்பசாமியும் நண்பர்கள். சுந்தர் ஆசிரியர் பயிற்றுனராக வட்டார வளமையத்தில் வேலை பார்க்கிறார். இவர்கள் நண்பர்கள் என்பதால் அதன் அடிப்படையில் […]
சென்னையை சேர்ந்த 40 வயது பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அவரிடமிருந்து 10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 13 வயதில் ஒரு குழந்தை உள்ளது. மேலும் தன் கணவரை சமீபத்தில் தான் விவாகரத்து செய்துள்ளார். திருமண மையத்தில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் இந்த […]
இந்திய பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடித்த நபர் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த 33 வயதான பெண் தனக்கு வரம் தேடி மேட்ரிமோனியில் மாப்பிள்ளையை தேடி உள்ளார். இதில் பிரிட்டன் நாட்டில் உள்ள பெரிய மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறேன் என்று ஒருவர் அந்த பெண்ணிடம் கூறியிருக்கிறார். இதை நம்பி அந்த பெண்ணும் அவரை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தொலைபேசியில் மிக நெருக்கமாக இருவரும் […]
கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் அதிகாரி குழுவினர் விசாரணை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் போலி நபர்களை சேர்த்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் ஏற்கனவே இந்த முறைகேடுகளில் உள்ள அதிகாரிகளை குழுவின் விசாரணை அதிகாரியாக சேர்த்தால் விசாரணை பயனற்றுப் போகும் என மனித பாதுகாப்பு கழகம் குற்றம் சாட்டியுள்ளது. நாகர்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதன் மாநில தலைவர் திரு ஜெயமோகன், கிசான் முறைகேட்டில் நில பயனீட்டாளர்கள் […]