பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பத்தாவது தவணையில் 4,000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .பி ரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தவணைக்கும் 2000 ரூபாய் என்ற கணக்கில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 9 தவணைகளில் விவசாயிகளுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 25ஆம் தேதிக்குள் […]
Tag: பணம்
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கிலும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நோக்கிலும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் ஒன்பது தவணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில் பத்தாவது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வர உள்ளது. டிசம்பர் 15ஆம் தேதிக்கு […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில், ஏராளமானோர் தொற்று காரணமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ரூபாய் 50,000 இழப்பீடு தொகையாக பெற விண்ணப்பிக்கலாம் […]
ஒருவருடைய ஆதார் நம்பரை வைத்து அவருக்கு பணம் அனுப்பலாம். அது எப்படி என்பதை இதில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் பெரும்பாலானோர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் போன்கள் மூலமாக இருந்த இடத்தில் இருந்தே ஷாப்பிங் செய்வது ரீசார்ஜ் செய்வது போன்றவற்றை எளிதில் செய்ய முடிகின்றது. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு கேஷ் பேக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைப்பதால் பெரும்பாலானோர் இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆதார் நம்பரை வைத்து இனி நம்மால் பணம் அனுப்ப […]
பிரேசில் கால்பந்து வீரர் கேப்ரியலிடம் மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் அர்சனெல் கிளப் அணிக்காக விளையாடும் பிரேசில் கால்பந்து வீரர் கேப்ரியல் கடந்த ஆகஸ்ட் மாதம் நண்பருடன் காரில் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் கேப்ரியலை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரிடம் இருந்த பணம், செல்போன், கைக்கடிகாரம் போன்றவற்றை பறித்துள்ளனர். அப்போது தற்காப்புக்கு தாக்குதலில் ஈடுபட்ட கேப்ரியலை, பேஸ்பால் விளையாட்டு மட்டையால் கொள்ளையர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனையடுத்து […]
வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பம்பாடியில் சின்னமுத்து மனைவி சசிகலா வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகலா வீட்டை அடைத்துவிட்டு உறவினர் வீட்டு திருமணத்திற்காக சேலம் சென்றார். இதனையடுத்து கடந்த 27-ஆம் தேதி சசிகலா மீண்டும் தன் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன்பின் சசிகலா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த மோதிரம், […]
வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழ சித்தர்காடு பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் மாரியம்மன் கோவில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பிரபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி திடீரென அவரது செல்போன் மற்றும் 300 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து […]
திமுக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இடம் பெறாததால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுப் பொருள்களில் பணத்தை சேர்க்காமல் விட்டுவிட்டது விடியா அரசு என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். தமிழக அரசு நேற்று முன்தினம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை அறிவித்தது. அதில் மொத்தம் 20 பொருள்கள் இடம்பெற்றிருந்தது. அதாவது பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பாசி பருப்பு, ஏலக்காய், நெய், […]
தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக அண்ணன்-தம்பிகள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள நெத்திமேடு கே.பி.கரடு வடபுறம், வக்கீல் செட்டியார் தோட்டம் பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மூர்த்தி என்ற மகன் இருந்தார். இவர் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பட்டறையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மூர்த்திக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர் ஜெகதீஸ் என்பவருக்கும் இடையில் தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்கள் […]
பணத்துக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கெழுவத்தூர் மூளைக்கால் தெருவில் கேசவமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு நாகம்மாள் (வயது 60) என்ற மனைவி இருந்தார். இதில் கேசவமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் நாகம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நாகம்மாள் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து நாகம்மாளின் அண்ணன் மகன் சிவசாகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் […]
ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி மையப்பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்குள் கடந்த மாதம் 17-ஆம் தேதி முகமூடி அணிந்த மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அவர்கள் வெல்டிங் மிஷின் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவ்வழியே பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் கொள்ளையர்கள் பாதியிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று […]
ரோட்டில் கண்டெடுத்த 50 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் வாலிபர் ஒருவர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வி.வி.சி.ஆர்.நகரில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு நந்தகுமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் திண்டல் முருகன் கோவிலில் வாகன நிறுத்துமிடத்தில் டோக்கன் விநியோகம் செய்யும் பணி செய்து வருகிறார். இதில் நந்தகுமார் பொன் வீதியிலே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே கிடந்ததை நந்தகுமார் பார்த்தார். […]
ஓட்டலில் நுழைந்து தொழிலாளி பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் நான்கு ரோட்டில் ஒரு ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் தீபாவளியன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து அங்கு இருந்த 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றார். இதனையடுத்து ஓட்டல் உரிமையாளர் கடைக்கு வந்தபோது பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஓட்டல் […]
ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேப்பத்தூர் மெயின் ரோட்டில் பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் ஏ.டி.எம் இயங்கி வருகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் அறைக்குள் புகுந்து தான் கொண்டுவந்த கடப்பாரையால் எந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டிவி கேமரா மூலமாக […]
நிலம் விற்பதாக கூறி தொழிலதிபரிடம் பணம் மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடச்சூர் பாலமுருகன் நகரில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நூற்பாலை வைத்து நடத்தி வருகின்றார். இவரிடம் கோபி நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த 2 பேர் தங்களிடம் லக்கம்பட்டியில் ஒரு ஏக்கர் 15 சென்ட் நிலம் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் நல்ல கவுண்டம்பாளையத்தில் ஒரு நிறுவனம் இருப்பதாகவும், அதை விற்பனை செய்ய உள்ளதாக மகேஸ்வரனிடம் அவர்கள் […]
கடைக்குள் புகுந்து மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் பாஷா என்பவர் வசித்து வருகின்றார். இவர் காவல் நிலையம் முன்பு பிஸ்கட், மிட்டாய் கடை வைத்துள்ளார். இந்நிலையில் தனது மகனை கடையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு பாஷா வீட்டிற்கு சென்றார். அப்போது கடைக்குள் புகுந்த மர்ம நபர் பிஸ்கட் வாங்குவது போல் நடித்து அங்கு இருந்த சிறுவனை ஏமாற்றி கல்லாவில் இருந்த 8 […]
தற்போது மக்களை ஏமாற்றி பலவித நூதன மோசடிகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து 7010424309 என்ற எண்ணிற்கு Google pay மூலம் குடிநீர் வரிகளைச் செலுத்த சொல்வதாக தரும் குறுஞ்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாரிடமும் கூகுள் பே மூலம் வரி செலுத்த சொல்லவில்லை. எனவே பொதுமக்கள் போலியான அவர்களிடம் ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் […]
தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கீழவீதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியாவுக்கு புகார் வந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியா தனிப்படை காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி சிறப்பு தனிப்படை காவல்துறையினர் தனியார் தங்கும் விடுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 13 பேர் கொண்ட கும்பல் […]
கனேடிய தம்பதியினர் நாட்டின் வன பாதுகாப்பிற்காக $1 மில்லியன் பணத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Nature Conservancy of Canada என்ற கனடா நாட்டின் மிக முக்கிய நிலங்கள், நீர் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க உதவும் இலாப நோக்கமற்ற அமைப்பிற்கு $1 மில்லியன் பணத்தினை மேற்கு வான்கூவரையில் வசித்து வரும் ஆல் கோலிங்ஸ்-ஹிலாரி ஸ்டீவன்ஸ் என்ற தம்பதியினர் வழங்கியுள்ளனர். இது இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 16 கோடி ரூபாய் ஆகும். இந்த பணம் பிரிட்டீஷ் கொலம்பியா […]
கணவருக்கு மறதிநோய் உள்ளதாக அவரை நம்ப வைத்து கோடிக்கணக்கில் பணத்தை திருடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் East Haven பகுதியில் மரினோ என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 20 வருடங்களாக கணவரின் பணத்தை மோசடி செய்து வந்திருக்கிறார். அதன்படி மரினோ தன் கணவரின் வங்கி கணக்கை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்தபடி அவரின் கையெழுத்தை போட்டு 20 வருடங்களில் $600,000 (கிட்டத்தட்ட ரூ 12 கோடிகள்) அளவில் மோசடி செய்திருக்கிறார். இதனை சமீபத்தில்தான் […]
மனைவியை நண்பனின் காதலியாக நடிக்க வைத்து 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகின்றார். இவர் வாடகை கார்கள் வைத்து தொழில் நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணம் முடித்து வைக்க அவரதுபெற்றோர் பெண் தேடி வந்தனர். இவர்களில் பாலாஜியின் நண்பராக ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் இருக்கின்றார். இவர் கார் டிரைவராக இருக்கின்றார். இதில் ராஜாவிற்கு நித்யா என்ற […]
டாஸ்மாக் ஊழியரிடம் பணத்தை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தம்பாடி ஜீவா செட் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கிரே நகர் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் வேலை முடிந்தவுடன் மதுபான கடையை பூட்டி விட்டு வசூலான பணத்தோடு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பெரிய வீரசங்கிலி அருகில் ஒரு கோழிப் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூலமாக இலவச சீருடை, புத்தகம், காலணிகள் உள்ளவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை, காலணிகள், புத்தகப் பைகள், சுவெட்டர் ஆகியவை இனி பள்ளிகளில் வழங்கப்படாது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த பொருட்களை […]
எண்ணெய் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை-விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சரளையில் உணவு விடுதி, மளிகை கடைகள், பேக்கரி கடைகள், ஆட்டோ பழுது பார்க்கும் கடைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆட்டி, விற்பனை செய்யும் கடைகள் என பெரும்பாலானவை இயங்கி வருகிறது. இந்நிலையில் சரளையில் உள்ள கடைகளை திறப்பதற்காக அதன் உரிமையாளர்கள் வந்துள்ளனர். அப்போது செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் கடையின் […]
பேருந்தில் பெண் தவறவிட்ட பணத்தை 10 நிமிடத்தில் கண்டுபிடித்த சட்ட ஒழுங்கு காவலர் மற்றும் போக்குவரத்து காவலர்களை போலீசார் பாராட்டினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருளாண்டி-சீனியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சீனியம்மாள் 40 ஆயிரம் ரூபாயை ஒரு துணிப்பையில் வைத்துக் கொண்டு கமுதியில் இருந்து மதுரைக்கு தனியார் பேருந்தில் வந்தார். அந்த பேருந்தில் அதிகமாக கூட்டம் இருந்தது. இதனையடுத்து சீனியம்மாள் மதுரை அவனியாபுரத்தை அடுத்துள்ள மண்டேலா நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது சீனியம்மாள் […]
ஆஸ்திரேலியாவில் மோசடியில் ஈடுபட்ட பெண் காவல்துறையினரிடம் தப்பிக்க தனது கால்களை வெட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பல பேரிடம் மோசடி செய்து அவர்களின் பணத்தை பறித்துச் சென்ற மெலிசா கேடிக் எனும் பெண் கடந்த வருடம் நவம்பர் மாதம் 12-ஆம் தேதி நியூ சவுத் வேல்ஸில் உள்ள தனது வீட்டில் இருந்து காணாமல் போனார். இதில் மெலிசா கேடிக் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருக்கிறது. அதாவது மெலிசா கேடிக் பல பேரிடம் தொழில் […]
ஆன்லைன் விளையாட்டின் மூலம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அற்புதாபுரத்தில் ஜெரால்டு என்பவர் வசித்து வருகின்றார். இவர் என்ஜினீயராக இருக்கின்றார். இவருடைய செல்போனுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது வீட்டில் இருந்து பகுதி நேரமாக பணியாற்றி வருவாய் பெறலாம் என தகவல் வந்தது. அந்த தகவலை ஜெரால்டு பார்த்தபோது ஒரு தொடர்பு வாட்ஸ்-அப் எண்ணிற்கு சென்றது. இதனையடுத்து தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றது. அப்போது […]
முதியவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பத்தூர் பகுதியில் முதியவர் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொரடாச்சேரி கடை வீதியிலுள்ள ஒரு தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் ஹரிஹரனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் கொடுக்க மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் ஹரிஹரனிடம் இருந்த 200 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து […]
மருந்து வாங்கச் சென்ற முதியவரிடம் போலி 2 ஆயிரத்தை கொடுத்து மர்ம நபர் ஏமாற்றி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியில் முதியவர் சித்தன் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக இருக்கின்றார். இவர் தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் முதியவர் சித்தன் தன் வீட்டு அருகில் உள்ள மருந்தகம் கடைக்கு சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் அவரிடம் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து சில்லரை கேட்டுள்ளார். இதன் […]
போலீஸ் சி.ஐ.டி. என்று கூறி பணம் கேட்டு மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டவுன் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பாக்யராஜ் பணிபுரிந்து வருகிறார். இவர் ராஜகோபால் பூங்கா அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாக்யராஜை வழிமறித்த ஒரு நபர் நான் போலீஸ் சி.ஐ.டி. என்று கூறி அவரிடம் 200 ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பாக்யராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு காவல் அதிகாரி உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்து […]
ஜவுளி நிறுவனத்தில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநகர் காலனி பகுதியில் முகேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணி வியாபாரியாக இருக்கின்றார். இவருடைய நிறுவனத்தின் அலுவலகமும், ஜவுளி குடோனும் காலனி அகில் மேடு 3-வது வீதியில் இருக்கிறது. இதனையடுத்து வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு அலுவலகம் மற்றும் குடோனை தொழிலாளர்கள் அடைத்து சென்றனர். இந்நிலையில் மறுநாள் காலையில் தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு வந்தபோது குடோனின் பின்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை […]
பேஸ்புக் மூலமாக பண மோசடியில் ஈடுபட்டவர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரங்காபுரம் கிராமத்தில் கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலமாக ஜூலி பேட்ரிக் என்ற இளம்பெண் நண்பர் ஆகினார். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண், கிறிஸ்துதாசிடம் உனக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்த பார்சலில் ஐபோன், தங்ககாசு, […]
கந்துவட்டி வசூலிப்பதாக 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோரம்பள்ளத்தில் திருமணி-மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மல்லிகா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, கோரம்பள்ளம், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 4 நிதிநிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சிலரிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். இதற்கு உரிய வட்டியை மல்லிகா செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நிதிநிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மல்லிகா மொத்தம் […]
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் கீழே தெருவில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக இருக்கின்றார். இவர் முகநூலில் சரோன் மோர்கன் என்பவருடன் நண்பராக பழகி வந்தார். இதில் மோர்கன் இங்கிலாந்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜீவா வேலை இல்லாமல் இருப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் மோர்கன், ஜீவாவுக்கு இங்கிலாந்தில் வேலை வாங்கி தருவதாக ஆறுதல் வார்த்தைகளை […]
வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி 23 நபர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சூளை ஈ.பி.பி நகரில் தேவராஜன்-லதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் லதா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் இருப்பதாவது நரிபள்ளம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் நான் பணி செய்து வருகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு சொந்தமாக வீடு கட்டுவதற்காக இடம் தேடிக்கொண்டு இருக்கும்போது ஸ்டார் […]
பெட்ரோல் பங்கில் பணத்தை திருடிச் சென்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பிச்சாண்டாம்பாளையத்தை கிருஷ்ணகுமார் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றார். இதில் கோவையைச் சேர்ந்த குணசேகர் என்பவர் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பவானி பழைய காடையம்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவர் கடந்த 20-ஆம் தேதி பெட்ரோல் பங்கில் தொழிலாளியாக பணிக்கு சேர்ந்தார். இதனையடுத்து கடந்த 2-ஆம் தேதி காசாளர் குணசேகர், வடிவேலிடம் பண பெட்டியை பார்த்துக்கொள் என்று கழிப்பறைக்கு சென்றுவிட்டார். அதன்பின் […]
பெண்ணிடம் பணப்பையை பறித்து சென்ற திருடனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தனம்பாளையம் பகுதியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் தனது நிலத்தை பத்திர பதிவு செய்வதற்காக நெருப்பெரிச்சலில் உள்ள அலுவலகத்திற்கு 11 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை பையில் எடுத்துக்கொண்டு அவரது மனைவி தேன்மொழியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய முடியாததால் கணவன்-மனைவி இருவரும் அங்கிருந்து […]
வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி ஜங்கமசமுத்திரம் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். நரிப்பாடி பகுதியில் தினேஷ்குமார் மற்றும் செல்வம் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் இருப்பதாவது படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த எங்களுக்கு ஆத்தூர் கோட்டில் கணினி ஆபரேட்டர் பணி வாங்கி […]
விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்து பணத்தை பறித்துச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் அருந்ததியர் காலனியில் பொன்தங்கமாரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இந்நிலையில் பொன்தங்கமாரி புதுப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொன்தங்கமாரியை 3 வாலிபர்கள் வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்ததோடு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
பேராசிரியரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் காலனி பகுதியில் இளவரசன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனை கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போன் எண்ணிற்கு கடந்த 2-ஆம் தேதி ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. இதனால் இளவரசன் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். இதனையடுத்து இளவரசனின் […]
சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 21 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கெட்டவாடி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராசப்பன், தனிப்பிரிவு காவலர் ராஜா மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு தோட்டத்து வீட்டில் வைத்து சூதாட்டம் நடைபெறுவது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது […]
மோசடி செய்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் ஈரோடு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகின்றார். இவர் நிலங்களை வீட்டு மனைகளாக பிரித்து மாதத் தவணையில் விற்பதாக விளம்பரம் செய்திருந்தார். இதனால் நாங்கள் சிறுக […]
ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்கள் பிடியில் உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் தங்களுடைய உயிருக்கு பயந்து அங்குள்ள மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அதேபோன்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களோடு சிறப்பு விமானம் மூலம் தலைமறைவாகி ஓடிவிட்டார் என்று தகவல் வெளியானது. பணம் நிரப்பப்பட்ட 4 கார்கள் மற்றும் ஹெலிகாப்டரோடு அஷ்ரப் கனி தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையில் […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
ஏடிஎம்களில் குறைந்தபட்ச பணம் இருப்பு இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் ஏடிஎம்மில் 10 மணி நேரம் பணம் இல்லாமல் இருந்தால் அந்த வங்கிக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் அதிரடியாக தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றது. ஏடிஎம்களில் பணம் இல்லை என அடிக்கடி வரும் புகாரை தொடர்ந்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் […]
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை 8 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் 9வது தவணை ஆகஸ்ட் 9 ஆம் தேதி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கிசான் திட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் […]
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. சம்பளம், பென்ஷன் உள்ளிட்ட அனைத்தும் வங்கிகள் செயல்படும் தினங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் சம்பளம், பென்ஷன், இஎம்ஐ கட்டணம் போன்றவை வராது. இந்நிலையில் இந்த முறையானது தற்போது மாற்றப்பட்டு இன்று முதல் ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட எல்லா நாட்களிலும் சம்பளம் பென்ஷன் வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம், பென்ஷன் அனைத்தும் NACH […]
மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் இரு மடங்கு லாபம் தரும் அரசின் அருமையான திட்டத்தை பற்றி இதில் பார்ப்போம். இன்றைய காலத்தில் மக்கள் பரபரப்பான வாழ்க்கையை எப்போதும் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களது உடல்களை பற்றிய ஒரு சிறிதும் கவலை இல்லாமல் இருந்து வருகின்றனர். தொழில், பணி ஆகியவை நிரந்தரம் அற்றதாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் மருத்துவமனைக்கு கூட்டம் கூட்டமாக சிகிச்சைக்கு சென்று வருகின்றனர். இதுபோன்ற சூழலில் நமக்கு கைகொடுப்பது சேமிப்பு […]
வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அண்மையில் வெளியான நிலையில், அதனை எப்படி அனுப்புவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், புதிதாக பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் […]