பொது கலந்தாய்வு மூலம் 320 காவல்துறையினருக்கு பணியிட மாறுதல் முகாம் போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவல்துறையினருக்கு பொது பணியிட மாறுதல் வருடம் தோறும் வழங்கப்படும். இதில் மூன்று வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு வழங்குவார். இதற்குமுன் காவல்துறையினரிடமிருந்து அவர் செல்ல விரும்பும் காவல் நிலையங்கள் குறித்த விவரம் விண்ணப்பத்துடன் […]
Tag: பணியிட மாறுதல்
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று காரணமாக பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இது தொடர்பாக நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் […]
பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு வருடங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கட்டாய இடமாறுதல் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், வட்டார கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவதால் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டு வருவதை தடுக்கும் விதமாக கலந்தாய்வில் மாறுதல் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள பொன்மலை பகுதி மக்களிடம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை மனுக்களை பெற்றார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்த விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும். அதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் சிறுபான்மையான பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்த நிலுவையில் உள்ள வழக்குகள் அதற்கு முடிவு எடுக்க முடியவில்லை. […]
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பணியிட மாறுதல்களில் குழப்பங்கள் நடந்ததாக கூறப்படுகின்றன. இதனிடையே கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பரவல் கலந்தாய்வு நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் பணியிட மாறுதல் சீனியாரிட்டி முறைப்படி கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். மேலும் சீனியாரிட்டி அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு […]