தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வுகள் நடத்திக் கொண்டிருக்கிறது. மேலும் காலி பணியிடங்கள் குறித்த விவரம் கடந்த 2019 ஆம் வருடம் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் கொரோனா பரவல் காரணமாக தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையே கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து கடந்த 2021 டிசம்பர் மாதம் தேர்வுகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அடுத்து தேர்வு எழுதிய மதுரையை […]
Tag: பணி நியமனம்
தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுக்கலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்காக தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் மொத்தம் ஒரு […]
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் கயல்விழி, பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றால் வழங்கப்படும் சான்றிதழ் தற்போது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 7 வருடங்கள் மட்டுமே அந்த சான்றிதழ் செல்லுபடியாகும். கடந்த மாதம் கணினி பயிற்றுனர், […]
ரேஷன் கடைகளில் எடையாளர், பணியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் 33,000 ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் எடை யாளர்கள் என மொத்தம் 25,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதாவது ஒரு கடைக்கு ஒரு பணியாளர் கூட இல்லாத அளவுக்கு ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன்விளைவாக ஒரே நபர் 2,3 கடைகளை கூடுதலாக கவனிக்க வேண்டிய நிலை நீடித்து வந்ததால் பணிச்சுமை ஊழியர்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். […]
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதேபோல் உயர்கல்வியை மாநிலம் முழுவதும் பரவலாக்குவதற்காக தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை என்பது தொடங்கப்பட்டுள்ளது. இந்த உயர்கல்வித்துறை சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு சட்டங்கள், கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை அடிப்படை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இந்த நிலையில் மாநில உயர்கல்வித்துறை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் […]
திருமணம் செய்ய நினைக்கும் பெண்களுக்கும், குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்களுக்கும் வேட்டு வைக்கும் அதிர்ச்சி அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. அதாவது 3 மாத கர்ப்பமாக உள்ள பெண்கள் பணி நியமனத்துக்கு தற்காலிகமாக தகுதியற்றவர்கள். எனவே அவர்கள் பிரசவத்திற்கு பின் 4 மாதம் கழித்து பணியில் சேர அனுமதிக்கப்படுவர் என எஸ்பிஐ வங்கி அறிவித்தது. ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை. அதோடு மட்டுமில்லாமல் எஸ்பிஐ-யின் இந்த அறிவிப்பானது பெண்களின் உரிமையை பறிக்கும் வகையில் […]
பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், சட்டபூர்வமான வாரியங்கள் போன்றவற்றிற்கு அந்தந்த துறையின் மூலமாகவே இதுவரை நேரடியாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இதனை தொடர்ந்து தமிழக பொதுத்துறை நிறுவனங்கள் கழகங்களுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை Grade 1 பணிகளுக்கான புதிய அறிவிப்புகளை அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்:பிப்ரவரி 21. இதில் SC/ST, BC, MBC பிரிவினர் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு: ஏப்ரல் […]
கல்வி ஆண்டின் மத்தியில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சில ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் மத்தியில் பணி நிறைவு பெறுவார்கள். இந்நிலையில் பணிநிறைவு பெறுபவர்களுக்கு மறு நியமனம் கோரி ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இதனை தமிழக அரசு நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி குறிப்பிட்ட கல்வி ஆண்டு முடியும் […]
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மோசமான நிலையிலுள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கப்படும்.அந்த பள்ளி மாணவர்கள் அருகில் இருக்கும் பள்ளிகளுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் நடைபெறாமல் இருப்பதற்கு 13 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே காரணம் என்று கூறியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த ஜோசப் இருதயராஜ் என்பவர் 1984ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்தார். அதன்பிறகு 1991இல் பட்டப்படிப்பும், 93இல் பிஎட் பட்டமும் பெற்றார். பின்னர் கோவை ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இதில்தான் சிக்கல் ஆரம்பித்தது. ஜோசப் இருதயராஜின் கல்வித்தகுதி வரிசையாக இல்லை என்று கூறி ஆசிரியர் நியமனத்தை பள்ளிக்கல்வித்துறை நிராகரித்தது. இதனை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிகளைப் பொருத்த வரையில் தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்தும் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கான மாதிரி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் பணியிட நிர்ணய மாதிரி அட்டவணை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை மாறுபட்டு […]
அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனுடன் போட்டித் தேர்வுகள் நடைபெறும் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2,207காலி பணியிடங்களுக்கான முதுநிலை ஆசிரியர் பணிக்கு போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி போட்டித் தேர்வுகள் நவம்பர் 13 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவாராக சுஹாஞ்ஜனா என்ற […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகம் முழுவதும் அடுத்த மாத இறுதிக்குள் […]
வருவாய்த்துறையில் பணியின்போது இறந்த அலுவலர், பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இரக்கத்தின்படி பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை பணியின்போது உயிரிழந்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் வாரிசுகள் 7 நபருக்கு இரக்கத்தின்படி பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து ஆலத்தூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து இறந்த ஜெய்கதிரவன் மனைவி சத்யா என்பவருக்கு குடவாசல் வட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராகவும் மற்றும் நன்னிலம் தனி தாசில்தாராக வேலை பார்த்து […]
பணி நியமன ஆணை வழங்க கோரி பேரூராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆளூர் பேரூராட்சியில் சரத், மணிகண்ட பிரபு இருவரும் தற்காலிக மின் நிலை உதவியாளராக வேலை பார்த்து வருகின்றார்கள். இந்நிலையில் ஆளூரில் கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் மீட்டர் ரீடிங் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்த ஒருவருக்கு மின் நிலை உதவியாளராக பணி நியமனம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சரத் மற்றும் மணிகண்ட பிரபு இருவரும் எங்களுக்கு […]
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த 2018ஆம் வருடம் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மூன்று இடங்களில் 41 பேர் கம்ப்யூட்டர் பழுது காரணமாக செல்போன் மூலமாக தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. எனவே இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்ததன் காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் […]
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் வருடம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதி தேர்வு போட்டி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் ஆறு வருடங்களுக்கு மேலாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர் […]
இரண்டு ஆண்டுகள் பிஎஸ்சி கணிதம், மூன்றாம் ஆண்டு பி.ஏ வரலாறு படித்தவர்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனத்திற்கு தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு பட்டம் பெறுவதற்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளதா ? பல்கலைக்கழகம் வியாபார நோக்கில் செயல்படக் கூடாது எனக்கூறி ஆசிரியர் பணி நியமனம் வழங்கிய தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கும் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர் கொரோனா சிகிச்சைக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சை அளிக்க 1,536 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு 80 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் தேவைக்கேற்ப சென்னைக்கு அதிக அளவில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்தம் அடிப்படையில் 2,570 செவிலியர்கள் அடுத்த 6 மாத காலம் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆவர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு […]