கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் மாதம் ரூ. 14,000 ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பனி நீட்டிப்பு வழங்கப்படாது (இன்று முதல் வேலைக்கு வர வேண்டாம்) என தெரிவித்துள்ளது.
Tag: பணி நீட்டிப்பு
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மட்டும் 10,331 இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் எப்போதும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் தான் நிரப்பப்படும். ஆனால் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக பணியிடங்களை நிரப்ப கால தாமதமாகும் என்பதால் தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பணியிடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி […]
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு செய்து கல்வித்துறை அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டித்து அரசாணை வெளியாகியுள்ளது. ஜூன் ஜூலை மாதங்களில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், விருப்ப இடமாறுதல், பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங், மூன்று மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டது. அதன்படி, மூவாயிரம் ஆசிரியர்கள் கூடுதல் இடங்களில் பதவியேற்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் நிறுத்தப்பட்டிருந்தது. அரசாணை இல்லாமல், புதிய இடங்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் […]
தமிழகத்தில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கூடுதலாக 3000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்கிடவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2011-12ம் ஆண்டில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 3,296 ஆசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டித்து […]
தரம் உயர்த்தப்பட்ட 19 உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்களுக்கு 2023 வரை பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 19 உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்களுக்கு 2023 வரை பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2016 – 17 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் 19 நடுநிலைப்பள்ளிகளை அரசு உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரம் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பெருபாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு […]