செஞ்சி பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கபடுவதால் பேரூராட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையத்தில் போதிய வசதி இல்லை என்பதால் அதனை சரிசெய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 6 கோடியே 74 லட்சம் மதிப்பில் நவீன பேருந்து நிலையமாக மாற்ற டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதில் இடது பக்கம் உள்ள பழைய […]
Tag: பணி
அரசுப்பணி வாங்கி தருவதாக கூறி மயிலாடுதுறை தம்பதியரிடம் 8, 50,000 ரூபாய் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மேல் ஒத்த சரக தெருவைச் சேர்ந்த தம்பதியர் விஜயகுமார், வெற்றிச்செல்வி. இவர்களின் வீட்டின் மாடியில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தன் ஜீவன் வங்கியில் வேலை செய்து வருவதாகவும், பணி மாறுதலுக்காக மயிலாடுதுறைக்கு வந்துள்ளதாகவும் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி குடியேறி இருக்கிறார். அதன் […]
தேர்தல் பணியில் ஈடுபடாத அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வரும் 10 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு சிறப்பு ஊதியமும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் […]
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மக்கள் நலப்பணியாளர்களாக 13,500 பேர் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றிய அதிமுக அரசு அந்த 13,500 பேரையும் பணிநீக்கம் செய்தது. இது மக்கள் பணியாளர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவ்வாறு தொடரப்பட்ட […]
நாடு முழுவதும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு ஸ்புட்னிக் v தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மத்தியில் நாடு முழுவதும் 12 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஸ்புட்னிக் வி மருந்து செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த தடுப்பு மருந்து டீன் ஏஜ் பருவத்தினருக்காக தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் […]
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் 27,000 பணியாளர்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறும் என்று […]
அரசு ஊழியர்கள் முழுமையாக பணிக்கு வருவதற்கு புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜனவரி 31ஆம் தேதி வரை 5 சதவீதம் பேர் மட்டுமே வரவேண்டும் என்றும் அரசு […]
அரவிந்த் கெஜ்ரிவால் வீடு வீடாகச் சென்று பிரசார பணிகளை தொடங்க கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 690 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.உத்தரபிரதேசத்துக்கு 7 கட்ட தேர்தல், மணிப்பூர் தேர்தல் 2 கட்டம், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றுக்கு ஒரே கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ந்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தலை […]
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Head Constable காலி பணியிடங்கள்:249 சம்பளம்: 25,000 – 81,000 கல்வித்தகுதி:12th வயது:18-23 தேர்வு: Documentation, Physical, Trial Test, Proficiency Test விண்ணப்ப கட்டணம்: 100 விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.3.2022 மேலும் விவரங்களுக்கு cisf.gov.in இதனை கிளிக் செய்யவும்.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் பிரதமர் மோடியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சில் வெளிப்புற மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சீனாவுக்கான இந்திய தூதர் ஆக 3 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு முக்கிய பொறுப்புக்களில் […]
சென்னையில் நாளை முதல் 5 நாட்களுக்கு மெகா தூய்மைப் பணி நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக குப்பைகள், கழிவுகள் போன்றவை பல பகுதிகளில் தேங்கியுள்ளது. இவற்றை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றது. மேலும் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்பதற்காக நாளை முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை தூய்மைப் பணி நடைபெற உள்ளது. இந்த தூய்மை பணியில் மாநகராட்சிக்குட்பட்ட […]
டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணி செய்யும்படி அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் கடந்த ஆண்டு முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரியும் படி அறிவித்திருந்தது. இன்போசிஸ், டிசிஎஸ், ஹெ.சி.எல் உள்ளிட்ட அனைத்து ஐடி நிறுவன ஊழியர்களும் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வந்தனர். கடந்த ஆண்டு தொடங்கிய பணி தற்போது வரை நீண்டு வருகின்றது. தற்போது கொரோனா […]
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தேர்வு தொடர்பான பணிகளை மேற்கொள்ள அரசு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனர் சி. பூரணசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஆர்பி தேர்வுக்கான பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் சில கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்களை விட மறுப்பு தெரிவித்தனர். இதனால் தேர்வு வாரியத்திற்கான பணிகள் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிஆர்பி […]
2 இடங்களில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி ஒரு மாத காலத்தில் நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் ரோட்டை கடந்து செல்வதற்கு அவதிப்படுகின்றனர். இதனால் நிரந்தர தீர்வு காணும் வகையில் பொதுமக்கள் சாலையை கடந்து செல்லும் வகையில் நடைமேம்பாலம் அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நகர்புற பகுதி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் பணிகள் மேற்கொள்வதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு […]
ஆப்கானிஸ்தானில் இளம்பெண்கள் இருவர் பணிக்கு சென்றபோது தலிபான்கள் அந்த பெண்களை திருப்பியனுப்பியது மட்டுமன்றி, அவர்களை வருத்தமடைய செய்ததாக வீடியோ வெளியாகியுள்ளது. தலிபான்கள், காபூல் நகரை கைப்பற்றி நாடு முழுவதையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள். அதன்பின்பு நாட்டு பெண்களின் உரிமைகளை மதிப்போம் என்று தெரிவித்திருந்தனர். எனினும் அவர்களின் செயல்பாடுகள் அதற்கு எதிர்மறையாகவே உள்ளது. அதாவது, இளம்பெண்கள் இருவர் வேலைக்கு சென்ற போது தலிபான்களால் ஏற்பட்ட நிலையை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது, நாங்கள் ஜனாதிபதி மாளிகைக்கு […]
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திமுக எம்.பி.கனிமொழி கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் களில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை. புதுக்கோட்டை […]
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் அரசு பணியில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைதொடர்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துறை அதிகாரிகள், துறை உதவி அதிகாரிகள் தகுதிக்கு ஏற்ப காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடம் அல்லது திட்ட முடியும் வரை பணியாற்றலாம். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரங்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. […]
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த படத்தின் டப்பிங்கை ரஜினிகாந்த் இன்று துவங்கியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த இந்தப் படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது. இந்த படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முழு வேகத்தில் டப்பிங் […]
அயல்நாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட தமிழக அரசு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஈபிஎஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை […]
மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி (CSIR) நிறுவனத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த மத்திய அரசு நிறுவன அறிவிப்பில் Gr. II (1) / Technician பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் இந்த மத்திய அரசுப் பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 : CSIR நிறுவனத்தில் Gr. II (1) / Technician பணிகளுக்கு என 25 பணியிடங்கள் காலியாக […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவியான கேரி சைமண்ட்ஸ் குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் வனவிலங்கு தொண்டு நிறுவனத்தில் தகவல் தொடர்பு தலைவர் பணியை தொடரப்போவதாக அறிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிற்கும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்டிற்கும் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆன நிலையில் கேரி சைமண்ட் பணி புரியும் Aspinall Foundation என்ற விலங்கு […]
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள சமூக மேம்பாட்டு நிபுணர் (எஸ்.டி.எஸ்) எனப்படும் Social Development Specialist (SDS) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாரியத்தின் பெயர் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பணியின் பெயர் : Social Development Specialist விண்ணப்பிக்கும் முறை : Offline விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.12.2020 வயது வரம்பு: 1.1.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். SDS மாத ஊதியம்: […]
நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் தொடங்கப்பட்ட இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வரும் நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பயணிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை கன்னியாகுமரி இடையே 4250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணிகளை ஆய்வு செய்த ரயில்வே கோட்ட உயரதிகாரிகள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வு செய்த போது எப்படி இருந்ததோ அதே நிலைதான் தற்போது உள்ளதாக அதிகாரிகள் […]
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்கள் சிலருக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நிரந்தரமாக்கி அதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும் வரை தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என அறிவித்தனர். இந்நிலையில் தனது பணியாளர்கள் சிலர் வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை நிரந்தரம் ஆக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கான புதிய வழிமுறைகளை அந்நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் தகவல்கள் […]
ராமேஸ்வரம் நகராட்சியில் நடைபெறும் தரமற்ற ஒப்பந்த பணியால் மக்களின் பணம் வீண்போவதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பொங்கல் பானையில் போலி பணத்தை வைத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் சுற்றுலா தலமாக இருப்பதால் மத்திய மாநில அரசுகள் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு நிதி என பல கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் ஒதுக்கி வருகின்றது. ஆனால் அந்த நிதியைகளை வைத்து நகராட்சி நிர்வாக முறையான பணிகள் எதுவும் செய்யாமல் தரமற்ற பணிகளை ஒப்பந்ததாரர்கள் மூலமாக செய்து […]
அதிகாலை முதல் நள்ளிரவு வரை வேலை பார்க்கும் ஜனாதிபதி நான்தான் என அதிபர் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப் மதிய வேளையில் தான் அலுவலகத்திற்கு செல்வதாகவும் தனது படுக்கையறையில் பிடித்தமான உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அமெரிக்கப் பத்திரிகைகளில் செய்தி ஒன்று வெளியானது. இதனைத்தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்த டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னை பற்றி தெரியாத மூன்றாம் தர நிருபர் எனது பணி மற்றும் உணவு பழக்கம் […]
காவலர் பணிக்கு தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணிகளுக்காக புதிய காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பணியில் சேருவதற்கு முன்பாக 8538 பேருக்கும் சுவாச பிரச்சினை மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்வது கட்டாயம் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பணிக்காக தமிழகத்தில் காவல்துறையால் […]
பீகார் மாநிலத்தில் இதுவரை 198 சுகாதாரத்துறை அதிகாரிகள் பணிக்கு வருவதில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிக்கு வராததின் விளக்கத்தை கேட்டு அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம் -2005 மற்றும் தொற்று நோய் சட்டம் -1897 இன் கீழ் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை விளக்கி 3 நாட்களுக்குள் பதில் சமர்ப்பிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கடமையில் இல்லாத நிலையில் காணப்பட்ட மாநிலத்தின் மற்ற 122 சுகாதார அதிகாரிகள் மீதும் பீகார் அரசு […]