தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவின் தலைமை அலுவலகத்தில் வைத்து புதுவிதமான இனிப்புகளை அறிமுகப்படுத்தினார். தமிழக மக்களிடையே ஆவின் இனிப்பு பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. கிராமப்புறங்களில் இருந்து சுமார் 4.5 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுதும் உள்ள 27 ஒன்றியங்கள் மூலம் சுகாதாரமான முறையில் பால் விநியோகம் செய்யப்படுவதுடன், 225 வகையான இனிப்பு பண்டங்களும் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் […]
Tag: பண்டிகை
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.இதனிடையே விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூ மற்றும் பழங்களின் விலை கிரு கிடுவென உயர்ந்துள்ளது.சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கடந்த 25 ஆம் தேதி முதல் சிறப்பு சந்தை திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கரும்பு ,வாழைக்கன்று, விளாம்பழம் , அருகம்புல் ,கம்பு ,சோளம், மாவிலை தோரணங்கள் மற்றும் பழவகைகள் ஆகியவை வேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு கிலோ […]
தென்னிந்தியாவின் மிகவும் பழமையான செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததாக சொல்லப்படும் நிகழ்வை கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ஈஸ்டர் பண்டிகையைமுன்னிட்டு, சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள தென்னிந்தியாவிலேயே மிகவும் பழமையான செயிண்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுள்ளது. மேலும் உலகப் புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நள்ளிரவு12 […]
தெலுங்கானா மாநில அரசு ரம்ஜான் மாதத்தையொட்டி அரசு ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கி அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரம்ஜான் பண்டிகை மற்றும் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை என வருடம்தோறும் இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் நோன்பு ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களை காட்டிலும் ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தை பொருத்தவரை […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு நாட்டின் பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் டிஏ உயர்வு கணக்கிடப்படுகிறது. இதுவரை இறுதியாக மத்திய அரசு ஊழியர்கள் 7 சதவீதம் டிஏ பெற்று வருகிறார்கள். தற்போது 2022 ஜனவரி 1 ஆம் தேதிக்கான டிஏ இன்னும் அரசால் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் AICPI கணக்கீட்டின் படி 3 […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2022 ஜனவரி 12-ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு நெல்லைக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 13-ஆம் தேதி நெல்லையில் இருந்து இரவு 9.30 மணிக்கு தாம்பரத்திற்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும், ஜனவரி 13 சென்னை எழும்பூரில் இருந்து […]
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டது. 20 நாட்களில் 200 நபர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. அதிகபட்சமாக மகராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் தலா 54 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மும்பையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை என்று மேயர் கிஷோரி பெட்னேகர் […]
திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5-ஆம் தேதி விழா தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் டிசம்பர் 15ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. அதனால் திருவாரூர் மாவட்டத்தில் டிசம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச […]
நோர்வே நாட்டில் கொரோனாவின் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட சுமார் 120 பேர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டதையடுத்து அதில் பங்கேற்ற 60 பேருக்கு உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோர்வே நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விருந்து விழா ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த விருந்து விழாவில் கொரோனா தொடர்பான தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்ட சுமார் 120 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த விருந்திற்கு பின்பாக இதில் கலந்து […]
புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2, 3 ம் தேதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருகிற 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் புதுச்சேரியில் நவம்பர் இரண்டாம் மற்றும் மூன்றாம் தேதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு […]
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதற்கு தடுப்பூசி அதிகப்படியாக செலுத்துவது தான் காரணம். ஞாயிறு தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் இந்த வாரம் மட்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 67% நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் 70% நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அடுத்த மாதம் வழங்கக்கூடிய ரேஷன் பொருள்களை இந்த மாதம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு பாமாயில் போன்றவை குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. ஒரு மாதம் வாங்க வில்லை என்றால் அடுத்த மாதம் சேர்த்து வழங்கப்படமாட்டாது. இதையடுத்து அடுத்த மாதம் 4-ஆம் […]
அமேசான் பண்டிகைக்கால விற்பனையின் ஒரு பகுதியாக பல ஸ்மார்ட் போன்கள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் பல மாடல்கள் மீது பல வகையான சலுகைகள் கிடைக்கிறது. மேலும் அமேசான் சலுகைகள் அதிக லாபகரமானதாக சில வங்கி தள்ளுபடியில் கிடைக்கிறது. அதனால் தீபாவளி பண்டிகை காலம் புது ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு ஒரு சிறந்த காலமாகிறது. ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூபாய் 10,999 என்கின்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விலை […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வண்ணம் சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 16, ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆயுதபூஜைக்கு செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக வருடம்ந்தோறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த வருடமும் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் […]
பண்டிகை காலம் வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணித்து செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தமட்டில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது சற்று குறைந்து வருகிறது என்றே சொல்லலாம்.. தினமும் 20 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு எண்ணிக்கை இருந்து வருகிறது இப்படிப்பட்ட சூழலில் அடுத்தடுத்து தொடர்ந்து பண்டிகை காலம் என்பது வர இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், […]
கேரளா அரசு சார்பாக ஓணம் சிறப்பு லாட்டரி பரிசு 12 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு சார்பாக பண்டிகை தினத்தன்று சிறப்பு லாட்டரி பரிசுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஓணம் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு லாட்டரியில் முதல் பரிசாக 12 கோடியும், இரண்டாம் பரிசாக 6 பேருக்கு தலா ஒரு கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சீட்டின் விலை ரூ.300 என அறிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தமிழகத்தில் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. மக்களின் சில அத்தியாவசிய தேவைகளுக்காக குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் பயணிகளின் வரத்து குறைவாக இருப்பதால் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்து வருகிறது. இந்நிலையில் பண்டிகை கால சிறப்பு ரயில்களை நவம்பர் […]
பொங்கலுக்கு மறுநாள் அதிகாலையில் பெண்கள் அனுஷ்டிக்கும் முறை கனு. இதில் பொங்கலில் செய்யப்பட்ட பொங்கல் மற்றும் கரும்பு துண்டுகள், வாழைப்பழம் ஆகியவற்றால் காகங்களுக்கு படையல் வைத்து, தன் சகோதரர்களின் வாழ்வு மேன்மை பெற வேண்டும் என்று பெண்கள் பிராதிப்பர். அதன்பிறகு ஸ்நானம் செய்துவிட்டு சூரியனுக்கு மீண்டும் பொங்கல் சமைத்து நிவேதனம் செய்யப்படும். அதன்பிறகு அனுஷ்டிக்கும் முறை கோ பூஜை எனும் மாட்டுப்பொங்கல். தேவாசுரர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த பொழுது அதில் இருந்து தோன்றியவர் தான் காமதேனு. […]
வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு மாநிலங்களில் 200 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் திட்டம் தீட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது வரை காலவரையின்றி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த மே மாதம் 12ஆம் தேதி 30 ராஜதானி சிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஜூன் ஒன்றாம் தேதி 200 சிறப்பு ரயில்களும் அதன்பிறகு […]
ஹோலி பண்டிகை ஆனது இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை பங்குனி மாதம் பவுர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணபகவான் கோபியர்களுடன் விளையாடிய விளையாட்டு தான் இந்த ஹோலி பண்டிகை. இந்த பண்டிகையானது ராதா, கிருஷ்ணனும் விளையாடிய விளையாட்டை நினைவுபடுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. பிரம்மதேவரிடம் வரங்கள் பல வாங்கிய இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என்று தொழ வேண்டும் என்று எண்ணினான். ஆனால் இரணியனின் மகன் பிரகலாதன் அதை எதிர்த்தான். பிரகலாதன் […]