Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

2 லட்ச ரூபாய் மோசடி…. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எம்.குச்சிபாளையம் பகுதியில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் பணிமனையில் ஓட்டுநராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். அதே பணிமனையில் சிவதாஸ் என்பவர் கண்டக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சிவதாஸ் குடும்ப செலவுக்காக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாலையாவிடம் 2 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். இதுவரை அந்த ரூபாயை பாலையாவுக்கு திருப்பி கொடுக்காமல் சிவதாஸ் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து பாலையா வளவனூர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு என்ற பெயரில் மோசடி…. பொதுமக்கள் புகார் அளிக்கலாம்…. குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஈச்சம்பாடி கிராமத்தில் வசிக்கும் சிவகுமார் என்பவர் சீனிவாசா தெருவில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். அவரை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் வசூல் செய்த பணத்தை திரும்ப கொடுக்காமல் சிவகுமார் மோசடி செய்ததாக அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போது பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தீபாவளி சீட்டு பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணக்குகளை ஆய்வு செய்த நிர்வாக இயக்குனர்…. ரூ.84 லட்சம் மோசடி செய்த 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் வளன் அரசு கணக்குகளை ஆய்வு செய்த போது, கடந்த 10 வருடங்களாக வேலை பார்த்து அக்டோபர் மாதம் பணியை விட்டு சென்ற ராஜபாளையத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரும், முனிராஜ், இனியவன், சண்முகவேல் ஆகியோரும் இணைந்து 84 லட்ச ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து விக்னேஸ்வரனிடம் கேட்டபோது அவர் வளன் அரசுவை தகாத வார்த்தைகளால் திட்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ.70 லட்சம் மோசடி…. நெருக்கடி கொடுக்கும் வங்கிகள்…. பெண்களின் பரபரப்பு புகார்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கீழபுத்தேரி பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் சிவாஜி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, வடசேரி கீழ புத்தேரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் நடத்தி வந்த சுய உதவி குழுவில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். அந்த குழு தலைவி பெண்களின் கையெழுத்தை பயன்படுத்தி, ஆவணங்களை காண்பித்து 70 லட்ச ரூபாய் வரை பல்வேறு வங்கிகளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கனடாவில் வேலை ரெடி…!! முதியவரிடம் ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன்மாநகரில் ஹரிக்குமார் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனுக்கு வேலை தேடி வந்த போது சென்னையை சேர்ந்த நவாஸ் அகமது என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் உங்களது மகனுக்கு கனடாவில் நல்ல வேலை வாங்கி தருகிறேன் என நவாஸ் அகமது கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்வேறு தவணைகளாக ஹரிகுமார் ரூ. 7,56,200 பணத்தை நவாஸ் அகமதுவிடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“விவசாயியிடம் ரூ.18 3/4 லட்சம் மோசடி”…. 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரங்கநாதன் பேட்டையில் விவசாயியான வெள்ளியங்கிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பசுபதிபாளையம் பகுதியில் வசிக்கும் பாலு என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் பாலு தான் ரயில்வேயில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வருவதாகவும், தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும் கூறியுள்ளார். மேலும் பணம் கொடுத்தால் ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன் என வெள்ளியங்கிரியிடம் தெரிவித்தார். இதனை நம்பி வெள்ளியங்கிரி தனது மகன் மற்றும் மருமகளுக்கு வேலை வாங்கி கொடுக்க 18 லட்சத்து 85 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து…. “வியாபாரிகளிடம் ரூ.30 லட்சம் அபேஸ்”…. போலீஸ் வலைவீச்சு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மண்ணடி மலையப்பன் தெருவில் ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்லா, மாலிக், சித்திக், செல்லா ஆகிய 4 பேரும் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் பர்மா பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று அப்துல்லா வீட்டில் தனியாக இருந்தபோது டிப்-டாப்பாக உடையணிந்த 3 மர்ம நபர்கள் தங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொண்டனர். இதனையடுத்து சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி அந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கர்நாடக மருத்துவ கல்லூரியில் “சீட்” கிடைக்கும்…. ரூ.12 1/2 லட்சத்தை இழந்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவஸ்தான புதூரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் வண்டி மேலாளர். இந்நிலையில் முத்துசாமியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு கர்நாடக அரசு மருத்துவ கல்லூரியில் “சீட்” வாங்கி தருவதாக குறுந்தகவல் வந்தது. இதனையடுத்து முத்துசாமி சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தனது மகனுக்கு சீட்டு வாங்கி தருமாறு கூறியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் சில ஆவணங்களை வாங்கிக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். இதனையடுத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…! 39 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

39 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பீரங்கிகுள தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கரை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரிடம், தான் பெங்களூருவில் இருக்கும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து 40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 800 ரூபாய் கிடைக்கும் வகையில் வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக தொழில் செய்ய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் எடுக்க சென்ற தம்பதி…. நூதன முறையில் ரூ.34 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமீர்பாளையம் பகுதியில் ராமலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவருடன் நேற்று முன்தினம் சாத்தூர் மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஏ.டி.எம் வெளியே நின்று கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபரிடம் ராமலட்சுமி பணம் எடுத்து தருமாறு உதவி கேட்டுள்ளார். அந்த நபர் ஏ.டி.எம் கார்டை வாங்கிக்கொண்டு ஏ.டி.எம் மையத்திற்குள் சென்றுள்ளார். இதனையடுத்து உங்களுக்கு சரியாக வேலை செய்யவில்லை என கூறி மற்றொரு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வியாபாரி…. கிராம மக்களின் புகார்…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் பகுதியில் வசிக்கும் துணி வியாபாரி ஒருவர் தீபாவளி சீட்டு, ஏல சீட்டு நடத்தியுள்ளார். அவரிடம் ஏராளமானோர் ஏல சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளனர். கடந்த 8- ஆம் தேதி வியாபாரி தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். எனவே சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட வியாபாரி மற்றும் அவரது குடும்பத்தினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி…. ரூ. 8 1/2 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்…. தம்பதியின் பரபரப்பு புகார்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் சுரேஷ்- அனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் ஆன்லைனில் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. அதனை நம்பி அனிதா அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி வேலை இருப்பதாக தெரிவித்தார். அந்த வேலையில் சேர்ந்தால் மாதம் 50 ஆயிரத்திற்கும் மேல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காதலித்து 2-வது திருமணம் செய்த நபர்…. ரூ.40 லட்சம் மோசடி…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள வேளாங்குடி பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய பெண் காந்திபுரத்தில் இருக்கும் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் பட்டப்படிப்பை படித்து முடித்துவிட்டு கோவையில் இருக்கும் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் அரசு வேலைக்காக பயிற்சி பெற்று வந்தபோது செல்போன் கடையில் வேலை பார்க்கும் அப்துல் ரஹீம்(34) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். […]

Categories

Tech |