முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளுக்கும் தேர்வு வைக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். சீர்காழியில் பேசிய அவர். நீதிபதிக்கு நீட் இருக்குல்ல, அதே மாதிரி எல்லாருக்கும் தேர்வு வையுங்கள். யார் முதல் மார்க் வாங்குகிறார்களோ அவர்கள் தான் முதலமைச்சர், பிரதமரா வரணும். நானும் எழுதுவேன். நேர்மையான ஒரு நீதிபதியை வைத்து பேப்பரை திருத்த சொல்லுங்கள். மதிப்பெண்ணுக்கு ஏற்ற பதவியை கொடுங்கள் என்றார்.
Tag: பதவி.
சென்னையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது பற்றி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அதாவது முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை மிகவும் தாமதமாக கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். அவரை முதலிலேயே அமைச்சராக்கி இருக்க வேண்டும். கடந்த தேர்தலிலேயே தெரியும் உதயநிதி திறமை மிக்க இளைஞர் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். மேலும் “சட்டமன்ற உறுப்பினராக அவர் சில காலம் பயிற்சி பெறட்டும் என்று தான் முதல்வர் […]
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 200 வருடங்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன் முறையாக இளம் பிரதமர் என பெருமையுடன் இந்த பதவியை அலங்கரிக்கின்றார். இந்துக்களால் 5 நாட்கள் கொண்டாடப்படும் ஒளியின் திருவிழா எனப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிஷி சுனக் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இது பற்றி தி ராயல் பேமிலி சேனல் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் […]
நடைபெற்ற நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சியும், சுவீடன் ஜனநாயக கட்சியும் போட்டியிட்டது. இதனால் அங்கு கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்குகள் என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் பிரதமர் மதனலேகா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சியை விட சுவீடன் ஜனநாயக கட்சி 3 இடங்களை கூடுதலாக பெற்று வெற்றி […]
அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய காபி உணவகமாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் உணவகங்கள் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் ரெக்கிட் பென்கிசர் குழுமத்தின் […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை கூறிய நமது நாட்டில் துணை ஜனாதிபதி பதவி தான் நாட்டின் இரண்டாவது உயர்பதவி என்பதனால் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நாட்டின் 14 வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆறாம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளரான மேற்கு வங்காள மாநில கவர்னராக பதவி வகித்து வந்த ராஜஸ்தான் ஹாட் இனத் தலைவர் ஜெகதீப் தன்கர் களம் இறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் […]
மத்திய பல்கலைக்கழகங்களில் 45 துணைவேந்தர் பதவிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவியில் தலா ஒருவருக்கு மட்டுமே நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் 45 துணைவேந்தர் பதவிகளில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் தலா ஒருவருக்கு மற்றும் துணை வேந்தர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிலையங்களில் ஆசிரியர் பணிக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றுவது குறித்து சமாஜ்வாதி கட்சி எம்பி மக்களை கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை […]
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக நிரந்தர பொது செயலாளருமான ஜெ ஜெயலலிதா மறைவிற்குப்பின் அக்கட்சியில் இரட்டை தலைமை உருவானது. ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இணைய ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி போன்றோர் பொறுப்பேற்றுள்ளனர். நான்கு வருடங்கள் இரட்டை தலைமையின் கீழ் பயணித்த அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இதற்கிடையே கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை […]
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் துறையின் இயக்குனராக பணியாற்றிய சான்கியாங் ரீ கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி ஓய்வு பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த இடம் காலியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா சீனிவாசன் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் 22ஆம் தேதி பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றார். அதனை ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிருஷ்டலீனா ஜார்ஜியவா அவர் நேற்று அறிவித்துள்ளார். கிருஷ்ணா சீனிவாசன் இந்திய பொருளாதார நிபுணராக இவர் […]
டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள காரணத்தினால் முதுகுளத்தூர் யூனியன் தலைவர் பதவியை அதிமுக தர்மர் ராஜினாமா செய்தார். அதிமுக சார்பில் டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தர்மர் தேர்வு செய்யப்பட்டார். அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரான இவர் தற்போது அதிமுக கட்சி சார்பில் டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் 2 நாட்களுக்கு […]
நவாஸ் ஷெரீப்பின் தண்டனையை ரத்து அல்லது இடைநீக்கம் செய்வது பற்றி ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக இருந்து வந்த நவாஸ் ஷெரீப், கடந்த 2017-ம் ஆண்டு பனாமா கேட் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து அங்கு ஆட்சி பொறுப்புக்கு வந்த இம்ரான்கான் அரசு நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் வழக்குகளை பதிவு செய்து விசாரனை மேற்கொண்டது. இதில் ஒரு […]
குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆம் ஆத்மியில் சேர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் தொழில்துறை பிரிவின் முன்னாள் அகில இந்திய தலைவருமான கைலாஷ் காத்வி டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல்-மந்திரியுமான கெஜ்ரிவாலை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரசை சேர்ந்த சுமார் 10 நிர்வாகிகள் மற்றும் 300 தொண்டர்களுடன் ஆம் ஆத்மியில் இணைய இருப்பதாக தெரிவித்தார். குஜராத்தில் ஆட்சியமைப்பதில் […]
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கடுமையான கொரோனா காலகட்டத்தில் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அப்போது இங்கிலாந்து நாட்டிலும் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய மனைவி கேரி அமைச்சரவைக்கு ஒரு கேக் கொண்டு வந்திருந்தார். அதனை வெட்டி போரிஸ் ஜான்சன் அவருடைய பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை […]
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார். இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது. புதிதாக பதவியேற்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்கனவே இருந்து அமைச்சர்களில் அனுபவம் வாய்ந்த பத்து பேரோடு புதிதாக 15 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அந்தவகையில் நகரி எம்எல்ஏ நடிகை ரோஜா […]
அமெரிக்காவில் இரண்டு முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க நாட்டில் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இந்தியர்கள் முக்கிய பதவிகளை அலங்கரிப்பது நீட்டித்து வருகிறது. இப்போது இரண்டு முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இந்திய வம்சாவளி வக்கீல் கல்பனா கோட்டகல் சம வேலைவாய்ப்பு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வினை சிங் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் […]
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை “கிங் ரிச்சர்ட்” என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்பாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் காமெடியாக பேசி கொண்டிருந்தார். அப்போது அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மிதின் உடல்நிலை குறித்து காமெடியாக பேசினார். இதன் காரணமாக கோபமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி கிறிஸ் ராக்கின் முகத்தில் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக சிறந்த கேப்டனாக விளங்கிய எம்.எஸ்.டோனி திடீரென பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய கேப்டனாக ஜடேஜாவை சி.எஸ்.கே அணி நியமித்தது. இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, எம். எஸ்.டோனியின் முடிவை நாங்கள் எப்போதும் மதித்து வருகிறோம். அவர் எங்களுக்கு ஒரு தூணாக இருக்கிறார். தொடர்ந்து அப்படியே இருப்பார். கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்க இது சரியான […]
இலங்கையில் இந்த ஆண்டிற்கான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஜெனரல் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராகவும் இருந்து வந்த ஜெய் ஷா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பதவி ஏற்றிருந்தார். அவருடைய பதவிக்காலம் தற்போது முடிவடைந்த நிலையில் மேலும் ஒரு வருடம் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. ” என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் இந்த பதவிக்கு தேர்வு செய்ததற்காக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் உள்ள […]
அரசு ஊழியர்கள் பொது மக்களிடம் தன்மையாக நடந்து கொள்ளாவிட்டால் பதவி உயர்வு கிடைக்காது என்று கேரள அரசு அறிவித்துள்ளது கேரளாவில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பாக பல சீர்திருத்த முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளன. அதிகாரிகளின் ரகசிய குறிப்பு , திறமை , பணிமூப்பு ஆகியவை வைத்து பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்ததோடு இதில் சில மாற்றங்கள் ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை கேரள அரசு அறிவித்துள்ளது. அதாவது ஊழியர்களுக்கு மதிப்பெண் முறையில் பதவி […]
விராட் கோலி ஆர்சிபி அணி கேப்டன் மற்றும் இந்திய கேப்டன் ஆகிய பதவிகளில் இருந்து விலகி பேட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஆர்சிபி புது கேப்டனை நியமிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டது. இதனால் புது கேப்டனாக யாரை நியமிப்பது என்பது குறித்து ஆர்சிபி தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. அதில் தினேஷ் கார்த்திக், டூ பிளெஸ்ஸி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் மேக்ஸ்வெல் தன்னுடைய திருமணம் […]
திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை பொது செயலாளர் மீனா ஜெயகுமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. துணை மேயர் பதவிக்கு திமுக சார்பில் மகேஷ்குமார் போட்டி. மேலும் கும்பகோணம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக கே.சரவணன் துணை மேயர் தமிழழகன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுகவின் ஆர்.ப்ரியா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக பெரும்பான்மையாக இருப்பதால் இவர் மேயராவது உறுதியாகிவிட்டது. மேயராக பிரியா தேர்வானதால் சென்னை மாநகராட்சியின் 340 ஆண்டுகால வரலாற்றில் முதல் இளம் மேயராகவும், […]
திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக வழங்கியுள்ளது. கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி துணைத் தலைவர் பதவி:பவானி, புளியங்குடி , அதிராம்பட்டினம்,போடிநாயக்கனுர். பேரூராட்சி தலைவர்: வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர். பேரூராட்சி துணைத்தலைவர்: கூத்தையப்பர், ஊத்துக்குளி, மேலசொக்கநாதபுரம், கீரமங்கலம், ஜம்பை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுகவின் கோட்டை என கருதப்படும் கொங்கு மண்டலத்திலும் கூட திமுக வெற்றி பெற்றது மாபெரும் சரித்திர சாதனையாக கருதப்படுகிறது. அதோடு எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் திமுகவின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. திமுகவின் இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து மேயர் துணை மேயர் பதவிகளுக்கான ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேயர் துணை […]
கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி கே.சி பழனிச்சாமி தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அதிமுக சார்பில் மனு கொடுக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி […]
பல ஆண்டுகளாக நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? என்பது பேசும் பொருளாகவே இருந்து வந்தது. இதையடுத்து நடிகர் ரஜினி 2017-ஆம் ஆண்டில் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இருப்பினும் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் ? என்பது பற்றி தெளிவாக குறிப்பிடாமல் இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகர் ரஜினி தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் […]
அதிமுக கூட்டணியில் பாஜக முக்கிய இடங்களுக்கான மேயர் பதவியை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பாஜக கூட்டணியில் பாஜக முக்கிய மாநகராட்சியின் மேயர் பதவிகளைக் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் திமுக -காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி பொருத்தவரை கூட்டணி கட்சிகள் அனைத்தும் முண்டியடித்துக்கொண்டு எனக்கு உனக்கு என்று போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் மெஜாரிட்டி கட்சிகளுக்கே வாய்ப்பு அளிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் அதிமுக குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் […]
கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த பிறகு பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. மேலும் இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வார்கள் என்ற சட்ட விதிகள் கொண்டுவரப்பட்டது. பின்னர் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த அதிமுக தேர்தலில் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் […]
அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பு இருக்கும் எனக்கு ஆசை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி திமுக ஆட்சி அமைத்தபோது அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் எம்எல்ஏ-வாக தொடர்கிறார். இதனிடையே உதய நிதி அமைச்சராக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கோவை மாவட்டம் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார்.அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் பணியில் இருந்த அமுதா ஐஏஎஸ் சமீபத்தில் மாநிலப் பணிக்கு திரும்பிய நிலையில், ஊரக வளர்ச்சித் துறையில் […]
பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் பதவிக்கு 2 பேர் போட்டி போட்ட நிலையில், அவர்கள் சண்டை போடும் வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் கிழக்கு சாம்பிராஜ் மாவட்ட பகுதியில் உள்ள ஒரு பிரைமரி பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்துள்ளது. இந்த பதவிக்கு அப்பணியில் பணியாற்றிவந்த சிவசங்கர் கிரி மற்றும் ரிங்கி குமாரி ஆகியோர் போட்டி போட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருவரில் யாருக்கு தலைமை ஆசிரியர் […]
பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவதாக பதவியேற்ற கொண்டதிலிருந்து அமைச்சரவையில் மாற்றமோ அல்லது விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டது. கடந்த சில நாட்களாகவே பாஜக தேசிய ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். இதையடுத்து இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய மத்திய […]
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற நிலையில் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இதில் என் ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று இந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தது. இதனால் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை […]
மாமியாரின் பதவி பணத்தை பெறுவதற்காக தனது சொந்த மனைவியின் தம்பியை அதற்கு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு ராஜா என்ற மகனும் உஷா என்ற மகளும் உள்ளனர். உஷாவிற்கு திருமணமாகி அவரது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி உயிர் இறந்ததற்காக அவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் […]
கிரண்பேடி அறிவித்த ஆணையில் வடமாநிலத்தை சேர்ந்த மூவருக்கு பதவி என்பதால் மற்ற ஊழியர்களிடம் சர்ச்சை நிலவி வருகிறது புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் மாளிகையில் கிரண்பேடி துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வருகிறார். அங்கு பணிபுரியும் ஊழியர்கள் டெபுடேசன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தற்போது வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று நபருக்கு பணி நிரந்தரம் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது மற்ற ஊழியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சரின் குற்றச்சாட்டால் ஆளுநர் மாளிகையில் செலவு அதிகமாக இருக்கும் நிலை […]
கொரோனா தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே அரசியல் தலைவர்கள் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெருவும் ஒன்று. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் பெருவில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே பெருவின் அரசியல் தலைவர்கள் சிலர் கொரோனா தடுப்பூசியை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஏனென்றால் நாட்டின் சுகாதார அமைச்சர் முன்னதாக […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மலேரியா முன்முயற்சி குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவரை நியமனம் செய்துள்ளார். ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் மலேரியாவை கட்டுப்படுத்துவத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நோக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் ஜோ பைடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் பஞ்சாபி என்ற மருத்துவரை மலேரியா முன்முயற்சி குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்துள்ளார். மருத்துவர் ராஜ் பஞ்சாபி லைபீரியாவில் பிறந்தவர் . உள்நாட்டுப் போரின்போது […]
இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரக தலைநகர் டெல்லியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்தார். இந்தியாவில் இருக்கின்ற இங்கிலாந்து தூதரகம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ‘ஒருநாள் தூதர்’ என்ற போட்டியே நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த போட்டி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று நடைபெறும். இந்தியாவில் இருக்கின்ற 18 வயது முதல் 23 வயது வரையிலான பெண்கள் மட்டுமே அந்த போட்டியில் பங்கேற்க முடியும். […]
அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அவிலுபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய மூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுகவில் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பொதுச் செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிக்குமான தேர்தலும் நடத்தப்படாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். கட்சியில் முதல்வர், வேட்பாளர் […]