மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தார். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கடந்த 17-ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்தார். அதன்படி டாக்டர் சிவி ஆனந்த் போஸ் என்பவர் மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார். இவருடைய பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், கொல்கத்தா ஹைகோர்ட் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி […]
Tag: பதவியேற்பு
அதிமுக கட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முடிவை பொறுத்து தான் அதிமுக கட்சி யாருக்கு என்பது தெரிய வரும். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் […]
பிரிட்டன் நாட்டின் மன்னராக அறிவிக்கப்படும் அதிகாரபூர்வமான நிகழ்வில் மேசையை சுத்தப்படுத்தும் ஊழியர்களிடம் அரசர் சார்லஸ் சமிக்ஞை காட்டி பேசியதை, கோபமாக பேசியதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள். பிரிட்டன் நாட்டை 70 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரின் மூத்த மகனான சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில், சமீபத்தில் ட்விட்டரில் வெளியான ஒரு வீடியோவில் சார்லஸ், மன்னராக பொறுப்பேற்ற […]
கொலம்பியாவில் புதிய அதிபருக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றுள்ளது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து இடதுசாரி பிரிவு தலைவரான கஸ்டாவோ பெட்ரோ வெற்றி பெற்றுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியினர் பொருளாதாரத்தில் மிக அளவிலான மாற்றங்களை கொண்டு வந்த போதிலும் அது வாக்காளர்களை சென்றடையவில்லை. மேலும் அதிகரித்து வரும் வறுமை மனித உரிமை தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன. அது தேர்தலில் எதிரொலித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற கஸ்டோ […]
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து நாட்டின் 15வது ஜனாதிபதியாக பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி, 2வது பெண் ஜனாதிபதி, மிக குறைந்த வயது ஜனாதிபதி என்ற பெருமைகளை […]
நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவராக இன்று காலை 10.15 மணியளவில் திரௌபதி முர்மூ பதவி ஏற்கிறார். குடியரசு தலைவர் பதவியில் இருந்து ராம்நாத் கோவிந்த் நேற்றோடு ஓய்வு பெற்ற நிலையில் இன்று 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மூ பதவிஏற்கிறார். நாடாளுமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்வி ரமணா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக நாடாளுமன்ற […]
இலங்கை நாட்டில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் புது அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதாவது, டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் பதிரன, பிரசன்ன ரணதுங்க, ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட 18 பேர் பதவியேற்றுக் கொண்டனர். அந்நாட்டின் புதிய பிரதமராக தினேஷ்குணவா்தன இன்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அங்கு பல அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த நாட்டின் அதிபராகயிருந்த கோத்தபயராஜபட்ச பதவி விலகியதை அடுத்து, இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் […]
திருவண்ணாமலை வந்தவாசி நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த எஸ்.முஸ்தபா சேலம் மாவட்ட தாரமங்கலம் நகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அங்கு நகராட்சி ஆணையராக பதிவு இருந்த எம். மங்கையரசன் வந்தவாசி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வந்தவாசி ஆணையராக இன்று அவர் பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், வந்தவாசி நகரில் நிலுவையில் உள்ள வீட்டு வரி, தொழில் வரி, நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை நிலுவைத்தொகை வசூல் செய்து நகரை மேம்படுத்த முயற்சி செய்வேன். மேலும் முழுமையாக பிளாஸ்டிக் […]
ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பொது தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. அப்போது லிபரல் கட்சித் தலைவர் மோரிசன் மற்றும் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையில் கடுமையான போட்டி நடைபெற்றது. இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்று நார்மன் பிரதமராக தேர்வானார். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி நார்மல் அல்பேனீஸ் முறைப்படி நகரில் உள்ள அரசு இல்லத்தில் இன்று காலை பதிவேற்றம் செய்து கொண்டார். இவர் ஆஸ்திரேலியாவின் 31ஆவது பிரதமராவார். அவருடன் […]
இலங்கையில் 9 மந்திரிகள் நேற்று புதிதாக பதவி ஏற்றுக்கொண்டனர். இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே முன்னிலையில் புதிய மந்திரிகள் நேற்று காலை பதவி பிரமாணம் எடுத்துள்ளனர். இந்நிலையில் துறைமுகங்கள், கடற்துறை மற்றும் விமான சேவையில்: நிமல் சிறிபால டி சில்வா, கல்வித்துறை மந்திரியாக : சுசில் பிரேமஜயந்த, சுகாதாரத்துறை மந்திரியாக : கெஹெலிய ரம்புக்வெல, நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்பு சீர்திருத்தம் மந்திரியாக: விஜேதாஸ ராஜபக்ஸ, சுற்றுலாத்துறை மற்றும் காணி மந்திரியாக: ஹரின் பெர்ணான்டோ, பெருந்தோட்டத்துறை மந்திரியாக: ரமேஷ் […]
ஏப்ரல் 10ஆம் தேதி அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவரும், முஸ்லீம் லீக் கட்சி தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் நேற்று புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதிய அமைச்சர்களுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்ற அவைத் தலைவர் சாதிக் சஞ்ரணி பதவிப்பிரமாணம் […]
பாகிஸ்தானில் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க அதிபர் மறுப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலமாக இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் பிரதமராகி இருக்கிறார்.இந்தநிலையில் ஷபாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல்-என் கட்சி மற்றும் பல்வேறு கூட்டணி கட்சிகளில் இருந்து மந்திரிகள் தேர்வாகி இருக்கிறார்கள். மேலும் இவர்கள் நேற்று பதவியேற்க இருந்தனர். ஆனால் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் […]
பாகிஸ்தான் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற ஷபாஸ் ஷெரீப்பிற்கு அமெரிக்கா வாழ்த்து கூறியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதன் காரணமாக இம்ரான் அரசு கவிழ்ந்து உள்ளது. அங்கு உள்ள முன்னாள் முதல்வர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70) பிரதமராகி உள்ளார். அவருக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏறத்தாழ 75 ஆண்டுகளாக பரந்த பரஸ்பர நலன்களில் பாகிஸ்தான் […]
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சவுந்தர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட இருவரது பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். இரண்டு ஆண்டுகள் நீதிபதிகளாக பதவி வகித்த பிறகு இரண்டு பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவர். சென்னை உயர்நீதிமன்ற பெண் நிதீபதிகளின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியானது அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக பஞ்சாப்பில் நடந்து வந்த 10 வருட காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. முதல்-மந்திரி வேட்பாளராக பகவந்த் மானை, ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். அவரது நம்பிக்கையை பூர்த்திசெய்யும் அடிப்படையில் பகவந்த் மான் அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமருகிறார். […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தற்போது மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 27 மாநகராட்சிகளில், மேயர்கள் 11 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தேர்தலில் மாநகராட்சி மேயர் தேர்தலில் பெண்களுக்கு அதிக […]
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி வரும் 22ஆம் தேதி பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அலகபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து நீதிபதி பண்டாரி பொறுப்பேற்கும் வரை மூத்த நீதிபதி துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக இருப்பார் எனவும், நீதிபதி […]
ஈரானில் பதவியேற்பு விழாவின்போது மேடையில் பேசிய ஆளுநரை திடீரென்று மர்மநபர் ஒருவர் தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் என்ற மாகாணத்தில் அபிதின் கோரம் என்பவர் புதிய ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் பதவியேற்பு விழாவின் போது மேடையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென்று மர்மநபர் ஒருவர் மேடை மீது ஏறி ஆளுநர் தலையின் பின்புறத்தில் ஓங்கி அடித்திருக்கிறார். Abedin Khorram, the new governor general of Iran's East Azarbayjan Province, […]
பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி, கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரை புதிய அரசு அமைக்குமாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார். அதன்படி, இன்று காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத்தின் 16வது முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு […]
குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த விஜய் ரூபானி நேற்று முன்தினம் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நேற்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராக எம்எல்ஏ பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்வு […]
சுப்ரீம் கோர்ட்டில் முதல் முறையாக ஒன்பது புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளை தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் குழு பரிந்துரை செய்யும். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். அதனடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டிற்கு புதியதாக 9 நீதிபதிகள் நியமிக்க கடந்த 17ஆம் தேதி கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது. இதனை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமித்தார். இன்று புதிய நீதிபதிகளான […]
கடந்த 13-ம் தேதி உடல் நலக்குறைவால் ஆதீனம் அருணகிரிநாதர் மறைந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பட்டம் சூட்டும் விழா ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெறும் என ஆதீன மடத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆதீனமாக பதவியேற்க உள்ள அவரிடம் ஆதீனத்திற்கு சொந்தமான சொத்து விபரங்கள் மற்றும் நகை விவரங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது.
கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேற்று ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் மகன் அரசியலில் அதிக தலையீடு செய்வதாக பிஜேபியின் உறுப்பினர்களே குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த ராஜினாமாவை அறிவித்தார். இந்நிலையில் கர்நாடகாவில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பசவராஜ் பொம்மையை பாஜக எம்எல்ஏக்கள் ஒரு […]
மத்திய அமைச்சராக எல் முருகன் பதவியேற்றுக்கொண்டார். தமிழக பாஜக தலைவர் எல். முருகன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறுகிறார் என்றும், ஒன்றிய அமைச்சராக இன்று மாலை பதவியேற்றுக் கொள்வார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து புதியதாக பதவியேற்கவுள்ள 43 பேர் கொண்ட மத்திய அமைச்சரவைப் பட்டியல் வெளியானது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பெயர் இடம்பெற்றிருந்தது. அமைச்சரக விரிவாக்க பட்டியலில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுக்கு இடம் கிடைக்கும் என தகவல் […]
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது.என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி மே 7ல் முதல்வராக பதவியேற்றார். பதவி பங்கீட்டில் நீண்ட இழுபறிக்கு பின் கடந்த 23ல் முதல்வர் ரங்கசாமி அமைச்சரவை பட்டியலை கவர்னர் தமிழிசையிடம் சமர்ப்பித்தார். என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜ.,வின் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க மத்திய உள்துறை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. அதன்படி இன்று பிற்பகல் 2:30 மணியளவில் கவர்னர் […]
கேரளாவில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பினராய் விஜயன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். கேரளாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பிரணாய் விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பதவியேற்கும் 21 அமைச்சர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதை தொடர்ந்து இன்று திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராய் விஜயனுக்கு இரண்டாவது முறை […]
அசாம் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஹிமந்தா பிஸ்வாக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று ட்விட்டரில் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அசாமில் 15வது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அசாம் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இன்று ஹிமந்தா பிஸ்வாக்கு மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து முன்னாள் முதல்வர் பதவியில் […]
தமிழகத்தில் ஆட்சியமைக்க மு.கஸ்டாலினை ஆளுநர் பன்வாரிலால் மே 7-ஆம் தேதி அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மே 7ஆம் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. மேலும் திமுக எம்எல்ஏ கூட்டத்திலும் சட்டப்பேரவைக் குழு தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் […]
மேற்குவங்க மாநில முதல்வராக 3வது முறையாக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றியைத் தட்டிச் சென்றது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்கத்தின் முதல்வராக பதவியேற்றார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் மம்தா […]
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2 ஆம் தேதி நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் […]
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 213 இடங்களை பெற்று அபார வெற்றி பெற்றது காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைகின்றது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் 294 தொகுதிகள் 8 கட்டங்களாக பிரித்து நடத்தப்பட்டது. தேர்தலின்போது மம்தா பானர்ஜிக்கு பா. ஜனதா கடும் நெருக்கடி கொடுக்கும் என கருத்து வெளிவந்தது. கருத்துக் கணிப்பில் பா.ஜனதா சவால் விடும் அளவிற்கு இடங்களை பிடித்து வெற்றி பெறும் […]
மே 5ம் தேதி மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி 3வது முறையாக பதவியேற்க இருக்கிறார். மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மிக அபாரமாக வெற்றி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், வரும் 5ம் தேதி மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி 3வது முறையாக பதவியேற்க இருக்கிறார் என கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் முதல் பெண் அதிபராக சமியா சுலுஹி ஹசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடான தன்சானியாவில் 2015ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்தவர் ஜான் மாகுபுலி. இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானதாக பல வதந்திகள் பரவி வந்த நிலையில் கடந்த புதன்கிழமை இருதய நோய் காரணமாக உயிரிழந்தார். தான்சானியா நாட்டின் அரசியல் சாசனத்தின்படி பதவியில் இருக்கும்போது அதிபர் இறந்துவிட்டால், துணை அதிபர் அதிபர் பதவி ஏற்பார். அந்நாட்டின் துணை அதிபரான சமியா சுலுகு […]
நாட்டின் இளைய மேயராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் இன்று மேயராக பதவியேற்றுள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்யா ராஜேந்திரன்(21). அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இந்நிலையில் இங்குள்ள முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் போட்டியிட்டார். இதையடுத்து ஆர்யா இராஜேந்திரன் வெற்றிபெற்று மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை மேயராக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி இன்று ஆர்யா ராஜேந்திரன் […]
பீகாரில் முதல்-மந்திரியாக பதவியேற்கும் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று பதவி ஏற்பு விழா மாலை நடைபெறுகிறது. நிதிஷ் குமார் மற்றும் அவரின் மந்திரிசபையில் இடம் பெறுகிற பிற மந்திரிகளுக்கும் கவர்னர் பாகு சவுகான் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். அந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மிக […]
பீகாரின் முதல் மந்திரியாக 7வது முறை ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் பதவியேற்கிறார். பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை முடிவில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி நிதிஷ்குமார் தொடர்ந்து நான்காவது முறையாக முதல்-மந்திரி பதவியில் அமர்கிறார். அவர் முதல் முறையாக 2000 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி முதல் மந்திரியாக […]
கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிதியமைச்சர் பதவியை அலி சப்ரிக்கு வழங்கியிருப்பதாக பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ கூறியுள்ளார். நிதியமைச்சராக அழி சப்ரி நேற்று பதவி ஏற்று , தனது கடமைகளை செய்ய தொடங்கியுள்ளார். அப்போது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பேராசிரியர், ” கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் நிதியமைச்சர் பதவியை ஜனாதிபதி சட்டத்தரணி அலிப் சப்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஸஹ்ரான் என்கின்ற முத்திரையை அப்பாவி முஸ்லிம் மக்களிடம் இருந்து முழுமையாக நீக்க வேண்டும். அதுமட்டுமன்றி ஸஹ்ரான்கள் […]