தமிழ் திரையுலகில் ஒற்றுமை இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார் . தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். திரையுலகில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது ” திரையுலகினர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. நடிகர் சங்கத் தேர்தல் நடந்த போது ஒரு பிரிவினர் நீதிமன்றம் சென்றனர். அதுபோலவே தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடந்த போது ஒரு பிரிவினர் நீதிமன்றம் சென்றனர். தயாரிப்பாளர்கள் சங்கமாக இருந்தாலும், நடிகர்கள் […]
Tag: பதில்
பிரபல நடிகை சமந்தா எல்லாவித கதைகளிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். நடிகை சமந்தாவிடம் ‘நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படம் அல்லது வர்த்தக படம் இவற்றில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள்’ என கேட்டபோது அவர் கூறிய பதிலாவது “நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் பெயர் வரும், வர்த்தக படங்களில் நடித்தால் வளர்ச்சி வேறு மாதிரி இருக்கும் என பிரித்து பார்த்து நான் கணக்கு போடுவது இல்லை. நான் சினிமா துறைக்கு எதிர்பாராமல் வந்த நடிகை […]
ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி? என்பது குறித்து விளக்கமளித்து எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரருக்கும், மின் வாரியத்திற்கும் இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மின் அளவீடு மற்றும் கணக்கீட்டு முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு […]
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. 29 விமானங்கள் மூலம் 26,000 பேர் மீட்கப்படுவர் என தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இதுவரை 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என பதில் அளித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் வகையில் தமிழகத்தில் விமானங்களை தரையிறக்க அனுமதிக்கக்கோரி திமுக மனு தாக்கல் செய்தது. திமுக தொடர்ந்த வழக்கு: திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் […]
மின் அளவீடு செய்யும் முறையிலும், கட்டணம் நிர்ணயிக்கும் முறையிலும் எந்த விதிமீறலும் இல்லை என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் விதிகளின்பிடி கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி எம்.எல்.ரவி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் அடிப்படையில் இந்த இரு […]
செவி வழி தகவலைக் கொண்டு அவசரத்தில் கருத்து தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் எந்தவித நடைமுறையும் மீறப்படவில்லை என ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். தஞ்சை மாவட்ட சாலைகளை மேம்படுத்த டெண்டர் விடப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமைச்சர் விளக்கமளித்துள்ளார். முன்னதாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, உபகோட்டங்களில் 462 கி.மீ நெடுஞ்சாலை பணிகளுக்கான 5 வருட பராமரிப்பு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர்களுக்காக 32 பதிவு […]
வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும், சர்வீஸ் செண்டர்களையும் திறக்க வாய்ப்புள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சர்வீஸ் சென்டர்களை திறப்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.சி., பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருள் விற்பனையங்கங்களையம், சர்வீஸ் சென்டர்களையும் திறக்க கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று 36வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதை […]
நடிகை பிந்து மாதவி காதலில் விழுந்ததாகவும், அந்த அனுபவம் பற்றியும் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். பிந்து மாதவி ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு சமூக வலைதளத்தில் ஏற்பாடு செய்த்திருந்தார். அப்பொழுது அவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் காதலில் விழுந்த அனுபவம் பற்றி கூறுங்கள் என கேட்டார். அதற்கு அவர் அதை காதல் என்று சொல்வதா என தெரியவில்லை. ஆனால் ஒருவர் மீது சீக்ரெட் கிரஷ் இருக்கிறது எனவும் அதை யாரிடமும் சொன்னது இல்லை […]