தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.தமிழகத்தின் 14வது ஆளுநராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017 அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார். கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த அவர், பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்படுவதாக கடந்த வாரம் ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகாலாந்து மாநில கவர்னர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. […]
Tag: பதிவியேற்பு
குஜராத் மாநில த்தின் முதல்-மந்திரி விஜய் ரூபானி நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக மாநில கவர்னர் ஆச்சார்யா தேவ்ராத்தை சந்தித்து பேசிய அவர், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து, குஜராத்தின் அடுத்த முதல் மந்திரி யார்? என்பதை தேர்வு செய்யும் பணியில் கட்சித் தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. அதன் பிறகு குஜராத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் பூபேந்திர படேல் தலைமையிலான […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியுள்ளது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைமை கண்காணிப்பு ஆணையராக சஞ்சய் கோத்தாரி இன்று குடியரசு தலைவர் மாளிகையில் பதிவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக K.V.சவுத்ரியின் செய்லபடு வந்தார். இவரது பதவிக்காலம் பதவி கடந்த […]