பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அர்ஷாத் ஷெரீஃப்(49) இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தீவிரமாக ஆதரித்தும் ராணுவத்தை கடுமையாக விமர்சனம் செய்தும் வந்துள்ளார். இவர் கென்யாவிற்கு சென்றிருந்தார். இந்த சூழலில் அவர் கென்யாவில் தலைநகர் ஐரோப்பிய அருகில் உள்ள கசியானோ என்னும் இடத்தில் ஒரு சாலை தடுப்பில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்காக வருத்தப்படுவதாக போலீஸ் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது ஆனால் இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியில் […]
Tag: பத்திரிக்கையாளர்
பத்திரிக்கையாளராக வேண்டும் என்பதுதான் எனது நீண்டகால விருப்பம் என பாலிவுட் நடிகை ஹீனா கான் மனம் திறந்து பேசியுள்ளார். இதற்கு முன் ஐடியில் பணிபுரிந்ததாகவும் தற்போது பாலிவுட் நடிகையாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் இந்த நிலையில் இவர் கடந்த 13 வருடங்களாக பாலிவுட் நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கின்றார். கடந்த 2009 ஆம் வருடம் முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இந்த சூழலில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் […]
பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஆப்கானிஸ்தான் நாட்டை பற்றி செய்தி சேகரிக்க சென்ற நிலையில் அவரை தலீபான்கள் கடத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய நாட்டின் ஒரு செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அனல் மல்லிக் என்னும் பத்திரிகையாளர், ஆப்கானிஸ்தான் நாட்டில் தகவல்களை சேகரிக்கக்கூடிய பணியை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அல்கொய்தா தீவிரவாத அமைப்பினுடைய முக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது தான் கடந்த புதன் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் செய்தி சேகரிக்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பத்திரமாக உள்ளார். அனஸ் மாலிக் என்ற பாகிஸ்தான் இளம் பத்திரிக்கையாளர் ஆப்கானிஸ்தானில் காணாமல் போனாதாக செய்திகள் வெளியாகின. மாலிக் தலிபான்களால் தாக்கப்பட்டதாகவும், அவர் உயிருடன் இருப்பதாக ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கான் தெரிவித்துள்ளார். மாலிக் இந்தியாவின் WION சேனலில் பணிபுரிகிறார். புதன்கிழமை ஆப்கானிஸ்தானை அடைந்த அவர் வியாழக்கிழமை இரவு காணாமல் போனார். மாலிக் காணாமல் […]
அமேசான் காட்டுப் பகுதியில் காணாமல் போன பழங்குடியினத்தை சேர்ந்த பத்திரிகையாளரும் நிபுணரும் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் டான் பிலிப் என்ற பிரபலமான பத்திரிகையாளர், பிரேசில் நாட்டில் வசித்து வருகிறார். அங்கு அமேசான் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் பற்றிய செய்திகளை புத்தகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ப்ரூனோ ஃபிரிரா என்ற பழங்குடியின நிபுணர் வழிகாட்டியாக உள்ளார். இருவரும் சேர்ந்து அமேசான் காடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் […]
சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நேரலையில் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்த ஒரு செய்தியாளரை காவல் துறையினர் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மாகாணத்தில், இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளதால் பல நாட்டு ஊடகங்களும் அங்கு முகாமிட்டிருக்கிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக நெதர்லாந்து நாட்டின் பத்திரிகையாளரான ஜோர்ட் டென் தாஸ் என்பவர் நேரலையில் தகவல் வெளியிட்டு கொண்டிருந்தார். அப்போது […]
மெக்சிகோவில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் வசித்து வரும் லூர்து மால்டனோடா என்பவர் அந்நாட்டில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் லூர்து தன்னுடைய சொந்த வாகனத்தில் ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார் அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் லூர்துவை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். இதனால் சம்பவ இடத்திலேயே லூர்து பரிதாபமாக உயிரிழந்தது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் […]
பத்திரிக்கையாளர்களை நலனை பாதுகாக்க பத்திரிக்கையாளர்கள் நலவாரியம் அமைத்து அதற்காக இரண்டு பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக செயல்படுத்துவது, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திட பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி பத்திரிகையாளர் நல வாரியம் உருவாக்கி தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் தலைமையில் ஆறு பேர் என்ற குழு […]
ராணுவத்தை விமர்சனம் செய்தததற்காக பத்திரிக்கையாளருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் Danny Fenster. இவர் Frontier Myanmar ஆன்லைன் தளத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தார். இந்த நிலையில் மியான்மர் ராணுவ ஆட்சியை விமர்சித்து கட்டுரை எழுதியதாக Danny மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த மே மாதம் மியான்மர் ராணுவம் இவரை கைது செய்தது. மேலும் குடியேற்ற சட்டத்தை மீறியதாக கூறி அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. […]
தென்னிந்திய திரையுலகில் பாரதி ராஜாவின் மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ரேவதி. 80களில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், மோகன் போன்றவர்களுடன் நடித்து அந்த காலத்தில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ஆனால் ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. இதனிடையே பத்திரிகையாளரிடம் ரேவதி தன் வாழ்க்கை குறித்து கூறியுள்ளார். அதில் தான் 16 வயதிலேயே நடிக்க […]
பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி, அரச குடும்பத்தை பற்றி மோசமாக விமர்சித்தது குறித்து ஒரு கட்டுரை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமரின் மனைவி கேரி பற்றி ஒரு பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரை அமெரிக்காவின் ஒரு பத்திரிகையில் வெளியிடப்படவுள்ளது. அதாவது, கேரி, ஒரு முறை அரச குடும்பத்தினர் பற்றி மோசமாக பேசியிருக்கிறார். எனவே, பத்திரிகையாளர் ஒருவர், பிரதமர் மனைவியின் தோழிகளை தொடர்புகொண்டு, உங்களிடம் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் பற்றி கேரி என்ன கூறினார்? என்று கேட்டிருக்கிறார். […]
ரஷ்ய ஜனாதிபதி புடினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சந்திக்கும் பகுதியின் நுழைவுவாயிலில் சலசலப்பு ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் புடினும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள Villa La Grange-ல் இன்று சந்திக்க உள்ள நிலையில் சுமார் 5 மணி நேரம் மூன்று கட்டமாக இடைவெளியுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்ய ஜனாதிபதி புடின் செய்தியாளர்களை தனியாக […]
அமெரிக்காவின் பத்திரிகையாளர்களுக்கான உயரிய விருது தமிழக வம்சாவளியான லண்டன் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் உலகில் ஊடகத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வருடம்தோறும் 21 பிரிவுகளில் விருது வழங்கி கௌரவபடுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று 105-ஆவது ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் சர்வதேச செய்தியாளருக்கான புலிட்சர் விருதை லண்டனில் வசிக்கும் தமிழக வம்சாவளியான மேகா ராஜகோபாலன் என்பவர் பெற்றுள்ளார். அவர் சர்வதேச நிருபராக புஸ்ஸ்ஃபீட் நியூஸ் ( BuzzFeed News ) எனும் நிறுவனத்தில் […]