தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரிய குழு அமைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழக சட்ட சபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிக்கையாளர் நல வாரியம்’ அமைக்கப்படும் என அறிவித்தார். தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டிற்கான […]
Tag: பத்திரிக்கையாளர்கள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பணவீக்கம் தொடர்பில் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ஒருமையில் திட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார். அப்போது கடைசியாக ஒரு பத்திரிக்கையாளர், நாட்டில் பணவீக்கம் அதிகரித்து கொண்டிருப்பது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிந்துவிட்டதால் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது என்று கருதிய, ஜோ பைடன் அந்த பத்திரிக்கையாளரை, “அது மிகப்பெரிய சொத்து., அதிக பணவீக்கம், முட்டாள்” என்று ஒருமையில் […]
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் இருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரம், வேதியியல், மருத்துவம், இலக்கியம், இயற்பியல் மற்றும் அமைதி போன்ற துறையில் உலக அளவில் பங்காற்றும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் மருத்துவம் மற்றும் இயற்பியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை இன்று அறிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மரியா ரெசா மற்றும் ரஷ்ய நாட்டை சேர்ந்த டிமிட்ரி முராட்டா ஆகிய இரு பத்திரிகையாளர்களுக்கு […]
தமிழக அரசானது பாஜக மூத்த தலைவரான ஹெச் ராஜா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “பாஜகவினர் தொடர்ச்சியாக, ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத் துறையை இழிவாக பேசுவது மற்றும் அவமரியாதை செய்வது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். பெண் பத்திரிகையாளர் உட்பட, அனைத்து பத்திரிகையாளர்களையும் இழிவுப்படுத்தி கடந்த 2018ஆம் ஆண்டு, பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் தனது கருத்தை […]
ஆப்கானிஸ்தான் நாட்டில், இரண்டு பத்திரிக்கையாளர்களை தலிபான்கள் சிறைவைத்து கொடுமைப்படுத்தியதை வெளிப்படுத்தும் புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடி வருகிறார்கள். இதற்கிடையில், தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தலையிடக்கூடாது என்றும் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களை தலிபான்கள் தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. https://twitter.com/yamphoto/status/1435738713452158979 இந்நிலையில், பெண்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்திகளை சேகரித்து வந்த Nemat Naqdi மற்றும் […]
ஒரு புதுவித திட்டத்தை தொடங்குவதற்கு ஆர்வத்துடன் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கென்று ஒரு புதுவித திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் தங்களுடைய வணிக ரீதியிலான புதுவித சிந்தனைகளை செயல்படுத்துவதற்கு உதவும் விதமாக கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் என்னும் புதிய திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தில் பணியமர்த்தப்படும் பத்திரிகையாளர்களுக்கு தேவைப்படுகின்ற நிதியுதவி, பயிற்சி ஆதரவு போன்றவை வழங்கப்படும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்க நாட்டில் இந்த புதுவித திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு குழுவினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய சினிமா படப்பிடிப்பு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சில நாட்களாக நடைபெற்றது. இதனை காண்பதற்காக பொதுமக்கள், பயணிகள் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முககவசம் அணியாமலும் நெருக்கமாக நின்று படப்பிடிப்பை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் விஜய்சேதுபதி சினிமா படக்குழுவினருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் […]
தேசிய பத்திரிகை தினத்தையொட்டி ஊடக ஊழியர்கள் அனைவருக்கும் குடியரசு துணைத் தலைவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தேசிய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்த நாள் தேசிய பத்திரிக்கையாளர் தினமாக 1996 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. நம் ஜனநாயகத்தை கட்டிக் காப்பதில் முக்கிய பங்காற்றி கொண்டிருக்கும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை கௌரவிக்க கூடிய வகையில் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் தேசிய பத்திரிக்கையாளர் தினம் இன்று […]