Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…!! பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் வீர மரணம்…!!

அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 6ஆம் தேதி பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த 6ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 7 ராணுவ வீரர்கள் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர். தொடர்ந்து இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து அவர்களின் உடல்களை பனிக் குவியலிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

மத்திய அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு…. மகிழ்ச்சியில் குழந்தைகள்…!!

மத்திய அமெரிக்காவில்  பனிப்பொழிவு  காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர். மத்திய அமெரிக்கப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக பனிச்சறுக்கில்  ஈடுபட்டு தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர். மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளில் மணிக்கு 64 கிலோ மீட்டர் வேகத்தில் பனிக்காற்று வீசுகிறது. இதனால்  பல பகுதிகளில் 30 சென்டிமீட்டர் அளவுக்கு பனி  படர்ந்துள்ளது.  இப்பனிக்காற்றால்  2400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

முதல் தடவையாக…. குளிர்கால ஒலிம்பிக்கிற்கு தபால் தலை…. ஐ.நா அறிவிப்பு….!!!

ஐ.நா, பீஜிங் மாகாணத்தில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக முதல் தடவையாக தபால் தலை வெளியிட்டிருக்கிறது. சீனாவின் பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதற்காக ஐ.நாவின் தபால் நிர்வாக பிரிவானது, முதல் தடவையாக தபால் தலை வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடக்கிறது. இந்நிலையில், ஹாக்கி, பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகள் பொறிக்கப்பட்ட தபால் தலைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. வரலாறு காணாத சாதனை…. சிங்கப்பெண்ணாக வலம் வரும் இந்தியர்….!!!!

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத் சண்டி என்ற பெண் தென் துருவத்தை அடைந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறார். பிரீத் சண்டி கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இதற்கான பயணத்தை தொடங்கினார். அண்டார்டிகா முழுக்க பனிச்சறுக்கு செய்தவாறு 40 தினங்களில் சுமார் 1126 கிலோமீட்டர் கடந்து சென்று சாதனை படைத்திருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, பூமியிலேயே அதிக குளிரான கண்டம் அண்டார்டிகா தான். யாராலும் அங்கு நிரந்தரமாக இருக்க முடியாது. அண்டார்டிகாவிற்கு பயணம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களுக்கு ஏற்பட்ட நிலை.. பிரெஞ்சு பனிச்சறுக்கு மையங்கள் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் மக்களுக்கு பிரெக்சிட் காரணமாக பிரான்சில் வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் மக்கள் பிரான்சில் பனிச்சறுக்கு சீசனில் பணியாற்றுவது, நீண்ட நாட்களாக மிக பிரபலமானதாக உள்ளது. எனினும் பிரெக்சிட் காரணமாக இதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது பணி கொடுக்கும் பல்வேறு நிறுவனங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கும், பிரெஞ்சு வாழிட உரிமம் உள்ளவர்களுக்கும் தான் பனிச்சறுக்கு மையங்களில் பணி என்று அறிவித்துள்ளது. மேலும் பிற பிரிட்டன் மக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரெஞ்சு […]

Categories
உலக செய்திகள்

இப்படி செய்யாதீங்க… இவங்களுக்கு தொந்தரவா இருக்கும்…மீறி செஞ்சா தண்டனை நிச்சயம்… சுவிஸ் வனத்துறையினர் எச்சரிக்கை…!

பறவைகள்,விலங்குகள் இருக்கும் இடத்தில் பனிச்சறுக்கு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக சுவிட்சர்லாந்தில் வழக்கமாக பனிச்சறுக்கு விளையாடும் காலகட்டத்தை தவறவிட்ட பலர் தற்போது பனிச்சறுக்கு விளையாட வருகின்றனர். ஆனால் இதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், பனிக்காலத்தில் சரியான உணவில்லாமல்,கொழுப்புகள் எல்லாம் கரைந்து போன நிலையில் விலங்குகளும் பறவைகளும் மீண்டும் இரைதேட வெளியே வரும். அப்படி உணவு தேடி வரும் உயிரினங்களுக்கு , பனிச்சறுக்கு விளையாட செல்வோர்கள் தொந்தரவாக இருக்கக் கூடும் […]

Categories
உலக செய்திகள்

தமிழக பாரம்பரிய உடையில்…. பனிச்சறுக்கு விளையாடும்…. அமெரிக்கவாழ் தம்பதிகள்…!!

தமிழக பாரம்பரிய உடையில் பனிச்சறுக்கு விளையாடும் தம்பதியினரின் விடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்கவாழ் தம்பதிகள் மாது- திவ்யா. இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக காதல் ஜோடிகளின் வீடியோக்கள் மற்றும் போட்டோ ஷூட்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அந்த வகையில் இந்த தம்பதியினர் தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சேலையில் பனிச்சறுக்கு விளையாட்டு விடையாடியுள்ளனர். இதையடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவியது இது […]

Categories

Tech |