ஜப்பானில் பனிப்பொழிவு இயல்பை விட மூன்று மடங்கு அதிகமானதால், 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடக்கு கடற்கரையின் நிலைமை இன்னும் நிலைமை மோசமாக உள்ளது. பல நகரங்களில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய தீவு ஒன்றில், மின் நிலையம் அழிந்ததால், 20,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. வீடுகளில் மின்சாரம், ஹீட்டர் போன்றவை செயல்படாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலைகள் மற்றும் பாலங்களில் அடி அடியில் பனி குவிந்துள்ளது. இதனால் […]
Tag: பனிப்பொழிவு
பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இரவு நேரங்களில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. நேற்று அதிகாலை கோவில்பாளையம், தாமரைக்குளம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. இந்நிலையில் கோவை- பொள்ளாச்சி சாலையில் காலை 8:30 மணி வரை பனிமூட்டம் நிலவியது. […]
அமெரிக்க நாட்டில் கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டதில், நியூயார்க் மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் பல மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதிலும் நியூயார்க்கில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. அம்மாகாணம் மொத்தமும் கடுமையான காற்று வீசுவதோடு பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஏரி நகரத்தில் ஒரே நாளில் சுமார் 150 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதன் காரணமாக குடியிருப்புகள், சாலைகள் வாகனங்கள் என்று அனைத்திலும் பனி […]
ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் குளிர்காலம் வந்தவுடன் பலமான காற்று வீசுவதுடன் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. எனவே அந்நாட்டின் டாஸ்மேனியா மற்றும் விக்டோரியா போன்ற பகுதிகளின் சாலைகள் மற்றும் வீடுகளின் மேல் பனி பொழிந்து போர்வை போர்த்தப்பட்டிருப்பது போன்று காணப்படுகிறது. இனிவரும் காலங்களில் பனிப்பொழிவு மேலும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்நாட்டு மக்கள் அந்த பனிச்சறுக்குகளில் உற்சாகமாக விளையாடி […]
இமாச்சல பிரதேசத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் . இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் மிகக் குறைந்த வெப்பநிலையை இந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அங்கு மைனஸ் 2.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இமாச்சல பிரதேசத்தில் குளிர் தீவிரமடைந்துள்ள நிலையில் லாஹவுல், ஸ்பிடி மாவட்டத்தில் உள்ள கீலாங்கில் 12.5 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது. ஆப்பிள் தோட்டங்களுக்கு பிரபலமான கல்பாவில் […]
மத்திய அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர். மத்திய அமெரிக்கப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக பனிச்சறுக்கில் ஈடுபட்டு தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர். மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளில் மணிக்கு 64 கிலோ மீட்டர் வேகத்தில் பனிக்காற்று வீசுகிறது. இதனால் பல பகுதிகளில் 30 சென்டிமீட்டர் அளவுக்கு பனி படர்ந்துள்ளது. இப்பனிக்காற்றால் 2400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவால் தற்போது வரை 42 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பருவநிலை மாற்றத்தால் மிகவும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த பனிப்பொழிவில் சிக்கி தற்போது வரை 42 பேர் பலியாகியுள்ளார்கள். மேலும் 118 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி 2,000 ரத்துக்கும் மேலான வீடுகள் இந்த கடுமையான பனிப்பொழிவால் சேதமடைந்துள்ளது. இந்த தகவலை தேசிய பேரிடர் […]
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு சில நாட்களாக அதிகளவு பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. பனிப்பொழிவு நேற்று அதிகரிக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. பனிப்பொழிவின் காரணமாக தெளிவற்ற நிலை காணப்படுகிறது. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப்போலவே ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடும் பனிப்பொழிவு மற்றும் காற்று வீசினாலும் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த […]
சீனாவில் பனிப்பொழிவு காரணமாக தட்பவெப்ப அளவு 10 டிகிரி செல்சியஸூக்கு மேல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக பனிபொழிவு பெய்து வருவதால் தட்பவெப்ப அளவு 10 டிகிரி செல்சியஸுக்கு மேல் குறைந்துள்ளது. மேலும் தொடர் பனிப்பொழிவு காரணமாக 10 முதல் 30 சென்டிமீட்டர் அளவுக்கு Changping, Yanqing ஆகிய மாவட்டங்களிலும் பனிப்பொழிவு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சாலை பகுதிகளில் படர்ந்து கிடக்கும் பனியினை சுத்தம் செய்யும் வேலையும் நடைபெற்று […]
சீனாவில் பனி பொழிவு ஏற்பட்டதால் 10டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக தட்பவெப்ப அளவு குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் 10 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக தட்பவெப்பநிலை குறைந்திருக்கிறது. Yanqing மற்றும் Changqing போன்ற இரண்டு மாவட்டங்களில் 10 லிருந்து 30 சென்டிமீட்டர் அளவு பனிப் பொழிவு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் சாலைகளில் அதிகமாக பனி படர்ந்திருப்பதால் அவற்றை அகற்றக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கான்சு […]
ஸ்காட்லாந்தில் இந்த மாத இறுதியில் இருந்து பனிப்பொழிவானது துவங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இந்த மாத இறுதிக்குள் வெப்பநிலை உறைபனிக்கு கீழாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் காற்று குளிர்ச்சியானது குறிப்பிட்ட வெப்பநிலையில் இருந்து சரிந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரித்தானியா வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்த வாரம் ஸ்காட்லாந்தின் வடமேற்கில் இருந்து குளிர்ந்த காற்று மிட்லாண்ட்ஸ் வரை வீசும். மேலும் லண்டனில் உள்ள பல பகுதிகளில் 6 […]
அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் உள்ள சில மாகாணங்களில் கடும் பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிப்படைந்துள்ளது. கடந்த சில தினங்களாக அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் இருக்கும் வயோமிங், உட்டா, கொலராடோ போன்ற மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டுள்ளது. மேலும் சாலைகள் முழுவதுமாக பனிக்கட்டிகளால் முழ்கியதோடு, மக்கள் வெளியில் நடமாட முடியாத வகையில் வீடுகள், கார்கள் மற்றும் மரங்கள் என்று அனைத்திலும் பனிப்போர்வை சூழ்ந்திருக்கிறது. இந்நிலையில் பனிப்புயல் வீசியதில் கொலராடோ மாகாணத்தில் மூன்று அடி உயரத்திற்கு பனி […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இயற்கைப் பேரிடர் பகுதியாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென்மேற்குப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குளிர் மற்றும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்புயலானது அதிகமாக இருப்பதால் வீடுகளிலும் சாலைகளிலும் பனி மூடப்பட்டுள்ளது. அதிக பனிப்பொழிவால் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பனிப்பொழிவினால் மின்சார உற்பத்தியானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் முடங்கி இருக்கும் சுமார் 30 லட்சம் மக்கள் வீடுகளில் மின்சாரமின்றி அவதிப்படுகின்றனர். குடிக்கும் […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாகாணத்தின் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எப்போது மின்சாரம் மீண்டும் கிடைக்கும் என்பது தெரியவில்லை. மேலும் இந்த பனிப்பொழிவால் தடுப்பூசி செலுத்தும் பணிகளும், தடுப்பூசி சேமித்து வைக்கும் வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பனி பொழிவை அடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த […]
உதகையில் புல்வெளிகள் மீதும் விவசாய நிலங்கள் மீதும் வெள்ளைக் கம்பளம் போற்றியது போல் உறைபனி காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் தொடங்கும் உறைபனி பருவம் பிப்ரவரியில் விலகத் தொடங்கும்.ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பனிப் பொழிவின் தாக்கம் நேற்றுமுதல் அதிகரித்து காணப்படுகிறது. உரைபனியின் தாக்கத்தால் தாவரவியல் பூங்காவில் குளிர் நிலை பூஜ்ஜியம் டிகிரியை தொட்டது. மிதமிஞ்சிய கடும் குளிரால் புல்வெளிகள், விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன. தலை கூந்தல் புல்வெளி வெள்ளை கம்பளம் போல் காட்சியளிக்கின்றது. […]
கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. வடமாநிலங்களில் குளிர்காலம் நிலவி வரும் சூழ்நிலையில் காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதில் இமாச்சல பிரதேசம் தலைநகரான சிம்லாவில் கடும் பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. இதனால் சாலையில், ரயில்வே தண்டவாளங்கள் முழுவதும் பனி படர்ந்து காணப்படுகின்றன. பனி பொழிவில் பல சாலைகள் முடங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் உறைந்து கிடக்கும் பனி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். […]
ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், வீடுகள், மரங்கள், மலைகள் என அனைத்து இடங்களிலும் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. முக்கிய சாலைகளில் பனிக்குவியல்கள் கிடைப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சிம்லாவின் மலைப்பகுதி சாலைகள் வழுவழுப்பாக இருப்பதால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன.
வட இந்திய மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டு புயல்கள் தாக்கின. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. மேலும் பருவ தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வுமையம் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் வட இந்திய மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கடும் குளிருடன் பனிக்காற்று வீசும் என்று இந்திய வானிலை […]
பனிப்பொழிவால் உறைந்த தெருவை கடக்க முயன்ற 9 வயது சிறுமி 40 முறை வழுக்கி விழுந்துள்ளார். உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த சீதோஷ்ண நிலை காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் வலுக்கும் தன்மையுடன் உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு நடை பயணம் மேற்கொள்பவர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள ஒரு தெருவை கடக்க முயன்ற 9 வயது பள்ளிச்சிறுமி 40 […]