Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் தொடங்கிய குளிர் காலம்…. ரத்து செய்யப்பட்ட விமானங்கள்…. கவலையில் அதிகாரிகள்….!!!!

பிரபல நாட்டில்  விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள்  அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. இந்நிலையில் நேற்று இதன்  காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஆயிரத்தி  400-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்றுள்ளது. இந்த பனிப்பொழிவு தொடர்ந்தால் விமான போக்குவரத்து சேவை மிகவும் பாதிக்கப்படும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

ALERT: பனியால் மூழ்கும் நகரங்கள்?…. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் சென்ற சில மாதங்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.,23) அதிகாலை டெல்லியில் 8 டிகிரி செல்சியஸ் அளவில் குளிர் நிலவியது. இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் பல்வேறு சாலைகளில் பனி சூழ்ந்து காணப்பட்டது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இனி வரக்கூடிய சில நாட்களுக்கு டெல்லி, வடஇந்தியா பகுதிகளில் பனிமூட்டமானது நீடிக்கும். அத்துடன் பனியால் நகரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

கடுமையான பனிமூட்டம்… 1/2 மணி நேரம் வானில் வட்டமிட்ட விமானம்… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

தூத்துக்குடியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 6:20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து 39 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல் சுமார் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக வானிலேயே வட்டமிட்டு கொண்டிருந்தது. இந்நிலையில் வானிலை சீராகாத காரணத்தால் அந்த விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, வானிலை சீரடைந்த பின்னர்  விமான சேவை தொடங்கும்  என தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…. எப்போது தெரியுமா…? வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று (பிப் 8) மற்றும் நாளை (பிப் 9) ஆகிய இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் […]

Categories
உலக செய்திகள்

இது எங்களுக்கு ஜாலியா தான் இருக்கு…. பனியில் சறுக்கி விளையாடும் குழந்தைகள்….!!!!

கனடாவின் மேற்கு பகுதியில் ஆர்டிக் பனிப்புயல் காரணமாக கடும் பனிப் பொழிவு  நிலவுகிறது. அங்கு பல்வேறு இடங்களில் -55 சென்டிகிரேடு அளவுக்குக் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் பனிப் போர்வை போர்த்தியது போல் காணப்படுகிறது. இதனிடையில் வான்கூவரில் சாலையோரத்தில் பயணிகள் குவிந்து உள்ளது. இதில் குழந்தைகள் மகிழ்ச்சியாக சறுக்கி விளையாடி வருகின்றனர். மேலும் கேல்கரி பனிமலையில் பொதுமக்கள் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில்…. கடும் பனிமூட்டம்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. நீர்நிலைகள் நிரம்பி.வழிந்தது  இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை சற்று குறைய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பனி விழ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக காணப்படும் கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச […]

Categories
உலக செய்திகள்

பனிமூட்டம் காரணமாக…. ஓட்டுனர்களிடையே குழப்பம் நீடிப்பு…. மஞ்சள் எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

பிரித்தானியாவில் பனிமூட்டம் காரணமாக அதிகாரிகள் மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளனர். பிரித்தானிய நாட்டில் கடும் பனிமூட்டம் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டுனர்களால் சாலையில் குழப்பம் நீடிக்கும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு உட்பட நார்விச், லண்டன் மற்றும் கேண்டர்பரி ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, “மூடுபனி காரணமாக வாகன ஓட்டுனர்களுக்கு சாலையில் அதிகம் கவனம் வேண்டும். வாகன ஓட்டுனர்களுக்கு […]

Categories

Tech |