தமிழகத்தின் ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்றும் அவர் கூறியுள்ளார். சமீப காலமாக பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் நியமனம் மாற்றம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.. இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Tag: பன்வாரிலால் புரோஹித்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. ஆண்டுதோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும், ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தாமதமாகியுள்ளது. இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். விரைவில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளுநர் உரையில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் […]
இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் பழனிசாமி சந்திக்க உள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தொற்று அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது. இந்த […]