Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் உட்பட 13 பேருக்கு பயணத்தடை… ரஷ்யா அதிரடி அறிவிப்பு…!!!

பிரிட்டன் நாட்டின் பிரதமரான போரிஸ் ஜோன்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக் போன்ற 13  நபர்களுக்கு ரஷ்யா பயணத் தடை அறிவித்திருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் சந்தித்தார். அதனைத்தொடர்ந்து ரஷ்யா, போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டிற்குள் வர பயணத்தடை விதித்தது. இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சத்தின் அறிக்கையில், உக்ரைன் பிரச்சினையில் தற்போது வரை இல்லாத வகையில் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரிட்டனைச் சேர்ந்த 13 அரசியல் தலைவர்களுக்கு தங்கள் […]

Categories
உலக செய்திகள்

“அத்தியாவசியமில்லாமல் இந்த நாட்டிற்கு செல்லாதீர்கள்!”….. பிரான்ஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!

பிரான்ஸ் அரசு ஓமிக்ரோன் தொற்று காரணமாக இங்கிலாந்திற்கு அத்தியாவசியமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு தடை அறிவித்திருக்கிறது. தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வருவதால் உலக நாடுகள் பல விதிமுறைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே, பிரான்ஸ் அரசு அத்தியாவசியமில்லாமல் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்கு தடை அறிவித்திருக்கிறது. மேலும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும், செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த கட்டுப்பாடு உண்டு என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

“பயணத்தடைகளால் ஓமிக்ரான் வைரஸை தடுக்க முடியாது!”… -உலக சுகாதார மையம்…!!

உலக சுகாதார மையம், பயண தடைகள் விதிப்பதன் மூலம் ஓமிக்ரான் வைரஸை தடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவுடன், உலக நாடுகள் அந்நாட்டின் மீது பயணத் தடை விதிக்க தொடங்கியது. அதனையடுத்து இந்திய அரசு, பிரிட்டன், பிரேசில், சிங்கப்பூர், சீனா, நியூசிலாந்து, இஸ்ரேல், ஜிம்பாப்வே, வங்கதேசம், மோரிசியஸ் மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறது. இந்நிலையில் உலக சுகாதார […]

Categories
உலக செய்திகள்

“தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத்தடை!”… பிரபல நாடு அறிவிப்பு…!!

கனடா அரசு 7 தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் தடைவிதிப்பதாக அறிவித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஓமைக்ரான் என்ற புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. அந்த வைரஸ், அதிக வீரியம் மிக்கது என்றும் விரைவில் பரவும் திறன் கொண்டது என்றும்  விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தென் ஆப்பிரிக்க நாடுகள் மீது பயணத்தடை விதித்து வருகிறது. இந்நிலையில், கனடா அரசும், தங்கள் நாட்டிற்குள் அந்த வைரஸை பரவ விடாமல் தடுப்பதற்காக  ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக் மற்றும் நமீபியா […]

Categories
உலக செய்திகள்

“புதிய வகை மாறுபாடு எதிரொலி!”…. 8 நாடுகளுக்கு பயணத்தடை விதித்த அமெரிக்கா….!!

அமெரிக்க அரசு, புதிய வகை கொரோனா தொற்று பரவுவதால் 8ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு வரும் 29ஆம் தேதியிலிருந்து 8 நாடுகளுக்கான பயணத்தடை  நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது. போஸ்வானா என்ற தென்னாப்பிரிக்க நாட்டில் Omicron என்ற புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, ஜிம்பாப்வே, மலாவி, லெசோதா, ஈஸ்வதினி, போஸ்வானா, நமீபியா, மொசாம்பிக் மற்றும் தென்னாப்ரிக்கா […]

Categories
உலக செய்திகள்

இந்த 3 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி இல்லை.. பயண தடையை நீடித்த இத்தாலி..!!

இத்தாலி அரசு இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு பயண தடையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.    இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. எனவே இத்தாலி அரசு கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசியில் இந்திய மக்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதிப்பதாக அறிவித்திருந்தது. இந்த கட்டுப்பாடு, இன்றுடன் முடிவடைந்தது. எனினும் இந்தியாவில் தற்போதும் கொரோனா பரவல் இருப்பதால், ஜூன் 21ம் தேதி வரை இத்தடையை  நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா […]

Categories
உலக செய்திகள்

குழந்தையை தத்தெடுக்க வந்த தம்பதி.. சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிப்பு..!!

கனடாவை சேர்ந்த தம்பதி, குழந்தையை தத்தெடுக்க இந்தியா வந்த நிலையில், பயண தடையால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   கனடாவிலுள்ள ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் தம்பதி Hari Gopal Garg மற்றும் Komal Garg. இவர்கள் இந்தியாவில் ஒரு குழந்தையை தத்தெடுக்க கடந்த மார்ச் மாதம் வந்திருக்கிறார்கள். அவர்கள் கனடாவிற்கு திரும்ப இரண்டு நாட்கள் இருந்தபோது இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இதனால் கனடா செல்லும் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் கனடா அரசு தங்கள் […]

Categories
உலக செய்திகள்

கனடா மற்றும் இந்தியாவால் கைவிடப்பட்டோம்.. தாயின் இறுதிச்சடங்கிற்கு வந்த குடும்பத்தின் நிலை..!!

கனடா குடியுரிமை பெற்ற குடும்பம் தாயின் இறுதிச்சடங்கிற்காக இந்திய வந்த நிலையில், பயண தடையால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது.   கனடாவின் குடியுரிமை பெற்று Anurag Sharma என்பவரின் குடும்பத்தினர் கடந்த மார்ச் மாதத்தில் அவரது தாயின் இறுதிச் சடங்கிற்காக இந்தியாவிற்கு வந்துள்ளனர். இறுதி சடங்கு முடிவடைந்த பின்பு மே 2 கனடா செல்ல டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் கனடாவிற்கு செல்லும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பயணம் ரத்தானதால் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு தடை.. பிரபல நாடு அறிவிப்பு..!!

அமெரிக்கா, வரும் மே 4 ஆம் தேதியிலிருந்து இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு தடை விதித்திருக்கிறது.  இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. எனவே அமெரிக்க அரசு, தங்கள் குடிமக்களை இந்தியாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது. இதனிடையே இந்தியாவிலுள்ள அமெரிக்க மக்கள் உடனடியாக நாடு திரும்புமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து இருப்பதால் எல்லா வகையான மருத்துவ சேவைகள் பெறுவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் பாதிப்பு அதிகம்…. ஆபத்து பட்டியலில் சேர்க்கும் ஜெர்மனி…. இந்திய பயணிகளுக்கு தடை….!!!

இந்தியாவில் குறைவான பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் ஜெர்மனிக்கு வருவதை ரத்து செய்துள்ளது. இந்தியாவின் கொரோனாவின் 2 வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்  பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3 வது நாளாக 3 லட்சத்திற்கும் மேலானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,264 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதனை  கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையிலும் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. ஆகையால் இந்தியாவுடனான போக்குவரத்தில் சில […]

Categories
உலக செய்திகள்

இந்தியா, மிக அதிக ஆபத்தா..? பயணத்தடை விதித்துள்ள நாடு.. வெளியான முக்கிய தகவல்..!!

ஹொங்ஹொங் அரசு இந்தியா உட்பட 3 நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்திருக்கிறது.  ஹொங்ஹொங் அரசு வரும் ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை அறிவித்துள்ளது. ஹொங்ஹொங்கில் முதன் முதலாக N501Y covid-19 கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 2 வாரங்களுக்கு இந்த தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் குறிப்பிட்ட மூன்று நாடுகளும் “மிக அதிக ஆபத்து” என்று வகைப்படுத்தப்படுவதாகவும் […]

Categories

Tech |