தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சம்பா தாளடி பயிர் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வழங்கப்படுவதோடு, போதுமான அளவு உரமும் இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி விவசாயிகளுக்காக 200 கோடி ரூபாய் வரை வட்டியில்லா […]
Tag: பயிர்க்கடன்
கீழையூரில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் ஒன்றிய பகுதியில் குறுவை சாகுபடி நிறைவு பெற்று அறுவடைக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் சம்பா சாகுபடிக்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றது. மேலும் அதற்காக கீழையூரில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் சம்பா சாகுபடிக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பால்ராஜ் தலைமை […]
கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை தவிர்த்த, 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 4,451 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. அதற்கு 7% வட்டி செலுத்த வேண்டும். இதையடுத்து கடன் வாங்கிய ஒரு வருடத்திற்குள் வட்டி மற்றும் அசல் செலுத்தினால் வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியின் போது கூட்டுறவு நிறுவனங்களில் 16 லட்சம் விவசாயிகள் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர் கடனை […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து சேலம் மற்றும் நாமக்கல் […]
புதிதாக பயிர்க்கடன் தேவைப்படும் விவசாயி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை நாடி பயன் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.லெட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தகுதியுள்ள அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் குறுகியகாலப் பயிர் கடன் வழங்கப்படவுள்ளது. இந்த வருடம் மாவட்டத்தில் பயிர் கடன் வழங்க 70 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.43.22 கோடி […]
பயிர்க்கடன் கிடைக்காமல் தவித்து வரும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்னர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகிறது. இங்கு அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் வட்டியில்லா பயிர்க்கடன் கொடுக்க கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் வட்டியில்லா பயிர்க்கடன் பெற கூட்டுறவு வங்கிகள் ஒரு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதில் மற்ற வங்கிகளில் தடையில்லா சான்று பெற்றுவர நிர்பந்தம் செய்கிறது. மேலும் […]
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், கூட்டுறவு துறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளன. அவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. மிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எந்த அளவுக்கு அதிமுகவினர் முறைகேடுகள் செய்துள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது தகுதியுள்ள அனைவருக்கும் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முறைகேடு ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். […]
தமிழகத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இதற்கிடையில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன், நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை மக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் அந்த அறிவிப்பு தாமதமாவது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் விளக்கமளித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, விவசாய பயிர்க் கடன் ரூபாய் 2,393 கோடிக்கும் மேலாக நிலத்தின் அளவிற்கு மேலாக கடந்த […]
அதிமுக ஆட்சியில் பயிர் கடன் வழங்குவதில் 516 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆட்சியில் பயிர்க்கடன், நகைக்கடனுக்காக மூன்றே நாட்களில் 16 லட்சம் பயனாளர்களை தேர்வு செய்வது எப்படி என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு துறை மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆகிய மாநிலங்களின் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்குப் பின்னர் பதில் உரையாற்றிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதிலளித்து பேசினர். இதில் விவசாயிகளுக்கான பயிர்க்கடனை 5 சதவீதம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் பயிர்க் கடன் வழங்கியதில் ரூ.516 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். சிட்டா அடங்கலில் குறிப்பிடப்பட்ட சாகுபடி நிலங்களின் […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர். இதில் விவசாயிகளுக்கான பயிர்க்கடனை 5 சதவீதம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதன்படி இந்த வருடம் விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை நிறுவனங்கள் மூலம் ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் […]
திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தான் பெற்ற பயிர்க் கடனை அடைக்காததன் காரணமாக அவருடைய வங்கி கணக்கை பொதுத்துறை வங்கி முடக்கியது. இந்நிலையில் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது தன்னுடைய மருத்துவத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது. ஆனால் வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் பணத்தை எடுக்கமுடியாமல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தனக்கு வேதனை அளிப்பதாக கூறிய ராமதாஸ், பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த விவசாயினுடைய குடும்பத்திற்கு ரூபாய் 50 […]
தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் அறிவித்து வருகிறது. அதன்படி தமிழக விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடிக்கு மேல் பயிர்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “விவசாய பணிகளுக்காக பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் நிர்ணயித்த விலைக்கு மேல் காய்கறிகள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு பற்றாக்குறை இல்லாமல் அனைத்து உரங்களையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய போவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்த வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் விவசாயிகள் பயிர்க் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். கொரோனா, நிவர் […]