சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் கவிதா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அமைந்துள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. அதில் அரக்கோணத்தை சேர்ந்த காவலர் கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள […]
Tag: பரபரப்பு
தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் அழைப்பு வந்துள்ளது. அதனால் பதறிப்போன போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மிரட்டல் விடுத்தது கடலூரை சேர்ந்த ஒரு சமையல் மாஸ்டர் என்பது தெரியவந்துள்ளது. அவர் உதயநிதியின் ரசிகனாக இருந்ததாகவும், தனக்கு படத்தில் வாய்ப்பு கிடைக்காததால் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மீண்டும் தோல்வி அடைந்தது. இதையடுத்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது. இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கேப்டன் கோலியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு பிறந்த பெண் குழந்தை வாமிகாவையும் ஆபாசமாக பேசி வக்கிரத்துடன் பல ட்வீட்டுகள் பதிவிட பட்டு வருகின்றன. கேபிஸ்தான் ரேடியோ என்ற பக்கம் கோலியின் மகள் […]
நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிடங்கள் குறித்து குடும்ப டாக்டர் ரமண ராவ் சில தகவல்களை தெரிவித்துள்ளார். நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவரது இறுதி சடங்கு இன்று பெங்களூருவில் நடைபெற்றது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து, அவரின் குடும்ப டாக்டர் ரமண ராவ் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “நடிகர் புனித் குமார் மற்றும் அவரது மனைவி அஸ்வினுடன் நேற்று காலை 10 மணி […]
பிரதமர் நரேந்திர மோடியை வேண்டுமானால் மக்கள் நீக்க முடியும். ஆனால் பாஜக இன்னும் பல ஆண்டுகளுக்கு யாராலயும் அசைக்க முடியாது என்று அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். பாஜகவுடன் நாம் இன்னும் பல ஆண்டுகள் போராட வேண்டியிருக்கும். பாஜக வென்றாலும் சரி தோற்றாலும் சரி இந்திய அரசியலின் மையமாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு முதல் 40 ஆண்டுகள் எப்படியோ பாஜகவுக்கும் அப்படிதான். பாஜக எங்கும் […]
திருப்பத்தூர் மாவட்டம் அருகே சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பெண்ணின் தலையை மர்மநபர்கள் வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பாரதிதாசன் என்ற நகரில் கிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவரின் மனைவி மாதம்மாள் (45)உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு சுடுகாட்டில் சடலத்தை புதைத்தனர். இந்நிலையில் மாதம்மாள் புதைக்கப்பட்ட இடத்தில் பால் […]
சென்னை பட்டினப்பாக்கத்தில் சேர்ந்த தடகள வீராங்கனை (27)தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனை சடலமாக கண்டெடுக்கப்பட்ட வீட்டிலிருந்து நீலாங்கரை காவல் நிலைய தலைமைக் காவலர் முகிலன் தப்பி சென்றதாக தகவல் வெளியானது. தப்பி ஓடிய காவலரை விரட்டி பிடித்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக அவர் தப்பி ஓடினார், ஏன் வீராங்கனை தற்கொலை செய்து கொண்டார் போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் […]
டிக் டாக்கில் சில நாட்களாக மிகப் பிரபலமாகி வலம் வந்தவர் ரவுடி பேபி சூர்யா. அவர் இதுவரை பலரைப் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு படிப்பதற்காக இணையத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இதனை கெடுக்கும் வகையில் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். எனவே ரவுடிபேபி சூர்யாவை கைது செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் […]
விசாரணைக்கு சென்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள ஓலைக்குடா பகுதியில் ரூபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், அவரது உறவினர்களான புதுமைப்பித்தன், டேவிட், ஆல்ட்ரின் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் ரூபன் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரூபன் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அவரது தாயுடன் […]
அவ்வப்போது ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கும் நடிகர் மன்சூர் அலிகான், தற்போது அரசு நிலத்தை ஆட்டைய போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சென்னை சூளைமேட்டில் அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து மன்சூர் அலிகான் வீடு கட்டியுள்ளார். சென்னையில் பல்வேறு இடங்களில் இவருக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. அவ்வகையில் சூளைமேடு பெரியார் பகுதியிலும் இவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை 2,500 சதுர அடி அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ளார். இதுதொடர்பாக […]
காரைக்கால் தேவமணி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திருநள்ளாறு பகுதியில் பதற்றம் மற்றும் கலவரத்தை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவ மணியின் உடல் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் மருத்துவமனை மற்றும் தேவ மணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருநல்லாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக கூலிப்படையை வைத்து யாரோ கொலை செய்து இருக்கலாம் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பள்ளி வளாகத்தில் புதிய காரை ஓட்டிப் பார்த்து ஆசிரியை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிய காரை ஓட்டிய போது நிலைதடுமாறி சுவற்றில் மோதியதில், ஆசிரியை அமராவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியை உயிரிழந்ததை அடுத்து அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மாநிலம் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் முக்கிய பகுதிக்கு அருகில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் சோனிபட் பகுதியில் உள்ள குண்டலியின் வாலிபரை கொன்றதாக சிக்கிய குழுவான நிஹாங்ஸ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சீக்கியர்களின் புனித நூலை அவமதித்ததாக கூறி, அந்த வாலிபரை நிஹாங்ஸ் குழு அடித்துக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வாலிபரை அடித்துக் கொன்று உடலை போலீஸ் […]
மாவோயிஸ்டுகள் 2 பேர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள எண்டப்புளி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவோயிஸ்ட் ஆக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு காவல்துறையினர் வேல்முருகன் மற்றும் அவருடன் இருந்த பழனிவேல், முத்துச்செல்வம் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து வேல்முருகன் கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் மாவோயிஸ்ட் […]
புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்க்கு வார்டு வரையறை செய்யவில்லை எனக்கூறி, உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என கோரி நடைபெறும் முழு அடைப்பால் மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. அரசு பேருந்தும் குறைந்த அளவிலேயே இயங்குகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பேருந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில் பெட்ரோல் விலை 35 ரூபாய்க்கு குறைக்கப்பட்டதாக தகவல் பரவியதால், கேரள மக்கள் தமிழகம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 குறைந்து முதலமைச்சர் உத்தரவிட்டதாக படத்துடன் வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் பெட்ரோல் விலை 65 ரூபாய் மட்டுமே எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை உண்மை என நம்பி இடுக்கி மாவட்டம் பூப்பாறை, ராஜாக்காடு, சாந்தாம்பாறை உள்ளிட்ட கேரள எல்லையோர மக்கள் ஏராளமானோர் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் வாங்க குவிந்தனர். […]
கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் அருகிலுள்ள தாரநல்லூரில் மணிகண்டன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.இவர் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒன்றரை வயது மகள் மகா ஸ்ரீ உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த போது, தனலட்சுமி இவர்களுக்கு மதிய உணவு தயார் செய்து வைத்திருந்தார். அப்போது அவரின் மகள் கிருபா ஸ்ரீ சமையலறைக்குச் சென்று சாம்பார் வாளியை தள்ளிவிட்டதால் குழந்தை மீது சூடான சாம்பார் கொட்டியது. அதன் பிறகு குழந்தையை ஜிம்பர் மருத்துவமனையில் அனுமதித்து […]
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மத்திய அமைச்சரின் மகன், விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரியானாவில் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் நாராயண்கன் என்ற இடத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் விவசாயிகள் மீது பாஜக எம்பி நயாப் சைனி கார் மோதியதில் விவசாயி ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் […]
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 14,662 இடங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள், அழியாத மை ஆகியவை வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு மாலை 6 மணி […]
தமிழ் திரைப்பட உலகில் சமந்தா தனக்கென்று ஒரு ரசிகர்களின் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். அவர் சமீபகாலத்தில் . தான் காதல் திருமணம் செய்த நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருந்தார். இந்தச் செய்தி இணையதளங்களில் காட்டுத்தீயை போல் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அவரது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளத்தில் அக்கினேனி என்ற தனது கணவர் குடும்பப் […]
புதுச்சேரியில் உள்ள பெரியார் நகரில் குடிசை மாற்று வாரிய அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உயர் அதிகாரிகள் இந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தலைமையில் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் […]
கோவை மாவட்டத்தில் ரெட் பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சிக் கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக டெல்லியில் இருந்து வந்த பெண் அதிகாரியை மற்றொரு அதிகாரி அமித்தேஷ் ஹர்முக் என்பவர் பலாத்காரம் செய்ததாக கமிஷனர் அலுவலகத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறியிருப்பது, டெல்லியை சேர்ந்த நான் விமானப்படையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகின்றேன். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியிலிருந்து பயிற்சிக்காக கோவை மாவட்டம் ரெட் பீல்டில் உள்ள விமானப்படை நிர்வாகவியல் […]
நெய்வேலி அடுத்த தெற்கு வெள்ளூர் கிராமத்தில் சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதியதால் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். என்எல்சி சொசைட்டி தொழிலாளி வேல்முருகன் என்பவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற நிலையில் வேகமாக வந்த மினி லாரி அவர்களின் வாகனம் மீது மோதி கவிழ்ந்தது. அந்தக் கோர விபத்தில் பலத்த காயமடைந்த மாணவி, சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக […]
சென்னை கோயம்பேட்டில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்து புகை வந்தபோது பயணிகள் வெளியேறியதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேறிய பிறகு பேருந்தில் தீ கொழுந்து விட்டு எரியும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்,நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். பேருந்தில் ஏன் திடீரென தீப்பற்றி […]
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பர் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் முன்பு திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து போலீஸ் விசாரணை செய்தபோது, வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் சுயேட்சையாக நிற்கிறேன் என்றும் தன்னை தேர்தலிருந்து விலகுமாறு சிலர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார் . இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிகிச்சை […]
சேலம் மாவட்டம் இடைப்பாடியில், பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விசைத்தறி தொழிலாளி. தர்மபுரி மாவட்டம் பாரிஸ் நகரில் இலக்கியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிப்பதற்காக பேருந்தில் சென்று வந்த போது பாலமுருகன் உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு 7 மாத பெண் […]
நீட் தேர்வுக்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே,மாணவர்களின் உத்தேச மதிப்பெண்களை நீட் பயிற்சி மையங்கள் விளம்பரமாக வெளியிட்டுள்ளதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு நடைபெற்று முடிந்து இன்றுடன் இரண்டு வாரம் நிறைவு பெற இருக்கிறது. இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆனால் தங்களது நீட் தேர்வு மையங்களில் பயின்ற மாணாக்கர்களின் பெயிட்டர் மார்க்ஸ் எனப்படும் உத்தேச மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை நாளிதழ்களில் தனியார் பயிற்சி மையங்கள் விளம்பரமாக வெளியிட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு நீட் பயிற்சி […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சுயேட்சையாக களம் இறங்குகின்றனர். அதன்படி உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் அவரது ரசிகர்கள் ஆங்காங்கே பல்வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்திய தொகுதியில், “2024 […]
நெல்லை அடுத்த நாங்கு நேரியில் எம்எல்ஏவை காணவில்லை என்று எழுதப்பட்டுள்ள வாசகம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் நான்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரூபி.மனோகரன். நான்குநேரி தொகுதியை தமிழகத்தின் முன்னணி தொகுதியாக மாற்றுவேன் என்று கூறி வாக்கு சேகரித்தவர் ரூபி.மனோகரன் என்றும், போக்குவரத்து பிரச்சனை குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் நாங்குநேரி பேருந்து நிலையத்தில் வில்லுக்கு விஜயன் சொல்லுக்கு […]
பெங்களூரில் உள்ள திகழரபாளையா அருகே உள்ள சேத்தன் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவியும் சிஞ்சனா, சிந்து ராணி என்ற இரண்டு மகளும் ,மது சாகர் என்ற ஒரு மகனும் உள்ளனர். சிஞ்சனா மற்றும் சிந்து ராணி இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி கணவருடன் சேர்ந்து வாழாமல் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர். சிஞ்சனாவுக்கு 3 வயதில் பெண் குழந்தை, சிந்து ராணிக்கு 9 மாத […]
உத்தரபிரதேச மாநிலத்தில் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வினோத் குமார் சர்மா வசித்துவருகிறார். இவர் வக்கீல் தொழில் செய்வது மட்டுமல்லாமல் நில பதிவுக்கான முத்திரைத் தாள்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகின்ரறார். இந்நிலையில் நேற்று இவர் தனது வாடிக்கையாளர் ஒருவரிடம் முத்திரைத் தாள்களை வாங்குவதற்காக 2 லட்சத்தை பணத்தை பெற்றுக்கொண்டு அலுவலகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு குரங்கு அவரது பணப்பை பறித்து அவரே எதிர்பாராத […]
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில், தியாகராஜன்- மேரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர் . இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவர்களின் வீட்டில் போதிய வசதி இல்லாத காரணத்தாலும், சூசை மேரி வேலைக்கு சென்று வருவதாலும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள இயலவில்லை. அதனால் தன்னுடைய இரண்டாவது குழந்தை மகள் கீர்த்தி மற்றும் மூன்றாவது குழந்தை மகன் ஆபேல் ஆகிய இருவரையும் தாம்பரத்தை சேர்ந்த, சூசை மேரியின் சகோதரியான டார்த்தியின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். […]
தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சட்டப்பேரவையில், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார். இதற்கு தகுதியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே […]
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி ,தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.அதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாவட்ட வாரியாக பாஜக சார்பில் பொறுப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கோவை தெற்கு […]
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம். அவரின் செயல்பாடுகளை விமர்சிக்கக் கூடியமதுரை மாநகர் முழுவதும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பிற்கு ரூ.5 லட்சம், பகுதி செயலாளர் பொறுப்பிற்கு மூன்று லட்சம், மாவட்ட பிரதிநிதி பொறுப்பிற்கு 3 லட்சம், வட்ட செயலாளர் பொறுப்பிற்கு ரூ.2.50 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு குண்டாஸ் பெற்றவர்கள் தகுதி உடையவர்கள் என்றும், “உழைப்பவனுக்கு ஒன்றுமில்லை, […]
கொல்லிமலைக்கு அருகே புதருக்கு நடுவில் காவல்துறை அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிப்பட்டியில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து ஆனந்தன் அடிக்கடி அவரது நண்பர்களுடன் கொல்லிமலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று கொல்லிமலை அருகே உள்ள சோளங்கன்னி […]
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் சாம்சங் ஸ்மார்ட் போன் வெடித்து சிதறியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூ ஆர்லின்சில் இருந்து சியாட்டில் நோக்கி சென்று கொண்டிருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் சாம்சங் கேலக்ஸி ஏ21 திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. அதனால் விமானம் மிக அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் பற்றி […]
புதுக்கோட்டை அருகே உள்ள கைகுறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்த ராணி என்ற பெண், பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ராணி. இந்நிலையில் ராணிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மீண்டும் […]
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா தனக்கு ஆண்மை இல்லை என்று சிபி சிஐடி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். சிவசங்கர் பாபா மீதான பாலியல் குற்றச்சாட்டில் அவரது பள்ளியில் படித்த 3 மாணவிகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மூன்று வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மாணவிகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்கில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் […]
கொரோனா தாக்கம் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் சென்று வழிபட அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்றும் கோவில்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில் நேற்று வரலட்சுமி நோன்பு, சிவ பக்தர்களுக்கு முக்கியமான பிரதேஷம் மற்றும் ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளாகும். இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று வழிபாடு நடத்தினர். மேலும் முகூர்த்தநாள் என்பதால் ஏற்கனவே கோவிலில் பதிவு செய்திருந்த திருமணங்கள் மட்டும் கோவிலுக்குள் நடந்தது. கோவிலில் பதிவு செய்யப்படாத திருமணங்கள் […]
மகராஷ்டிரா மாநிலம் புனே அவுந்த் பகுதியில் பிரதமர் மோடிக்கு அந்த பகுதியை சேர்ந்த பாஜக தொண்டரான மயூர் முண்டே(37) என்பவர் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கோவில் கட்டினார். கோவிலுக்குள் மோடியின் மார்பளவு சிலையும் வைக்கப்பட்டது. இந்தநிலையில் கோவில் திறக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே, அதில் இருந்த மோடியின் சிலையை மயூர் முண்டே அகற்றி விட்டார். சிலையை அகற்றியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. அவர் யாராலும் மிரட்டப்பட்டாரா? என்பதும் தெரியவில்லை. இந்தநிலையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் […]
மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியாக தான் பதவி ஏற்றுக்கொண்டதாக நித்யானந்தா பரபரப்பை கிளப்பியுள்ளார். மதுரை ஆதினம் தமிழகத்தின் மிக பழமையான சைவ சமய திருமடங்களில் ஒன்று. இதன் தலைவர் ஆதீனம் பீடாதிபதி என்று அழைக்கப்படுவார். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்டது. 292-வது பீடாதிபதியாக அருணகிரி என்பவர் இருந்து வந்தார். தற்போது அவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமான நிலையில், 293வது பீடாதிபதியாக நித்தியானந்தா தேர்ந்தெடுக்கப்பட்டதாக […]
நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி மீராமிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இருந்தபோதிலும் மீராமிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் என்னை […]
மும்பையில் 15 வயது சிறுமி ஒருவர் தன் தாய் நீட் தேர்வுக்கு படிக்க கட்டாயப்படுத்தியதால் அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு டாக்டர் படிக்க விருப்பமில்லை. ஆனால் தாய் தன்னை கட்டாயப்படுத்தி கத்தியை எடுத்து வந்து படிக்க சொல்லி மிரட்டினார். அவரை தள்ளி விட்டபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டது. அதன் பிறகு பெல்டால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று சிறுமி கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி விருகாவூர் கிராமத்தில் செந்தில் என்பவர் டாஸ்மாக் மதுவை குடித்து மூக்கில் ரத்தம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் 150 ரூபாய் மதிப்புள்ள மதுபானம் ஒன்றை குடித்துள்ளார். சிறிது நேரம் கழித்து உடனே மூக்கிலிருந்து இரத்தம் வந்துள்ளது. இதையடுத்து செந்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் மற்றொரு சரக்கில் பாட்டில் குப்பை மற்றும் பூச்சி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் சோதனை செய்து தரமில்லாத மதுவை விட்டு மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் கைக்குழந்தையுடன் சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சீலையம்பட்டி பகுதியில் தம்பிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகள் முன்பு திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவர் மாணவி இடையே வந்த தகராறில் தம்பிதுரை மனைவியை பிரித்து சென்றுள்ளார். […]
மதுராந்தகம் அருகே தீபாவளி சீட்டு பணம் மற்றும் அடகு வைத்த 500 சவரன் நகை என ரூ. 2 கோடியுடன் நகைக்கடை அதிபர் திடீர் என தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், ராஜஸ்தானுக்கு தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முதுகரை கிராமம் உள்ளது. இங்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் ஸ்ரீகிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை […]
திரிபுராவில் முதல்வர் பிப்லாப் குமாரை கொலை செய்ய சில மர்ம நபர்கள் முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வழக்கம்போல நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அதி வேகமாக வந்த கார் அவர் மீது மோத சென்றது. சுதாகரித்துக்கொண்டு தாவி அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜப்பான் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது. இந்நிலையில் அதில் இடம்பெற்றிருந்த உத்தரகாண்ட் ஹரித்வார் கிராமத்தை சேர்ந்த வீராங்கனை வந்தனா கத்தாரியாவின் வீட்டின் முன் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த இருவர் பட்டாசு வெடித்து தோல்வியை கொண்டாடியுள்ளனர். மேலும் அவரது குடும்பத்தையும் இழிவு செய்து,தலித்துகள் அணியில் இருப்பதால் தோற்றதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் ராப் சிங்கர் பாடகர் யோ யோ ஹானி சிங். பஞ்சாபியை தாய் மொழியாகக் கொண்ட இவர், இந்தி மற்றும் பஞ்சாபியில் அதிக பாடல்களைப் பாடியுள்ளார். அதோடு சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் மீது அவரது மனைவி, ஷாலினி தல்வார் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின்’ கீழ் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது கணவர் ஹானி சிங் தம்மை உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக […]