திருப்பூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் ஜோதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்.இவர் மீது ஊரக காவல் நிலையத்தில் ஒரு சில வழக்குகள் நிலுவையில் உள்ளது .அதனால் அவரை வீட்டிலிருந்து காலை 6 மணி அளவில் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.அங்கு போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த பொழுது மணிகண்டன் மயங்கி விழுந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.இதற்கிடையே உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர்.இதனையடடு த்து சிகிச்சைக்காக […]
Tag: பரபரப்பு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடையால் ஆக்சிஜன் தடைபட்டு இரண்டு நோயாளிகள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தினர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு உடல் பாதிப்பு காரணமாக சுமர் 300க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் அங்கேயே சிகிச்சை பெற்று வந்தார்கள் . இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் பல்வேறு உடல் உபாதைகளுடன் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , இன்று காலை 10 மணிக்கு மின்தடை ஏற்பட்டதால் கௌதம் என்ற நபரும் யசோதா என்ற பெண்மணி இருவரும் […]
மயிலாடுதுறையில் ,கோலம் போட வந்த 40 வயதுடைய பெண்ணை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழிக்கு அருகே உள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த ஜோதி,அங்குள்ள ஒதவந்தான்குடி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவந்துள்ளார்.இவரது மனைவி சித்ரா,இன்று காலை அவரது வீட்டின் வாசலில் கோலம் போடுவதற்காக வெளியில் வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரின் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.பலத்த காயமடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த […]
கேரளாவில் எஸ்டிபிஐ கட்சி உறுப்பினர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பூர்விகமாகக் கொண்ட சலாவுதீன் என்பவர் எஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் பின்தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று காரை இடித்துத் தாக்கியது.இதையடுத்து சலாவுதீன் காரை விட்டு இறங்கி பார்த்த போது, இன்னொரு பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. பின்னர் இரு குழுக்களும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தை […]
பிரபல நடிகை கைது செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கின்றது. நிமிர்ந்து நில்லு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ராகினி திவேதி போதைப்பொருள் கடத்தல் பிரிவில், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த போதை பொருள் கடத்தலில் கேரள நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை முதல் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக தொடர் விசாரணை நடிகை ராகினி […]
அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் எப்.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் அமெரிக்க நாட்டின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் குவான் லீ என்பவர் தனது வீட்டு அருகே உள்ள குப்பைத் தொட்டியில் சேதமடைந்த டிரைவை எறிந்ததற்காக அமெரிக்க நாட்டின் எப்.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு மிக முக்கியமான தொழில் நுட்பமென்பொருள் அல்லது அமெரிக்க தரவை மாற்றி அமைப்பதற்காக குவான் லீயிடம் விசாரணை […]
ஒ. பன்னிர் செல்வம் தான் நிரந்தர முதல்வர் என்று தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற மோதல் தீவிரம் அடைந்து இருக்கும் நிலையில், இந்த சுவரொட்டிகள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்ததில் இருந்த சர்ச்சை தொடங்கியது. அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர். பி. உதயகுமார், பாண்டியராஜன், ஜெயக்குமார் […]
கடந்த சில நாட்களாக பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இவர்களின் குடும்பத்தையும் விமர்சித்து நடிகர் சூர்யாவிற்கு நடிக்கத் தெரியாது என்று கூறிய மீரா மிதுன், விஜயையும் விட்டுவைக்கவில்லை. சினிமாவின் மாபியா என்றெல்லாம் விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய் ரசிகர்களும் விமர்சித்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் கொண்ட மீராமிதுன் தற்போது புதிதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கி கொரோனா வைரஸ் இன்று 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் தாக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் இதற்க்கு பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலக அரங்கமே இரவுபகலாக தடுப்பு மருந்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் கொரோனாவுக்கு நிரந்தரமாக மருந்தே கிடைக்காமல் போகலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளது உலகிற்கே பரபரப்பை ஏற்படுத்தி […]
நாட்டையே உலுக்கிய உ.பி போலீசார் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுள்ளார் நாட்டையே உலுக்கிய 8 காவலர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்வதில் முக்கிய பங்காற்றியவர் கான்பூர் மாவட்ட எஸ்.எஸ்.பி தினேஷ் குமார் பிரபு. தினேஷ்குமார் பிரபு தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது தந்தையின் பெயர் பிரபு, அவர் இளங்கலை மேலாண்மை பட்டம் முடித்து, அதன் பின்னர் அகில இந்திய […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் 12 குழுக்களாக பிரிந்து, சாத்தான்குளம் காவல் நிலையம் தொடங்கி கோவில்பட்டி கிளைச்சிறை, ஜெயராஜ் பென்னிக்ஸ் வீடு, கடை சாத்தான்குளம் மருத்துவமனை, கோவில்பட்டி மருத்துவமனை என பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டார்கள், ஆய்வுகளை நடத்தினார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக காவல் ஆய்வாளர்கள், இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை […]
இந்த வழக்கு பதிவின் தொடர்ச்சியாக என்று இரண்டு உதவி ஆய்வாளர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் சித்தரவதை மரணம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க தொடங்கியதிலிருந்து அடுத்தடுத்த கட்டங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் நேற்று நீதிமன்றத்தின் ஆணையின்படி விசாரணைக்கு சென்ற மாஜிஸ்ட்ரேட் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாக நேரடி சாட்சியமாக இருந்த பெண் காவலர் வாக்குமூலம் என்பதும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. […]
மரணமடைந்த தந்தை – மகன் உடல்களை உறவினர்களை பெற்றுக் கொண்டனர். சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள், வணிகர் சங்கங்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர். மேலும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து உடல்களை வாங்கமாட்டோம் என்றும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் உயிரிழந்த ஜெயராஜ் மகள் சொல்லும் போது, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது. வழக்கில் கொலை வழக்கு பதிவு […]
இந்தியா – சீனா மோதல் குறித்த முழுமையான விவரங்களை இன்று ராணுவம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எல்லைப் பிரச்சனை சம்பந்தமாக நிறைய தகவல்கள் திரட்ட வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது . ஏனென்றால் திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் என்பது நிகழ்ந்திருக்கிறது. நிறைய வீரர்கள் காணமால் போயிருக்கலாம் என்றும், நிறைய வீரர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றார்கள். எனவே இந்த தகவல்கள் அனைத்தும் ஒன்றாகத் திரட்டப்பட்டு வருகிறது. அதனால் இன்னும் ராணுவம் சார்பில் இன்னும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறாமல் இருக்கின்றது. […]
வடகொரியா – தென்கொரியா நாடுகளுக்கு இடையே இருந்த தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் சில நாட்களுக்கு முன்பாக வடகொரியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதி சிலர் பலூன்கள் விட்டு வடகொரியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி இருந்தார்கள். அந்த பலூன்கள் வடகொரிய எல்லை தாண்டி வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதனால் வட கொரியாவின் ஆட்சியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை உலகளவில் பரபரப்பை […]
புதுக்கோட்டையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை கிராமத்தில் உள்ள 13 வயது சிறுமி கடந்த மாதம் 18 ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அப்போது அந்த சிறுமி அங்குள்ள தைலமரக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் தந்தை, உறவினர்கள் உள்ளிட்டோர் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]
புதுக்கோட்டை மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தந்தை சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை கிராமத்தில் உள்ள 13 வயது சிறுமி கடந்த மாதம் 18 ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அப்போது அந்த சிறுமி அங்குள்ள தைலமரக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் தந்தை உள்ளிட்டோர் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை […]
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பற்றுள்ளனர். சென்னையில் கொரோனா காரணமாக மருத்துவர் இறந்து போனார். அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் மூலமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய கீழ்பாக்கம் மையானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உரிய அனுமதி பெற்று அங்கு அடக்கம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் திடீரென அந்த பகுதியில் கூடிய பொதுமக்கள் அங்கு வந்து இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அதே போல […]
மதுரை அருகே பெண் குழந்தை என்பதால் எருக்கப்பால் கொடுத்து கொல்லபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செக்கானூரணி அடுத்துள்ள புள்ளநேரி கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சௌமியா , வயிரமுருகன். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. லோடு மேனாக இருக்கும் இவரின் மனைவிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பெண் சிசு பிறந்து 30 நாட்கள் ஆன நிலையில் குழந்தை இல்லாததை கண்ட அண்டை வீட்டார்கள் குழந்தை எங்கே ? என்று […]
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய நபரிடம் இருந்து பணத்தைப் பெற்றுத் தருமாறு சேலத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் அழாகாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த பகுதி மக்களிடம் பணத்தை இரட்டிப்பாகி தருவதாக கூறி மோசடி செய்துள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துக்கின்றனர். மேலும் தனது பெயரில் இருக்கும் சொத்துக்களை அவர் விற்பனை செய்வதை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு பணத்தை மீட்டுக் கொடுக்க […]