தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே கோம்பை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அதிமுக எம்.பியும், பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின் வேலியில் சிக்கி கடந்த 28-ஆம் தேதி 2 வயதுடைய சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற விவசாயியை கடந்த மாதம் 29-ஆம் தேதி வனத்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கால்நடை வளர்ப்போர் […]
Tag: பரபரப்பு
தனியார் பள்ளியில் தேனி கொட்டியதில் 60 மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூரில் கலைமகள் கலாலயா என்னும் தனியார் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் மாலை பள்ளி மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பலமாக காற்று வீசியதில் தேக்கு மரத்தில் இருந்த மலை தேனீக்கள் திடீரென கலைந்துள்ளது. இதனை அடுத்து அதிலிருந்து வெளியேறிய மலைத்தேனீக்கள் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள கேகே நகர் பகுதியில் நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நரேந்திரன் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை நரேந்திரன் முழுவதுமாக திருப்பி செலுத்தியுள்ளார். ஆனால் கடன் கொடுத்த நிறுவனம் 50,000 ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை நரேந்திரன் கடன் செயலியில் செலுத்தியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து பணத்தை […]
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் தனது அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேசிய ரகசிய பேச்சுக்கள் ஆடியோவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த ஆடியோ அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் […]
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி எதிரெதிர் துருவங்களாக மாறிய தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் முதலில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் இபிஎஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஓபிஎஸ். அங்கு தற்போது ஓபிஎஸ்-க்கு சாதகமாகவே நீதிபதிகள் […]
வேலூர் மாவட்டத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மது போதையில் ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். இதனால் ஆட்டோ திடீரென நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலை அருகே கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் பலத்த காயமடைந்த வினோத்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த 2 பேர் அவரை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர். அப்போது இரும்பு லாரி ஒன்று காப்பாற்றுவதற்காக சென்ற 2 பேரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சரவணன் மற்றும் ராஜா என்பவர்கள் […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே செட்டிபாளையம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்பி ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய பல்வேறு விதமான பிரச்சனைகளை பற்றி கூறினர். அப்போது தமிழரசி என்ற பெண் திடீரென எழுந்து நின்று பேசினார். அவர் கூறியதாவது, பெண்களுக்கு இலவச பேருந்து வேண்டாம். இலவசமாக செல்வதால் ஓட்டுநரும், நடத்துனரும் மதிப்பதில்லை. பேருந்து நிறுத்தத்தில் […]
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் மின்சாரம் இரு சக்கர வாகனத்தில் சார்ஜில் இருந்தது. அப்போது அதன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஷபீர் ஷாவாஸ் சிறுவன் பலத்த காயமடைந்தார். அந்தச் சிறுவனை சம்பவம் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து மணிக்பூர் காவல்நிலத்தில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் பிரபலமான சந்திரா என்ற அசைவ உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் சென்னையைச் சேர்ந்த 15 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சப்ளையர் பரிமாறிய கேசரியில் வண்டுகள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் உணவகத்தின் உரிமையாளரிடம் கேசரியில் வண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு உணவகத்தின் உரிமையாளர்கஇப்படித்தான் இருக்கும் வேணும்னா […]
டெல்லியில் ஒரு இளைஞனை 3 பேர் கொண்ட கும்பல் 60 முறை கொடூரமான முறையில் குத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மணிஷ் என்ற இளைஞரிடம் காசிம் மற்றும் முஹ்சீன் என்பவர்கள் செல்போனை பறித்துள்ளனர். அதோடு மணீஷை கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளனர். இது குறித்து மணிஷ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக […]
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா அருகே பிந்துமோன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் நம்பரை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் சங்கனாச்சேரி பகுதியில் செல்போன் இருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதியில் இருந்து பிந்துமான் […]
மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் வஷி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படியாக சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த வருவாய் நுண்ணறிவு இயக்குனராக அதிகாரிகள் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின் போது லாரியில் ஆரஞ்சு பழங்களை வைத்து செல்லும் பெட்டிகள் இருந்துள்ளது. இந்த பெட்டிகளை பிரித்துப் பார்த்தபோது அதில் போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இது மெத்தாம்பொட்டம்மைன் மற்றும் தூய்மையான கொக்கைன் ஆகும். இந்த போதைப் பொருட்கள் சுமார் […]
தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் தேனி எம்.பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியல் திடீரென சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. இதைப்பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையை மீட்பதற்காக போராடினர். ஆனால் சிறுத்தை தானாகவே சோலார் மின்வேலியை விட்டு […]
சத்தீஸ்கரில் பலோட் மாவட்டத்தில் குரூர் கிராமத்தின் தெருக்களில் சந்தேகத்துக்குரிய வகையில் இரண்டு பேர் காவி உடையுடன் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இது பற்றி தகவல் கிடைத்து சென்ற போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இந்து சாமியார்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அதனை நம்ப முடியாத போலீசார் அவர்களிடம் காயத்ரி மந்திரம் மற்றும் மகாமிருத்யுஞ்சய மந்திரம் ஆகியவற்றை உச்சரிக்கும் படி […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு துணை போனதால் தான் மத்திய அரசு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேசுவது சட்டப்படி குற்றம். கடந்த 1991-ம் ஆண்டு அரசு தகவல்களை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கசிய விட்டதால்தான் திமுக இயக்கம் கலைக்கப்பட்டது. பாப்புலர் பிராண்ட் […]
தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து பாக்கியராஜ் மற்றும் ஏ.எல்.உதயா ஆகியோர் நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த பாக்கியராஜ்,புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகள் மற்றும் நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துக்களை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க விதியின் படி உறுப்பினருக்கு எதிராக செயல்பட்ட காரணத்திற்காக இயக்குநர் கே.பாக்யராஜ்,ஏ.எல்.உதயா இருவரையும் 6 மாதத்திற்கு தென்னிந்திய நடிகர் […]
தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து ஆந்திர மாநில அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்துபுரா தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணா சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து இரண்டு முறை இந்துபுரம் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதி பக்கம் வருவதே இல்லை என்று புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் பாலகிருஷ்ணா மீது போலீசில் தொகுதி […]
சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகர் பகுதியில் கன்னியம்மா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானு (23) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக விமல் ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஏஞ்சல் என்ற குழந்தை இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அப்போது பானுவுக்கு ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால் அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் துல்சி நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு மருத்துவ படிப்புக்கு தயாராகும் மாணவிகள் தங்கி படிக்கும் ஒரு விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த விடுதியை காவல் துறையில் கூடுதல் பதவியில் இருக்கும் ஒருவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் விடுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் ஒருவர் ஒரு மாணவி குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைப்பார்த்த சக மாணவி ஒருவர் துப்புரவு தொழிலாளியை […]
உத்தரகண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவ்முண்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவிகள் தங்களுடைய பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல் நிலையத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் […]
மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் அகன்ஷா மோகன் (30) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் மாடலிங் செய்து வருவதோடு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 16-ஆம் தேதி ரிலீசான சியா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில், திடீரென தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அகன்ஷா நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வராததால் […]
திமுக தேர்தல் வாக்குறுதில் ஒன்றான பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருநங்கைகளும் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்தை குறித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் ஓசில்தானே பேருந்தில் போறீங்க என்றும் மற்ற இலவச திட்டத்தையும் குறித்து ஏளனமாக பேசினார். இதனால் பயனாளிகள் மட்டுமில்லாமல் மக்களும் வேதனை அடைந்தனர். இலவசம் என்பதை பெருமையாக வழங்கி வரும் அரசு தனது பயனாளிகளை பார்த்து ஒசி தானே என கேட்பதைப் போல […]
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபமாக வெடித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும், அதன்பின் எடப்பாடியின் மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும் பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் மற்றும் […]
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் மீடியாக்களை எச்சரிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், டிடிஎஃப்வோட பவர் தெரியாம நியூஸ் சேனல் விளையாடிகிட்டு இருக்கீங்க, அப்படின்னு கேட்க தோணுது. ஆனால் நான் கேட்க மாட்டேன். நியூஸ் சேனல் பார்த்து எனக்கு பயம் கிடையாது. உங்களுக்குன்னு ஒரு எல்லை இருக்குது. உங்களோட லிமிடிலேயே இருங்க. என்னை பற்றி போலியான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் . உடனே டிடிஎஃப் வாசன் மிரட்டரான்னு நினைப்பீங்க, நான் மிரட்டல, பிரபல […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனால் மாநில முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் உள்ள மேற்கு காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், எங்களுக்கு எதிரி அல்ல சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என SDPI குமரன் நகர்- PFI குமரன் நகர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது […]
பீகார் மாநிலத்தில் மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் என்பவர் இருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹர்ஜோத்திடம் சில மாணவிகள் எங்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும். இதனால் பிறரை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அரசு பல இலவச திட்டங்களை அறிவிக்கும் போது 20, 30 […]
ஓசூரில் உள்ள கெலமங்கலம் அருகில் புதூர் கிராமத்தில் லக்ஷ்மணன்(50) என்பவர் வசித்து வருக்கிறார். இவர் விவசாயி. இவரது மனைவி உடல் நிலை குறைவால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் . இவருக்கு 2 மகன்களும், தனலட்சுமி(20) என்ற மகளும் உள்ளனர். நேற்று காலை லட்சுமணன் தனது வீட்டின் அருகில் உள்ள வெற்றிலை தோட்டத்தில் புதையலுக்காக ஒரு குழி தோண்டினார். அந்த வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜைகள் செய்ததாக […]
ஜம்மு காஷ்மீர் ஊதம்பூர் மாவட்டம் டொமைல் சவுக்கில் பெட்ரோல் பம்ப் அருகில் பயணிகள் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பேருந்தின் உள்ளே கண்டக்டர் மற்றும் மற்றொரு நபர் இருந்தனர். அதன் பிறகு இரவு 10:30 மணிக்கு அந்த பேருந்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதன் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உதம்பூர் மாவட்டம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் மற்றும் மற்றொரு […]
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகைகளாக இருப்பவர்கள் கிரேஸ் ஆண்டனி மற்றும் சானியா ஐயப்பன். இவர்கள் சனிக்கிழமை இரவு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சானியா மற்றும் கிரேஸ் கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் திடீரென 2 நடிகைகளின் மீதும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோசமான […]
தமிழக டிஜிபி அலுவலகத்தில் வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தான் குறவர் சமூகத்திற்கு தமிழக அரசிடம் சமூகப் பிரதிநிதித்துவம் வேண்டி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறேன். இது குறித்து மனு ஒன்றை கொடுக்க கடந்த 23ஆம் தேதி சென்னையில் உள்ள அமைச்சர் கே..கே.எஸ்.எஸ் ரவிச்சந்திரன் வீட்டிற்கு வந்தேன். அங்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனை சந்தித்தபோது தங்களை நாற்காலியில் அமர வைக்காமலும், தங்கள் ஒருமையில் பேசினார். மேலும் தான் […]
கோவை மாநகராட்சியின் திமுக மேயராக பதவி வகித்து வருபவர் கல்பனா ஆனந்தகுமார். மேயர் பதவிக்கு கட்சியின் சீனியர்கள் நிர்வாகிகள் என பலரும் முயற்சித்த நிலையில் எளிய குடும்ப பின்னணியை கொண்ட கழகத் தொண்டரின் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்தார் முதல்வர் ஸ்டாலின். அதன் பிறகு போதிய பயிற்சி பெறும் வகையில் மேயர்களுக்கு பயிற்சி பட்டறை வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்டு கோவை மேயர் கல்பனா சிறப்பான முறையில் கற்று அறிந்தார். இதனையடுத்து களப்பணியில் […]
ரயில் நிலையத்திலிருந்து பெண் பயணியை ரயில்வே போலீஸ்சார் வெளியேற்றியதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் இருந்து நாங்குநேரிக்கு இரட்டை ரயில் பாதை ஆய்வு பணிக்காக தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபயகுமார் ராய் அங்கு வந்திருந்தார். இதனால் பகல் நேரங்களில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது. இதை அறியாமல் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த ரேவதி என்ற பெண் திருப்பூர் செல்வதற்காக வந்திருந்தார். அப்போது ரயில்வே நிலைய அதிகாரிகளும் ஊழியர்களும் அந்த பெண்ணை ரயில் […]
வன வேங்கைகள் கட்சி தலைவர் இரணியன் குறவர் இன மக்கள் சார்பில் மனு கொடுக்க சென்ற போது தீண்டாமை கடைப்பிடித்து, இருக்கை கொடுக்காமல் நிற்க வைத்தே பேசியதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி வனவேங்கை கட்சி தலைவர் இரணியன் டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர் மீது புகார் கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திக்க வரும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்களை (என்னை) நிற்க வைத்து கேள்வி கேட்பதும் ஒருவகையான தீண்டாமை தான். அங்கு […]
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள டௌராலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 19-ஆம் தேதி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது பட்ட பகலில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை 2 பேர் கொடூரமான முறையில் அடித்து தரையில் இழுத்துச் செல்கின்றனர். அந்தப் பெண் தனக்கு உதவுமாறு கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இந்த சம்பவத்தை ஒரு கூட்டமே சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது. இருப்பினும் வேடிக்கை பார்க்கும் கூட்டம் அந்த பெண்ணுக்கு உதவாமல் வீடியோ […]
புதுச்சேரியில் தமிழக எம்பி ஆர் ஆசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக எம்பி ஆ ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் புதுச்சேரியில் இந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் […]
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.இந்நிலையில் அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் புதிய தனிக்கட்சி தொடங்க உள்ளதாக […]
புதுச்சேரியில் தமிழக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரியில் இந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் முழு […]
திருவண்ணாமலையில்பிரபல ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில் ஐஸ் கேக் வாங்கி பிறந்தநாள் கொண்டாடிய சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதம் – சரிதா தம்பதியின் இரண்டாவது குழந்தை சபியாவுக்கு நேற்று மூன்றாவது பிறந்த நாள் என்பதால், பிறந்த நாளை கொண்டாடுவதற்காக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே செயல்படும் பிரபல ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில் ஐஸ் கேக் வாங்கி உள்ளனர். வாங்கிய அரை மணி நேரத்தில் […]
இந்துக்களை பற்றி இழிவாக பேச திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்து மதத்தைப் பற்றியும், இந்து பெண்களைப் பற்றியும் தவறாக பேசிய திமுக எம்பி ராசா மீது மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியும், அவரை கண்டித்தும் புதுச்சேரியில் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் ஆனது இந்து முன்னணியின் அழைப்பின் பேரில் நடைபெறுகின்றது.காலை ஆறு மணியிலிருந்து கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தற்போது விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் […]
மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் வைரஸ், கும்பளங்கி நைட்ஸ், உஸ்தாத் ஓட்டல், 22 பீமேல் கேட்டயம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் சட்டம்பி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு நடிகர் ஸ்ரீநாத் பாசி ஒரு பிரபலமான மலையாள யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது பெண் தொகுப்பாளினி ஒருவரின் கேள்வியால் ஸ்ரீநாத் எரிச்சல் அடைந்துள்ளார். இதனால் கோபமடைந்த ஸ்ரீநாத் கேமராவை நிறுத்துங்கள் […]
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கோட்டைமேட்டு காலனி பகுதியில் வசித்து வரும் சாலமன் என்பவர் அப்பகுதியில் தேவ ஆலயம் ஒன்று நிறுவி ஊழியம் செய்து வருகின்றார். இவருக்கு ரூபி என்ற மனைவியும் ரூபன் என்ற மகனும் உள்ளனர். இதனிடையே கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் திண்டிவனத்தில் இருந்து ஜான்சன் (9) மற்றும் சைமன் (10) இருவரும் சாலமன் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனிடையே நேற்று மாலை ராஜேஸ்வரி திரையரங்கம் எதிரே உள்ள ரஷீத் கேண்டீனுக்கு சாலமன் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். சமூக அக்கரை கொண்ட இவர் திமுக வார்டு செயலாளராகவும் இருந்துள்ளார்.இதனிடையே தனது பகுதியில் லோகேஸ்வரி விற்கும் கள்ளச்சாராயத்தால் பல இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானதை தெரிந்து கொண்ட அவர் லோகேஸ்வரியை தனியாக சந்தித்து கண்டித்துள்ளார். அதே சமயம் இளைஞர்களுக்கு மது விற்பதை தடுக்க லோகேஸ்வரி மீது போலீசில் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் போலீசார் தற்காலிகமாக […]
விழுப்புரம் மாவட்டம் ”கண்டமங்கலம்” புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. சில மர்ம நபர்கள் இரவோடு இரவாக அண்ணாவின் திருவுருவ சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, அதனுடன் ஆ ராசாவின் புகைப்படத்துக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அதில் செருப்பை போட்டு, பேரறிஞர் அண்ணாவின் கழுத்தில் மாலையாக அணிவித்துள்ளனர். மேலும் அண்ணாவின் சிலை, தலைப்பகுதி மற்றும் கை பகுதிகளை கல்லால் குத்தி, அதனை உடைக்க முயற்சி செய்துள்ளனர். திமுகவின் கொடியால் அண்ணாவின் […]
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.இந்நிலையில் அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு திடீரென்று […]
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டிஜிபியும் எச்சரிக்கை செய்திருக்கிறார். இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இது தொடர்பாக பேசுவதற்காக டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இந்த சூழலில் மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை அனுப்பானடியில் […]
பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி சுவட்டு பாடம் பகுதியைச் சேர்ந்த ஜோணி(54),ஜோளி (48) தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் இவர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அதன்பின் அவர்கள் தம்பதியினரை தாக்கி மயக்கமடைய செய்திருக்கின்றனர் மேலும் கயிறு கொண்டு அவர்களின் கை கால்களையும் துணியைக் கொண்டு வாயையும் கட்டியிருக்கின்றனர். இதனை அடுத்து அந்த ஆறு பேரும் […]
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் நாளுக்கு நாள் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுத்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாப்பூரில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10-ம் படிக்கும் மாணவன் சரிவர படிக்காததால் அவரை ஆசிரியர் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் ஆசிரியரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இந்நிலையில் மாணவருக்கு திடீரென ஒரு நாட்டுத் துப்பாக்கி எங்கிருந்தோ கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆசிரியர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்த மாணவன் ஆசிரியரை பின்தொடர்ந்து ஓடியுள்ளார். அதன்பின் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக சுடத் தொடங்கினான். இதைப்பார்த்து […]
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அருகே உள்ள கள்ளிப்பாளையம் என்ற தெருவில் வசித்து வரும் கந்தசாமி என்பவரின் மகன் தனபால் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த ஏழாம் தேதி பரமத்தி வேலூரில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் நடந்த மூன்றாவது நாள் காலையில் புதுப்பெண் சந்தியா திடீரென மாயமானார்.அதன் பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த திருமண பட்டு சேலை மற்றும் நகைகள் அனைத்தும் […]