Categories
மாநில செய்திகள்

BREAKING : வேடந்தாங்கல் பரப்பளவை குறைக்கும் முடிவு வாபஸ்…. அதிரடி அறிவிப்பு…!!!

வேடந்தாங்கல் பரப்பளவை குறைக்கும் முடிவு வாபஸ் பெற உள்ளதாக வன பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உள்ள முக்கிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்றான வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பதற்கான நடவடிக்கையை கடந்த அதிமுக ஆட்சி மேற்கொண்டுவந்தது. கடந்த அதிமுக ஆட்சியின்போது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை ஐந்து கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டராக குறைக்க பரிசீலிக்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தை திரும்பப் பெறுவதாக தலைமை வன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறைப்பதாக புகார்… உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்க அறிவுறுத்தி, வழக்கை ஜூலை 2ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வழக்கு விவரம்: செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயமாக கருதப்படுகிறது. இந்த சரணாலயத்திற்கு 27 வகையான பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து வருவது வழக்கம். இந்த நிலையில் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு […]

Categories

Tech |