இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனா பரிசோதனைக்காக 7.31 லட்சம் சாம்பிள்கள் எடுக்கப்பட்டுள்ளன என ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அதிவேகமாக கொரோனா பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. கொரோனா தொற்றை கண்டறிய பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் 7 லட்சத்துக்கும் அதிகமான சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக தினமும் நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்ந்தவண்ணம் உள்ளது. தற்போது கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 3 கோடியை தாண்டி உள்ளது. நேற்று […]
Tag: பரிசோதனை
உமிழ்நீர் மூலமாக கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் தற்போது வரை 53.61 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 1.69 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கண்டறியும் சோதனை மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகின்றது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் தான் அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. அதனால் அங்கு […]
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 5, 397 ஆக உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5, 835 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3,20, 355 ஆக உயர்ந்துவிட்டது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 119 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்களில் 38 பேர் […]
உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி பரிசோதனையை ரஷ்யா தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு தற்போது வரை இரண்டு மில்லியனுக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு எதிராக தடுப்பு ஊசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதில் முதல் தடுப்பூசியை கண்டறிந்துள்ள ரஷ்யா, தற்போது அதற்கான பரிச்சோதனையை தொடங்கியுள்ளது. அந்நாட்டின் அதிபர் தனது சொந்த மக்களுக்கு தடுப்பு ஊசியை செலுத்தி முதற்கட்ட பரிசோதனையை […]
காய்கறி மற்றும் மளிகை கடையில் வேலை செய்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் , சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனுடைய பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதற்கு ஒரே தீர்வாக, பொது மக்கள் அனைவரிடமும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே. […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் புதிய முறையில் குழு பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குழு பரிசோதனை முறை என்பது பத்து பேருடைய ரத்த மாதிரிகளை சேகரித்து ஒரே முறையில் பரிசோதனை செய்வதாகும். இதன் மூலம் சோதனை முடிவில் கொரோனா இல்லை எனில் 10 பேருக்கான முடிவு ஒரே நேரத்தில் கிடைத்துவிடும். கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில், மீண்டும் அவர்கள் தனித்தனியாக பரிசோதனை செய்யப்படுவார்கள். இந்த புதிய முறையால் அதிக […]
ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனா தடுப்பு ஊசி விற்பனைக்கு வந்துவிடும் என்ற செய்தி பொய்யானது என ICMR விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் கோவாக்சின் என்ற மருந்து இதற்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டதுடன், வருகின்ற ஆகஸ்ட் […]
வெளிமாநில, நாடுகளிலிருந்து வருவோருக்கு முறையான பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் அதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து தொடர்ந்து தமிழகத்தில் விமானம் மூலம் வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வர, அவர்களுக்கு முறையான பரிசோதனை மேற்கொள்ள படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. அதன்படி வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளிலிருந்து […]
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரும் அவரது குடும்பத்தினரும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவோர் முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தொற்று இல்லை என்று உறுதியினால் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் தற்போது சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களில் […]
இந்தியாவில் ஒரே நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்திய அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்எண்ணிக்கையானது நான்கரை லட்சத்தை கடந்த நிலையில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என ஒவ்வொரு மாநில அரசுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சைகளை அளிக்க வேண்டும். பரிசோதனைகளை மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும்.இதுவே கொரோனா இருப்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று […]
கொரோனா பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளை கடினமாக்கவும், மேலும் தளர்வுகளை குறைக்கவும் தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிபுணர்கள், சென்னையில் தண்டையார்பேட்டை, திருவிக நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கொரோனா அதிகம் உள்ளதை கவனித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பகுதிவாரியாக பரிந்துரைகளை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை கவனித்து வருவதாக தெரிவித்தனர். […]
ஊரடங்கு தளர்வுகளை குறைக்க மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையை பரிசீலித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிபுணர்கள், கொரோனா பாதிப்பு பகுதிகளில் அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளை குறைக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் கொரோனவை கட்டுப்படுத்த பகுதிவாரியாக பரிந்துரைகளை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனாவின் சிறிய அறிகுறிகள் இருந்தாலும் கூட மக்கள் அலட்சியம் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளனர். காய்ச்சல், […]
இன்று முதல் 81 குழுக்கள் மூலமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பரிசோதனை செய்யும் முயற்சியை சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் அறிமுகபடுத்தியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சிகப்பு மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இப்பகுதிகளில் பரிசோதனையை அதிகப்படுத்தி நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து கொரோனாவை குறைப்பதற்கான முயற்சியில் தமிழக அரசும், சுகாதாரத் துறையும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை […]
கொரோனா பரிசோதனையில் முதலில் நெகட்டிவ் வருகிறது. மறு பரிசோதனையில் தொற்று பாசிட்டிவ் வருவதால் மிகவும் சவாலாக உள்ளது. மறுபரிசோதனையில் மட்டும் இதுவரை 28 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,804 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 7 […]
தமிழகத்தில் இன்று மட்டும் 11,441 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ” கொரோனா தொற்று உள்ளதா? என இன்று 11,441 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதுவரை தமிழகத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 793 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனா உள்ளதா என இன்று 11,894 மாதிரிகள் உட்பட இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 068 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக […]
கொரோனா தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசாணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: * வெளிமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். * கடந்த 14 நாட்களில் வெளிநாட்டில் இருந்து வந்த அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். * கொரோனா தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். * அறிகுறி உள்ள அனைவர்க்கும் கொரோனா பிசிஆர் முறையில் […]
தமிழகத்தில் பரிசோதனைகள் குறைவாக மேற்கொள்ளப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் தெரிவித்ததாவது, ” தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாரஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 46 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224-ல் இருந்து 11,760 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை குறைவாக மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவல் தவறானது என […]
நாட்டில் கொரோனா தொற்று பரிசோதனையை மேலும் விரிவுபடுத்த மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பரிசோதனை குறித்து மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ” கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு கட்டாயம் பரிசோதனை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேபோல தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களில் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வலியுறுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த […]
சென்னைக்கு 2 நாள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. மே 14 மற்றும் 16 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேதிகளில் மட்டும் டெல்லி-சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 14,16 தேதிகளில் முன்பதிவு செய்யப்பட்டதால் 2 நாள் மட்டும் ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் மே 31ம் தேதி வரை ரயில்களை […]
கொரோனா பரிசோதனை செய்வதற்காக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார். ரூ.5.48 கோடி மதிப்பில் மொத்தமாக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதற்கட்டமாக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதலமைச்சர் துவக்கி வைத்தார். மீதமுள்ள 9 நடமாடும் வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடன் இருந்தார். நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தின் சிறப்புக்கள்: * இந்த நடமாடும் வாகனம் […]
தமிழகத்தில் 50 பரிசோதனை மையங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 12,000 பேர் பரிசோதனை செய்கிறார்கள் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறியதாவது: அதிகளவில் பரிசோதனை செய்வதால் தான் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார். […]
கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் எத்தனை பி.சி.ஆர்., ஆய்வகங்கள் உள்ளன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த தொடர்பாக மே 12ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி, கொரோனா வைரசை கண்டறிந்து, அந்த வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டியது முக்கியம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலை மேற்கோள்காட்டி மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் […]
மற்ற நாடுகளை விட அமெரிக்காதான் கொரோனா பரிசோதனையை விரைவாக செய்கிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். விரைவாக பரிசோதிப்பதால் தான் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போல் மற்ற நாடுகள் பரிசோதிக்காததால் தான் பாதிப்பு குறைவாக இருப்பது போல் காட்டுகிறது என அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து 983 […]
முஸ்லிம்கள் மருத்துவமனைக்குள் கொரோனா பரிசோதனை செய்யாமல் வரக்கூடாது எனக் கூறிய மருத்துவமனை உரிமையாளர் மீது வழக்கு பதிவாகியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மிராட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊடகமொன்றிற்கு வித்தியாசமான விளம்பரம் ஒன்றை கொடுத்ததன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த விளம்பரத்தில் முஸ்லிம் நோயாளிகளும் அவர்களுடன் வரும் உதவியாளர்களும் கொரோனா பாதிப்பிற்கான சரியான பரிசோதனையை நடத்தினால் மட்டுமே மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என உள்ளூர் ஊடகம் ஒன்றில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. விளம்பரம் வெளியானதை […]
கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை நாட்டிலுள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக தீவு காண கோரி வழக்கறிஞர் அமித் சஹானி உள்ளிமருத்துவம் ட்ட 3 பேர் தனித்தனியாக ஒரு பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு […]