ஆவணமின்றி கொண்டுவந்த 65 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலத்திருப்பூந்துருத்தி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மினி வேனை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.அந்த விசாரணையின் போது […]
Tag: பறக்கும்படை அதிகாரிகள்
உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 1 1/4 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கருப்பையா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இபுராஹீம் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முகில்தகம் பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் […]
உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 9 லட்சம் ரூபாயை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரி சுவாமிநாதன் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் கட்டு கட்டாக 9 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இதுகுறித்து பணத்தின் உரிமையாளராக தேவி பட்டணத்தை சேர்ந்த மாரிமுத்துவிடம் விசாரித்த […]