Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பறவைகளை ரசிக்க 5 லட்சத்தில் புதிதாக பார்வையாளர் கோபுரம்… எங்கு தெரியுமா…?

வேதாரணியத்தில் பறவைகளை ரசிக்க 5 லட்சத்தில் புதிதாக பார்வையாளர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட புள்ளிமான், நரி, காட்டுப்பன்றி, குதிரை ஆகியவை உள்ளது. இந்த சரணாலயத்திற்கு எதிரே சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு வருடம் தோறும் பல்வேறு நாடுகளிலிருந்தும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 290 வகையான பறவைகள் வந்து […]

Categories
மாநில செய்திகள்

நஞ்சராயன் ஏரி பகுதி பறவைகள் சரணாலயம்….. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

திருப்பூரில் உள்ள நஞ்சராயன் ஏரிக்கு அருகில் உள்ள பகுதிகள் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் 17-வது சரணாலயம் ஆகும். இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ரூ.7.5 கோடி தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அதனை தொடர்ந்து ஊத்துக்குளி மற்றும் வடக்கு திருப்பூரில் உள்ள 126 ஹெக்டர் பரப்பளவு நிலம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பழவேற்காடு, வெள்ளோடு, வேடந்தாங்கல் கோடியக்கரை, வேட்டங்குடி உள்ளிட்ட 16 சரணாலயங்கள் உள்ளது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா!… வெள்ளாடு பறவைகள் சரணாலயத்திற்கு சர்வதேச அங்கீகாரம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம், ஈரோடு மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு சமூக நலக்காடுகள் கோட்டம் மூலமாக கருவேல மரங்கள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக விளங்கிய பெரிய குளம் ஏரியில் கட்லா, ரோகு, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன் வகைகள் வளர்க்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவைகள் வெள்ளோடு பெரியகுளம் ஏரியை நோக்கி பறந்து வந்தது. இங்கு ஏற்கனவே கருவேல மரங்கள் வளர்ந்து இருந்ததால் பறவைகள் […]

Categories
மாநில செய்திகள்

விழுப்புரம் கழுவெளி சதுப்பு நிலம்…. பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு…!!!!

பல்வேறு வலசைப் பறவைகள் வந்து செல்லும் விழுப்புரம் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழ்நாடு வனத்துறை அரசாணை வெளியிட்டது. விழுப்புரம் மாவட்டத்தின் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் 16-வது பறவைகள் சரணாலயமாக வலசைப் பறவைகள் வந்து செல்லும் கழுவெளி சதுப்பு நிலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி: மறு அறிவிப்பு வரும்வரை…. வேடந்தாங்கல் சரணாலயம் மூடல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பறவைகளுக்காக” பட்டாசு வெடிக்காமல் தீபாவளி…. கொண்டாடும் கிராம மக்கள்…!!

பறவைகளின் பாதுகாப்பிற்காக பெரம்பூர் கிராம மக்கள் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்தியுள்ளனர். நாகை மாவட்டதிலுள்ள கொள்ளிடம் அருகே பெரம்பூர் என்கிற கிராமம் எப்போதும் பசுமையாக இயற்கை எழில் நிறைந்து காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் இந்த கிராம பகுதியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பல்வேறு வெளிநாட்டு பறவைகள் கூட்டமாக வந்து தங்கி உள்ளன . மேலும் இங்கு நீர்க்காகம், செந்நாரை, கொக்கு போன்ற பறவைகள் அதிக அளவில் தங்கி இருக்கின்றன. இவை அங்குள்ள மரங்களில் கூடு அமைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பொன்பத்திஏரி…!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி ஏரி  புதிய பறவைகள் சரணாலயமாக மாறி வருவதால் சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செஞ்சி முதல் பொன்பத்திஏரி வரை உள்ள ஏரிக்கரை பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அண்மையில் பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும் கருவேல மரங்கள் அதிகமாக உள்ளதால் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாகவும் ஏரிப்பகுதி மாறி உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வலசை வரும் பறவைகள் களைகட்டும் கொடியக்கரை…!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இலட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன. தற்போது சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பிளமிங்கோ, கொசுள்ளான், செங்கால்நாரை, ஊசிவால் சிறவி, கடல் காகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வகையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. பறவைகளை காண […]

Categories

Tech |