பாகிஸ்தான் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையாக ஏற்பட்ட வெள்ளத்தில் தற்போது வரை 1136 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு பலத்த மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளும் மக்களை வெளியேற்றி வேறு இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை கழகம் தெரிவித்திருக்கும் தகவலில், ஒரே நாளில் 28 நபர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்கிறார்கள். இதனால் […]
Tag: பலத்தமழை
ஆப்கானிஸ்தான் நாட்டில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 95 நபர்கள் பலியானதாகவும் 100க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து பத்து நாட்களாக சுமார் 10 மாகாணங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 95 நபர்கள் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், விவசாய நிலங்களிலும், பல தோட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் அவை முழுவதுமாக அழிந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்காலம் […]
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட மக்களுக்கு ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் உணவுகளை கொடுத்து வருகிறார்கள். கனடாவில், இதுவரை இல்லாத அளவிற்கு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முழுக்க பலத்த மழை பெய்தது. இதனால், வான்கூவர் தீவு பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டதில், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே, இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் அவர்களுக்கு உணவுப்பொட்டலங்களை கொடுத்து வருகிறார்கள். எனினும், தற்போது சில பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளது. எனவே, அப்பகுதிகளில் குவிந்து கிடக்கும், சகதிகள் […]
இந்தோனேசியாவில் பெய்த கனமழையில், நிலச்சரிவு ஏற்பட்டு, நான்கு நபர்கள் பலியாகியுள்ளனர். இந்தோனேசியாவில் இருக்கும் ஜகர்த்தா என்னும் மாகாணத்தின் பஞ்ஜர்னெகாரா மாவட்டத்தில் கடந்த 2014ம் வருடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, நிலச்சரிவில் மாட்டி, 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். அங்கு மழை காலங்களில் வழக்கமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில், பஞ்ஜர்னெகாரா மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்துள்ளது. அப்போது, ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் மாட்டிக்கொண்டது. சகதி மற்றும் சேறுகள் வீடுகளை சூழ்ந்து கொண்டது. […]