தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி , மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் மெரினா திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, பெருங்குடி, தரமணி, வேளச்சேரி ஆகிய […]
Tag: பலத்த மழை
இளையான்குடி மற்றும் காரைக்குடி பகுதியில் கன மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில் மதியம் 2 மணிக்கு மேல் திடீரென கனமழை பெய்தது. இந்த மழையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் இளையான்குடி, கண்மாய்க்கரை, வாள்மேல் நடந்த அம்மன் கோவில் பகுதி, பஜார் […]
சாலையில் மரக் கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள குமுழி, லோயர் கேம்ப், கூடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக சாலையோரங்களில் இருந்த மரக்கிளைகள் முறிந்து சாலைகளில் விழுந்தது. இதனால் மலைப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து லோயர் கேம்ப் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாலைகளில் கிடந்த […]
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் கடல் போல காட்சி அளிக்கின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்பொழுது நீர் ஆதாரமாக இருக்கும் ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம், நேமம் உள்ளிட்ட ஏரிகளும் நீர் நிரம்பி காணப்படுவதால் இந்த ஏரிகளில் இருந்தும், மழை நீருடன் கிருஷ்ணா நதி நீரும் வந்து கொண்டிருப்பதால் […]
பலத்த மழையின் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் உள்ள சேபால் நகரில் ஒரு 4 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 1 பார், 1 தாபா, 1 வங்கி மற்றும் சில வணிக நிறுவனங்கள் இருக்கிறது. இந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது. #WATCH | Himachal Pradesh: A four-storey building collapsed in Chopal town […]
ஊட்டியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சொன்ன நிலையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணி தொடங்கி 2 மணி வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, கூட்ஷெட் சாலை ஆகிய இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன […]
பலத்த மழையின் காரணமாக வாழை மரங்கள் மற்றும் கரும்பு பயிர்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள கல்வராயன்மலையை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதைப்போன்று மூங்கில்துறைப்பட்டு பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் கரும்பு பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த மன […]
பலத்த மழையின் காரணமாக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள நாகர்கோவில், பூதப்பாண்டி பகுதிகளில் அரை மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது. இங்குள்ள கீரிப்பாறை பகுதியில் இருந்து லேபர் காலனிக்கு செல்வதற்காக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அரசு பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கருங்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலையில் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் கருங்கல் பேருந்துநிலையத்தில் நேற்று பேருந்துக்காக மாணவ மாணவிகளும், பொதுமக்களும் காத்திருந்தனர். அப்பகுதியில் இயங்கும் பல அரசு பேருந்துகளின் மேற்கூரைகள் சேதமடைந்து […]
ஜெர்மனியின் கடலோர பகுதிகளில் நேற்று இரவு நேரத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையில் பல பகுதிகள் சேதமடைந்துள்ளது. ஜெர்மனியில் தொடர்ந்து கனமழை பெய்ததால், அங்கிருக்கும் பல்வேறு பகுதிகளில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஹாம்பெர்க் நகரத்தில் இருக்கும் Elbe என்ற நதியின் நீர்மட்டம் 17அடிக்கு அதிகரித்திருக்கிறது. எனவே அங்கிருக்கும் மீன் சந்தை முழுக்க வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பல பகுதிகளில் தண்டவாளங்களிலும் சாலைகளிலும் […]
பிரேசிலில் பலத்த மழை பெய்து, அதிக அளவில் நீர் தேங்கியிருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரேசிலில் உள்ள Maranhao என்ற மாகாணத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் வீடுகள் தண்ணீரில் மூழ்கியது. மேலும் வீடுகளைச் சுற்றி தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கிறது. இதனால் மக்களால் தண்ணீரை கடந்து வெளியில் வர முடியவில்லை. மேலும், அதிகமாக வெள்ளம் சூழ்ந்து காணப்படும் பகுதிகளில் மாட்டிக்கொண்டவர்களை, மீட்புக்குழுவினர் படகு மூலமாக மீட்டு வருகிறார்கள். இதில் 800க்கும் அதிகமானோர் தங்கள் குடியிருப்புகளை […]
பிரேசில் நாட்டில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போதுவரை ஏழு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் பாகியா என்ற மாகாணத்தில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால், 30-க்கும் அதிகமான நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தது. பலத்த மழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை சுமார் ஏழு நபர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 150க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றி வேறு […]
சீன அரசு, அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைக்குமாறு தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீன நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், எதிர்பாராமல் பெய்த பலத்த மழையால் காய்கறி போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விற்பனைக்கு தடை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அரசு அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அரசின் இவ்வாறான அறிவிப்பிற்கு பின் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் அனைவரும் அதிகமாக பொருட்களை வாங்கி வீடுகளில் குவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் கூலித்தொழிலாளி வீட்டின் கூரை இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் பரமசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார் கூலித்தொழிலாளியான இவருக்கு பேபி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராசிபாளையம் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்தமழை பெய்துள்ளது. அந்த மலையில் நள்ளிரவு சமயத்தில் பரமசிவத்தின் வீட்டின் ஓடுகள் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சத்தம் கேட்டு விழித்த […]
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மின்கம்பம் சரிந்து விழுந்து இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு தேனி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்துள்ளது. இதனையடுத்து நாகலாபுரம் பகுதியில் உள்ள கண்மாய் நிரம்பி வரத்து வாய்க்கால்களை தாண்டி மழை நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் […]
தொடர்ந்து பெய்து வரும் பலத்தமழையால் சோத்துப்பறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126 அடியாக உள்ள நிலையில் கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக தேனியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று […]
பலத்த மழை காரணத்தால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணமுடிகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது வெயிலானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியதில் சில மணி நேரத்தில் அப்பகுதியில் பலத்த மழையானது பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான இடங்களில் அமைந்திருக்கும் குளங்களில் தேங்கி நின்றபதை காணமுடிகிறது. அதன் பின் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பூமி வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் […]
சென்னை ஈசிஆர் சாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் அரசு பேருந்து ஒன்று நகர முடியாமல் அங்கேயே நின்று உள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. இது நாளை மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்க இருப்பதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும். சுமார் 100 முதல் 110 கிலோ மீட்டர் […]
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, புளியங்கொட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு நேரிட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு […]