சென்ற 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தின்போது குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகருக்கு மேற்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மோர்பிநகரில் மச்சு நதி மீது 230 மீட்டா் நீளம் தொங்கு பாலமானது அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கியமான இடமாக இப்பாலம் விளங்குகிறது. கடந்த 6 மாதங்களாக அப்பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து 5 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 26ம் […]
Tag: பலி எண்ணிக்கை உயர்வு
உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்ற நகரத்தில் ரஷ்ய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா நகரத்தில் நேற்று தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 23 பேர் உயிரிழந்ததாகவும், 28 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாகவும் 85க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தற்போது கூறியிருக்கிறார்கள். இந்த தகவலை அந்நகரத்தின் பிராந்திய ஆளுநராக இருக்கும் ஸ்டாருக் […]
ஏமன் நாட்டில் சிறைச்சாலை மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 82 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏமனில் கடந்த 2014 ஆம் வருடத்திலிருந்து அதிபர் மன்சூர் ஹாதியின் தலைமையிலான அரச படையினரும், ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கும் ஹவுதி கிளர்ச்சி படைகளும் மோதிக்கொண்டிருக்கிறது. இதில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு, சவுதி அரேபியா தலைமையில் இயங்கும் அரபு நாடுகளில் கூட்டுப்படைகள் ஆதரவு தெரிவிக்கிறது. எனவே, கடந்த 2015 ஆம் வருடத்திலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி கூட்டுப்படைகள் […]
ரஷ்யாவில் கடந்த ஒரே நாளில் 33,899 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 10,899,411 ஆக அதிகரித்திருக்கிறது என்று சுகாதார மையம் கூறியிருக்கிறது. மேலும், கடந்த ஒரே நாளில் மாஸ்கோ நகரில் சுமார் 8,795 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 4,382 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஒரே நாளில் 698 நபர்கள் பலியாகியுள்ளனர். இதனால், ஒட்டு மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை […]
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்போது வரை 123 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பெய்து கொண்டிருக்கும் கனமழை காரணமாக பீகார், அசாம் உட்பட்ட பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றது. அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26.38 லட்சத்திற்கு மேலான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மோரிகான் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்திருக்கின்றது. இத்தகைய சூழலில் அரசு நிவாரண பணிகள் அனைத்தையும் முடக்கி விட்டது. […]