திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை, முதுகலை தரவரிசை தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 19ம் தேதி குரூப் 1 தேர்வு நடைபெறவிருப்பதால், அன்றைய தேர்வு நவம்பர் 20ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலை., நிர்வாகம் அறிவித்துள்ளது. நவ.20ம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை இளைநிலை தேர்வும், பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை முதுகலை தரவரிசை தேர்வும் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
Tag: பல்கலை
தொழில்நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களில் பேராசிரியா்களாக நியமனம் செய்யும் அடிப்படையில் விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு (அ) அவசரச்சட்டம் நிறைவேற்றுமாறு பல்கலைக்கழகங்களை, யுஜிசி அறிவுறுத்தி இருக்கிறது. உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் தொழில்திறனை மேம்படுத்தும் வகையில் அமெரிக்காவின் எம்ஐடி கல்விநிறுவனம், ஹாா்வாா்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்போா்ட் பல்கலைக்கழகம் ஆகிய உலகின் தலைசிறந்த உயா்கல்வி நிறுவனங்கள் உரிய கல்வித்தகுதி இல்லாத ஆனால், தொழில்நிறுவனங்களில் தலைசிறந்து திகழும் அனுபவமிக்க நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியா்களாக நியமிக்கிறது. இந்த நடைமுறையினை தில்லி, சென்னை, […]
வருகிற கல்வி ஆண்டில் புது கல்விகொள்கையை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களை தயார்படுத்துமாறு, தமிழ்நாடு பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த வருடம் முதல் மத்திய அரசின் புது கல்விகொள்கை நடைமுறைக்கு வந்துவிட்டது. தமிழ்நாட்டில் நேரடியாக புது கல்விகொள்கையை எதிர்த்தாலும், அதன் முக்கியமான அம்சங்கள், அரசு பள்ளி, கல்லுாரிகளில் பல வகைகளில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த நிலையில் சென்னை பல்கலை, மதுரை காமராஜ், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் போன்ற பல்கலைகளுக்கு யு.ஜி.சி.,சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரும் கல்வியாண்டில் […]
அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் பொது நுழைவுத் தேர்வு வாயிலாகவே 2022-2023 ஆம் வருடத்துக்கான மாணவர் சேர்க்கையானது நடைபெற வேண்டும் என்று யு.ஜி.சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து மத்திய பல்கலைக் கழகங்களில் தனித்தனி நுழைவுத் தேர்வு வாயிலாகவோ, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலோ மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் CUET தேர்வை ஜூலை முதல் வாரத்தில் தேசிய தேர்வு முகாம் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் உமையாள் ராமநாதன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “கொடைவள்ளல் டாக்டர் KV.AL.RM அழகப்ப செட்டியாரின் புதல்வியும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினருமான டாக்டர் உமையாள் ராமநாதன் திடீரென்று மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானேன். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக தன்னுடைய சொத்துக்களை எல்லாம் அர்ப்பணித்து அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கிய உமையாள் ராமநாதன் பெண்களின் கல்வி முன்னேற்றத்திலும், […]