ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய உடன் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள பெண்கள் பாலின பாகுபாட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது ஆண்கள் துணை இல்லாமல் விமானங்களில் பயணிக்க தடை, ஆறாம் வகுப்பிற்கும் மேல் கல்வி கற்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்வதற்கு தடை என பெண்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் […]
Tag: பல்கலைகழகம்
பட்டப் படிப்பில் மாணவர்கள் படித்து முடித்த 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தபிறகு பட்டங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் நலனைக் கருதி இந்த உத்தரவை யுஜிசி பிறப்பித்துள்ளது. மேலும் பட்டங்களை தாமதமாக வழங்குவதால் மாணவர்களின் வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே விரைவாக பட்டங்களை வழங்க அனைத்து பல்கலைக்கழகங்களும் முன்வர வேண்டும் என்று […]
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.எம் கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் துணைவேந்தராக பதவி ஏற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி வெளியிட்டுள்ளார். பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.எம் கதிரேசன் கல்வித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் இவர் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னதாக இவர் மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் […]
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏ. எல்எல்பி 5 ஆண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2021-22) சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலமாக கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை […]
B.F.sc, B.Tech, BBA, B.Voc படிப்புகளில் சேர ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் உள்ள 320 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் https://tnjfu.ac.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
உயர்கல்வி நிறுவனங்கள் இணைய வழிக் கல்வியை பயிற்றுவிப்பதற்காக புதிய நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. அதன்படி இணைய வழிக் கல்வியை மேற்கொள்ளும் உயர்கல்வி நிறுவனங்கள் நாக் மதிப்பீட்டில் 3.26மதிப்பெண் அல்லது தேசிய கல்வி நிறுவன தரவரிசையில் 100 இடங்களுக்குள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அங்கீகாரத்தை கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்கீகாரத்தை புதுப்பிக்கும் நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் […]
ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என ரஷ்ய துணை தூதர் கூறியுள்ளார். தென்னிந்தியாவுக்குகான ரஷ்ய துணை தூதர் அலியக் என்.அவ்தீவ் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” சசி பல்கலைக்கழகங்களின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் சேர விரும்புகின்ற மாணவர்கள், இந்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விதிகளின்படி பிளஸ் 2 வகுப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓ.பி.சி., எஸ்சி, எஸ்டி பிரிவினை சார்ந்த மாணவர்கள் 40 சதவீதம் மதிப்பெண்களை அவசியம் […]