இந்தியாவில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் நிலையில், 2023-ம் ஆண்டில் நீட் தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த வருடம் மே மாதம் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வான சியுஇடி அடுத்த வருடம் மே 21 […]
Tag: பல்கலைக்கழகம்
சீனாவிலுள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள ஹெனான் கைபெங் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு கல்லூரியில் மாணவர்கள் கல்லூரிக்கு சரியாக வராமல் இருந்து வந்தனர். இதனால் கல்லூரி நிர்வாகம் ஜாங் என்னும் அழகிய ஆசிரியை ஒருவரை நியமனம் செய்துள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மீது விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஜாங் கவர்ச்சியாக இருப்பதினால் பணியமர்த்தப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய சூழலில் ஷாங்கின் திறமைக்காகவே அவரை வேலைக்கு எடுத்ததாக பல்கலைக்கழகம் சார்பில் […]
என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் பெயரை ஆந்திர முதல்வர் சூட்டியுள்ளார். தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவால் 1986 ஆம் வருடம் என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்திற்கு ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் பெயரை ஆந்திரா பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சூட்டியுள்ளார். இதற்கு ஜூனியர் என்டிஆர் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, என்.டி.ஆர் மற்றும் ஒய்.எஸ்.ஆர் இருவரும் […]
திருநெல்வேலி மனோன்மணியம், காரைக்குடி அழகப்பா, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களுக்கு புதிய வேந்தர்களை நியமித்த ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அழகப்பா பல்கலைக்கழக ஜீ.ரவி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு டி.ஆறுமுகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு என்.சந்திரசேகர் ஆகியோர் புதிய துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஏற்கனவே ஆளுநர்களின் அதிகாரங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்ற நிலையில் ஆளுநரின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ஆளுநரின் அதிகாரம் தொடர்பான சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் ஆளுநர் தற்போது […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவிக்காக மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், கலப்புர்கி பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் இளம் பெண் காதல் விவகாரத்தில் மாணவர்கள் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல்கலைக்கழகத்தில் படிக்கும் டெல்லியை சேர்ந்த மாணவியரிடம் உள்ளூர் மாணவர்கள் சிலர் வம்பு […]
பிலிப்பைன்ஸ் நாட்டின் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்த போது திடீரென்று ஒரு நபர் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது, திடீரென்று அங்கிருந்த ஒரு நபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த பயங்கர தாக்குதலில் மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர் இதற்கு […]
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் சாதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேள்வியில் நான்கு பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகம் எது? தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர்கள் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக உயர்கல்வித்துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு […]
பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் யூஜிசி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை சுற்றறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில் பல்கலைக்கழக வளாகங்களிலும் கல்லூரி வளாகங்களிலும் பேராசிரியர்கள் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோன்று எந்தவிதமான வன்முறை சம்பவங்களும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களை விசாரிப்பதற்கு தனி […]
பல்கலைக்கழகங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிலையில், அந்த பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி 10 சதவீத இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், […]
தென்னாபிரிக்காவில் கறுப்பின மாணவர்களின் உடமைகளில் வெள்ளை இன மாணவர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேப் டவுன் அருகே அமைந்திருக்கும் ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழகத்தின் குடியிருப்பில் உள்ள கருப்பின மாணவர் ஒருவர் அறைக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு வெள்ளை இன மாணவர் நுழைந்ததாக கூறப்படுகின்றது. அந்த வெள்ளையின மாணவன் கருப்பின மாணவர்களின் உரிமைகளில் சிறுநீர் கழிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. தென்னாபிரிக்காவின் புகழ்பெற்ற உயர்மட்ட பல்கலைக்கழகத்தில் பயின்று […]
பல்கலைக்கழக வளாக குடியிருப்பு பகுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் கியூசன் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பல்கலைக்கழக வாளகத்துக்குள் நெரிசலான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. இந்த குறுகிய பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் கிராமப்புறங்களில் இருந்து வேலைவாய்ப்புக்காக வந்த எண்ணற்ற ஏழை குடும்பங்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த […]
மே மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14ஆம் தேதி வரை நேரடி எழுத்துத் தேர்வு மூலமாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தொலைதூர கல்வி இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
காபூல் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி நாட்கள் ஒதுக்கீடு செய்ய போவதாக தலீபான்கள் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின் கெடுபிடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவிகள் சேர்ந்து படிப்பதை தடுக்கும் வகையில், மாணவிகள் காலை நேரத்திலும், மாணவர்கள் பிற்பகல் நேரத்திலும் வர வேண்டும் என உத்தரவிட்டு இருக்கின்றனர். இந்தநிலையில் இருபாலர் சேர்ந்து படிக்கும் முறையில் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதுபற்றி உயர்கல்வி அமைச்சக செய்தி தொடர்பாளர் அகமது தாகி […]
டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். அவர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பார்கள். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தொடர்ச்சியாக இந்த பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசாங்கம் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை பல்கலைக்கழக துணைவேந்தராக அறிவித்தது. இது போதாது என்று பாஜக கட்சியின் அங்கமாக இருக்கும் மாணவர் அமைப்பின் ஏபிவிபி சேர்ந்தவர்கள் ஜேஎன்யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். கடந்த 2020ம் […]
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுக்கு (CUET-2022) ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகம் தவிர மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்வோரும் இந்த தேர்வுக்கு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் கடைசி நேரத்தில் தேதி மாற்றப்பட்டது. அதாவது ஜூலை மாதத்தில் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் தேர்வு […]
இளங்கலை, முதுகலை, டிப்ளமோ என அனைத்து வகை தொலைதூர படிப்புகளுக்கு வரும் 28ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. http://ideunom.ac.in என்ற இணையதளத்தில் விரிவான தேர்வுகள் அட்டவணை ஹால்டிக்கெட் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
CM CELL அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் நடப்பு ஆண்டுக்கான TET தேர்வில் தேர்ச்சி பற்றி reply அனுப்பியுள்ளது. சத்ரு பூபதி கட்டாய கல்வி சட்டத்தை மத்திய அரசு 2010 ஆகஸ்ட் 23 அமல்படுத்தியது. இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அமலாக்கம் செய்த தேதிக்கு முன்னதாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் இல்லை என உத்தரவு நீதிமன்றம் வாயிலாகவும் அரசு […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு துறை காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் குரூப் 2, குரூப் 2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி மார்ச் 23ஆம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மே 26-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தற்போது ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். […]
புகழ்பெற்ற மணிபால் பல்கலைக்கழகத்தில்(ஜெய்ப்பூர்) வீட்டிலிருந்தே (அல்லது) வேலை செய்துகொண்டே ஆன்லைன் வழியாக MBA, B.com, BBA, BCA, MCA உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்து பட்டம் பெறலாம். மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்கள் வேலைவாய்ப்பு உதவி, coursera ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள சான்றிதழ், படிப்புகள் கற்க வாய்ப்பு என பல்வேறு சலுகைகள் உண்டு குறைந்த இடங்களே உள்ளது உடனே முந்துங்கள்!
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு யார் பெயர் சூட்டினார் என்பது குறித்து ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு பெயர் சூட்டியது அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி தான் என கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு விஷயமாகும்..!! எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு பெயர் சூட்டும் போது அதிமுக ஆட்சி நடைபெற்றுக் […]
நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கும் UGC அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது டிஜிலாக்கர் (Digi Locker) வடிவில் பெறப்படும், சமர்ப்பிக்கப்படும் Degree Certificate (பட்டப்படிப்பு) & மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட கல்வி ஆவணங்களை, அசல் சான்றிதழ்களாக கருதி கல்வி நிறுவனங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பிரபலமான பல்கலைகழகம் ஒன்றில் மது அருந்துவது மற்றும் மகிழ்வாக வாழ்வது தொடர்பில் ஒரு பட்டப்படிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டப்படிப்பில், மாணவர்களுக்கு, எவ்வாறு மது அருந்த வேண்டும்? மது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அவற்றை எந்த அளவிற்கு அருந்த வேண்டும்? எந்த நேரத்தில் அருந்த வேண்டும்? மது அருந்திய பிறகு எந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்? உண்ணும் உணவு எவ்வாறு இருக்கவேண்டும்? வாழ்வை எப்படி மகிழ்வுடன் வாழ வேண்டும்? என்று கற்றுக் கொடுப்பார்களாம். மேலும், […]
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் , பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி, ஆராய்ச்சி& மேம்பாடு, கற்றல் அடைவு திறன் மேம்பாடு, உலகளாவிய தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தல், தேசிய கல்வி கொள்கை அமலாக்கம் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்காலிகமாக பணியாற்ற 61 உதவி பேராசிரியர்கள் தேவை என்று சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பல்வேறு துறைகளின் கீழ் தற்காலிகமாக முழுநேர பணியாற்றி ஒரு உதவி பேராசிரியர்கள் தேவை. மாத சம்பளம் 30,000 வழங்கப்படும். NET / SLET / SET அல்லது Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் www.ide.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதனை மாணவர்கள் பெரியார் பல்கலைக்கழக இணைவு பக்கத்திலோ அல்லது இணை கல்லூரிகளின் இணையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தற்போது முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு www.periyaruniv.ac.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
கேரளாவில் சமீப நாட்களாக வரதட்சணை கொடுமைகள் மற்றும் இதனால் ஏற்படும் மரணங்கள் தலைதூக்கியுள்ளன. இதனை கட்டுப்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரளாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் வரதட்சனை கொடுமையால் 34 பேர் கொடூரமாக இறந்துள்ளனர். இதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற இளம்பெண் தீக்குளித்து இறந்தார். ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதனால் வரதட்சனை மரணங்களை கட்டுப்படுத்த கேரள அரசு ஒரு வழிவகை செய்துள்ளது. அதன்படி கேரளா மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகம் […]
ரஷ்யாவின் ஒரு பல்கலைக்கழகத்தில், மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் 8 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டிலுள்ள பெர்ம் மாநிலத்தில் இருக்கும் ஒரு பல்கலைகழகத்தில் மர்ம நபரால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் குறைந்தது ஆறு நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 8 நபர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். பல்கலைகழகம், இணையதளத்தில், தற்போது, வளாகத்தில் இருப்பவர்கள் முடிந்த அளவிற்கு வெளியேறி விடுமாறு, தெரிவித்துள்ளது. இல்லையெனில், ஒரு அறையில் பாதுகாப்பாக […]
மத்திய பிரதேசத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி முதல் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:”மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வரும் 15ஆம் தேதி முதல் […]
திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் வெளியூரில் வசிக்கும் மாணவர்கள் பலரும் விடுதியில் தங்கி வசித்து வருகின்றனர். தற்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்களின் விடுதிக்கு அருகே சிறுத்தை ஒன்று அந்த பக்கமாக வந்துள்ளது. இதைப் பார்த்த மாணவர்கள் பயந்து விடுதிக்குள் ஓடிச் சென்று […]
B.F.sc, B.Tech, BBA, B.Voc படிப்புகளில் சேர இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் உள்ள 320 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் https://tnjfu.ac.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். விப்ரோவின் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆசிரியர்களுக்கு […]
இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர், சீன பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில் அங்கு, மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் இருக்கும் கயை என்ற மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் அமன் நாக்சென், சீன நாட்டின் தியான்ராஜ் நகரத்தில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். கொரோனா தொற்று பரவ தொடங்கியவுடன் சீனாவில் தங்கியிருந்த இந்திய மக்கள் சுமார் 23,000 பேர், அவரவர் சொந்த ஊருகளுக்கு சென்றுவிட்டனர். எனினும், ஒரு சில […]
மத்திய பல்கலைக்கழகங்களில் ஒபிசிக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் 55 சதவீதம் வரை காலியாக இருப்பதாக மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் 55 சதவீதம் காலியாக இருப்பதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அவர் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ் சி பிரிவினருக்கான இடங்களின் 38. 71 சதவீதமும், எஸ் டி பிரிவில் 41.64 காலி […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல்கலைகழகம் பெயருக்குத்தான் செயல்பட்டு வருகின்றது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இணைத்து அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைப்பு பல்கலைக்கழகமாக செயல்படும் என சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயருக்குத்தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் எந்த பணிகளும் அங்கு நடைபெறவில்லை. எனவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகின்றது. தேர்வு முடிவுகளை பொறுத்தே மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர்வதற்கு தயாராவார்கள். இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டத்தின் படிக்க […]
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் மக்களின் உள்ளாடைகளை மண்ணில் புதைக்குமாறு கூறிய சம்பவம் உலகம் முழுக்க பரவியது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் உள்ள Agroscope என்ற பல்கலைக்கழகமானது, ஆய்வு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த பல்கலைக்கழகம் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உள்ளாடைகளையும் மண்ணில் புதைத்து விடுமாறு கேட்டுள்ளது. இதற்கு சுமார் 1000 நபர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், அந்த உள்ளாடைகள் தோண்டி எடுக்கப்படவிருக்கிறது. அதாவது இந்த ஆராய்ச்சியானது, நாட்டின் மொத்த மண்ணின் […]
ஹைதராபாத் பல்கலைக்கழகம் (யுஓஎச்) ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை 2021-22 கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றது. இதன்படி, 117 பிரிவுகளின் கீழ் பயில 2328 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசி நாளாகும். நுழைவு தேர்வு இந்தியாவின் 39 மாநகரங்களில் ஆகஸ்ட்/ செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லாமல் நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டு அதன்பிறகு தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற கௌதமன் என்பவர் இனிய மணத்தையும் பதவி உயர்வையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, கல்வித்தகுதி சான்றிதழ் பல்கலைக்கழக விசாரணையின்போது கௌதமன் தாக்கல் செய்யவில்லை என்றும், உரிய கல்வி தகுதி பெறாத அவரது நியமனமும் பதவி உயர்வும் சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் […]
கனடாவின் ரொரன்றோ நகரின் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது உறுதியாகியுள்ளது. கனடாவில் தமிழ் குழுக்கள் மற்றும் ரொரன்றோ பல்கலைகழகமும் சேர்ந்து கடந்த 2018 ஆம் வருடத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியது. அதில் தமிழ் கல்விக்கான இருக்கை அமைப்பதற்கான திட்டம் முதன்முதலாக கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அதற்கு வேண்டிய நிதி திரட்டப்பட்டு இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. அதன்படி கனடாவிலேயே பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் கல்விக்காக இருக்கை அமைக்கும் முதல் நகரம் என்ற பெருமையை ரொரன்றோ பெற்றிருக்கிறது. அதாவது இந்தியாவிற்கு அடுத்ததாக […]
கனடாவின் புகழ்பெற்ற ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா தமிழர் பேரவை மற்றும் தமிழ் இருக்கை அறக்கட்டளை அமைப்புகள் சேர்ந்து கனடாவின் ரொறன்ரோ பகுதியின் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அதாவது புகழ்வாய்ந்த ரொறன்ரோ பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க சுமார் 17.1 கோடி பணம் தேவைப்பட்டது. எனவே அதற்கான நிதி திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக உலகெங்கிலும் இருக்கும் தமிழ் மக்கள் நிதியளித்து வந்தனர். […]
பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம். (BDU-Bharathidasan University) மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: திருச்சிராப்பள்ளி – தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வேலை: Junior Research Fellow (JRF) கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 28 வயது வரை இருக்கலாம். மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும். விண்ணப்பக் […]
ஜெர்மனியிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையால் தமிழ் துறை மூடப்படும் அபாயத்தில் உள்ளது. ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் 1963 ஆம் ஆண்டு தமிழ்த்துறை கிளாஸ் லுட்விக் ஜானர்ட் என்பவரால் துவங்கப்பட்டதில் தற்போது 12 மாணவர்கள் ,மட்டுமே பயின்று வருகிறார்கள். உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி பிரச்சனையில் சிக்கிய இந்தப் பல்கலைக்கழகதில் தற்போதும் நிதி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்த் துறையே மூடும் அபாயம் உலக தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடும் நிதி சுமையால் […]
பொலிவியா பல்கலைக்கழகத்தில் பால்கனியில் கூட்டமாக மாணவர்கள் நின்று கொண்டிருந்த நிலையில் தடுப்புக் கம்பி உடைந்ததால் 5 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். மேற்கு பொலிவியாவில் உள்ள ‘பப்ளிக் யூனிவர்சிட்டி ஆப் எல் ஆல்டோ’ என்ற பல்கலைக்கழகத்தில் நிதித்துறை அறிவியல் கட்டிடத்தில் கூட்டமாக மாணவர்கள் பால்கனியில் நின்று உள்ளனர் .அப்போது திடீரென்று பால்கனியின் தடுப்பு உடைந்ததால் 8 மாணவர்கள் கீழே விழுந்தனர். அதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்து 3 மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து […]
விழுப்புரத்தில் ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் பல்கலைகழகத்தை பிரித்து முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதை நிறைவேற்றும் விதமாக சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் கட்டப்பட்ட பின்னர் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் இயங்கும் கல்லூரிகள் அனைத்தும் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளின் […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க காலநீட்டிப்பு கேட்கப் போவதாக விசாரணைக் குழு திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தனது பதவியில் சுமார் 280 கோடி ரூபாய் ஊழல் செய்து இருப்பதாக அரசுக்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து விசாரிப்பதற்கு கடந்த நவம்பர் 11ஆம் தேதி உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா,சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி கலையரசனை விசாரிக்க உத்தரவிட்டார். மேலும் அந்த விசாரணையில் நிதி முறைகேடு, நியமன முறைகேடு […]
பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Project Assistants காலிப்பணியிடங்கள்: 76 பணியிடம்: கோவை சம்பளம்: ரூ. 12,000 கல்வி தகுதி: PG Degree in relevant discipline with NET/SET/CSIR-NET/Ph.D.preferred. தேர்வு முறை: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 28 மேலும் விவரங்களுக்கு https://www.b-u.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்
தமிழ்நாடு கால்நடை மற்றும் அனிமல் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. நிறுவனம் : TANUVAS பணியின் பெயர் : Junior Assistant and Typist பணியிடங்கள் : 162 கடைசி தேதி : 22.12.2020 வயது வரம்பு : 18 முதல் 35 வரை கல்வித்தகுதி : Junior Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி Typist – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் […]
தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்களில் நடப்பு செமஸ்டருக்கனா தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்களில் நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான […]
கொரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இணையம் வழியாக கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கல்வி நிலையங்கள் திறப்பு குறித்த உத்தரவை தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், திங்கட்கிழமை டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை, இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்று தமிழக அரசு அரசாணை […]
கொரோனா பேரிடர் காலத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில் கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று கூட தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே வருகின்ற 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மறு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் […]