Categories
பல்சுவை

சாமானியர்களுக்கும் சொகுசு கார்…. ரத்தன் டாட்டாவின் சாதனைகள்…. இதோ சில தகவல்கள்…!!

ரத்தன் டாட்டா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறித்து பார்க்கலாம். மும்பையில் வாழும் புகழ்பெற்ற டாட்டா குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் ரத்தன் டாட்டா. புகழ் பெற்ற தாஜ் ஹோட்டல் மற்றும் தாஜ் டவர் டாட்டா குடும்பத்திற்கு சொந்தமானவை ஆகும். இவர் 1937-ஆம் ஆண்டு சூனு-நவால் ஹார் முஸ்ஜி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருடைய கொள்ளுத் தாத்தா ஜாம்ஷெட்ஜி டாட்டா ஆவார். இவர் தன்னுடைய மேற்படிப்பை 1975-ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். […]

Categories
பல்சுவை

சிலிண்டர் வெடித்தால் ரூபாய் 40 லட்சம் காப்பீடு…. இந்திய சட்டத்தில் இருக்கும் 5 பவிதிமுறைகள்…. வாங்க பார்க்கலாம்….!!

நம்முடைய இந்திய சட்டத்தில் இருக்கும் சில விதிமுறைகள் குறித்து இதில் பார்க்கலாம். நம்முடைய இந்திய சட்டப்படி மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஹெல்மெட் அணியாமல் சென்றாலும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டாலும் அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக போலீஸ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினால் அவர்களால் அதே நாளில் மேற்கண்ட காரணங்களை கூறி அபராதம் விதிக்க முடியாது. இதனையடுத்து ஒருவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் அவருடைய இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் கலந்திருந்தாலே காவல்துறையினருக்கு அரஸ்ட் வாரண்ட் […]

Categories
பல்சுவை

என்ன? இந்தியாவில் 2 தாஜ்மஹாலா?…. எங்கே இருக்கிறது தெரியுமா?….!!

தாஜ்மஹால் போன்று இருக்கும் இன்னொரு கட்டிடம் பற்றிய சில தகவல்களை வைத்து குறிப்பு பார்க்கலாம். இந்தியாவில் அமைந்துள்ள தாஜ்மஹால் போன்ற இன்னொரு தாஜ்மஹால் அமைந்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் தாஜ்மஹாலை போன்ற ஒரு கட்டிடம் இந்தியாவில் மற்றொன்று உள்ளது. இந்த தாஜ்மஹால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் அமைந்துள்ளது. இது பீபிகா மக்பாரா என அழைக்கப்படுகிறது. இந்த தாஜ்மஹாலை அவுரங்கசீப் தன்னுடைய மனைவி பானு பேகம் நினைவாக கட்டியுள்ளார்.

Categories
பல்சுவை

என்ன? பனி மனிதர்கள் வாழ்கிறார்களா?…. இந்திய ராணுவத்தினர் கூறிய உண்மை…. இதோ சில தகவல்கள்…!!

பனிப் பிரதேசத்தில் வசிக்கும் எட்டி உயிரினம் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். இமாலய பிரதேசமான நேபாளம் மற்றும் திபத் பகுதிகளில் எட்டி உயிரினம் வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த உயிரினம் பார்ப்பதற்கு மனிதர்கள் போன்று இருக்கும். இந்த உயிரினம் இமயமலைக் காடுகளில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எட்டி குறித்த ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் நேபாள நாட்டைச் சேர்ந்த மக்கள் எட்டியை நேரில் பார்த்ததாகவும், மனிதர்களை விட உருவத்தில் பெரிதாக இருக்கும் எனவும் கூறுகின்றனர். இந்நிலையில் […]

Categories
பல்சுவை

“16 வயதில் சந்தித்த அவமானம்” கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை…. அவர் யார் தெரியுமா….?

பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் சந்தித்த அவமானம் தான் அவரை சாதிக்க வைத்ததாக கூறியுள்ளார். கடந்த 1989-ஆம் வருடம் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி என்ற இடத்தில் இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் நடைபெற்றது. இந்த மேட்ச்சில் இந்தியாவின்‌ ஸ்கோர் 38/4 ஆக இருந்தது. அப்போது 16 வயது சிறுவன் ஒருவர் பேட்டிங் செய்வதற்காக களத்தில் இறங்குகிறார். இந்த சிறுவன் 1 ரன் மட்டும் அடித்திருந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பந்துவீச்சாளர் சிறுவனின் மூக்கின் மீது […]

Categories
பல்சுவை

பாம் தயாரிப்பதற்கு பதிலாக கேக் தயாரித்த ஓசாமா பின்லேடன்…. இதுவரை நீங்கள் தெரிந்து கொள்ளாத சில சுவாரஸ்யமான தகவல்கள்…. வாங்க பார்க்கலாம்…!!

இதுவரை நாம் தெரிந்து கொள்ளாத சில சுவாரஸ்யமான 6 தகவல்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த intelligence agency ஒரு முறை ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா டெரரிஸ்ட் வெப்சைட்டை ஹேக் செய்தது. இந்த வெப்சைட்டில் ஒசாமா பின்லேடன் பாம் தயாரிப்பதற்கான பார்முலாவை வெளியிட்டிருந்தார். இதன் காரணமாக பிரிட்டன் intelligence agency அல்கொய்தா டெரரிஸ்ட் வெப்சைட் ஹேக் செய்தது. அதன் பின் பாம் தயாரிப்பதற்கான பார்முலாவை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கேக் செய்வதற்கான […]

Categories
பல்சுவை

“சோலார் சிஸ்டம்” 4.6 பில்லியன் வருடம் பழமையானது…. இதோ சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!

விண்வெளியில் இருக்கும் கோள்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். நாம் விண்வெளியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். நம் சோலார் சிஸ்டம் 4.6 பில்லியன் வருடம் பழமையானது ஆகும். இந்த தகவல் விண்வெளியில் இருக்கும் ஒரு கல்லை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து போது தெரிய வந்தது. அதன்பிறகு Venus கிரகம் தன்னைத் தானே சுற்றுவதை விட அந்த கிரகத்தில் 50 மடங்கு அதிகமாக காற்று வீசுகிறது. இதனால்தான் மனிதர்களால் venus  […]

Categories
பல்சுவை

அடடே! இது அல்லவா வெற்றி…. 2 கைகளையும் இழந்த நபர்…. கிரிக்கெட்டில் சாதித்தது எப்படி?….!!

மாற்றுத்திறனாளியான` ஒருவர் கிரிக்கெட்டில் சாதித்த ஒரு சுவாரசியமான தகவலை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம் . ஜம்மு காஷ்மீரில் ஆமீர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 கைகளையும் இழந்த ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. இதன் காரணமாக ஆமீர் உசேன் தன்னுடைய கால்களால் கிரிக்கெட் பயிற்சி செய்துள்ளார். இவருடைய விடா முயற்சியின் காரணமாக தற்போது ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ஒரு ஸ்டேட் கிரிக்கெட் டீம்க்கு […]

Categories
பல்சுவை

வாரத்தில் 8 நாட்கள் இருந்தால் எப்படி இருக்கும்?…. அந்த நாளுக்கு என்ன பெயர் வைக்கலாம்?…. வாங்க பார்க்கலாம்….!!!!

வாரத்தில் 8 நாட்கள் இருந்தால் எப்படி இருக்கும். அது பற்றிய ஒரு செய்தி குறிப்பை  பார்க்கலாம். வாரத்தில் 7 நாட்கள் இருப்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் 7  நாட்களுக்கு பதிலாக வாரத்தில் 8 நாட்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்பது குறித்து யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அதுபற்றிய ஒரு சுவாரசியமான தகவலை எதிர்பார்க்கலாம். முதலில் வாரத்தில் 7 நாட்கள் எப்படி வந்தது தெரியுமா? கிபி 132-ம் நூற்றாண்டில் ஈராக்கில் பாபிலோன்ஸ் என்ற நாகரீக மக்கள் வாழ்ந்தனர். […]

Categories
பல்சுவை

ஆக்சிஜன் இப்படிதான் உருவாகிறதா….? மரங்களின் முக்கிய பங்கு…. வெளியான சில தகவல்கள்…!!

வளிமண்டலத்தில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் கீழே அதற்கு அடுத்து அதிகமாக இருப்பது ஆக்சிஜன் ஆகும் பூமியின் வளிமண்டலத்தில் 20.95% ஆக்சிஜன் உள்ளது. இது பூமியின் மேலோட்டத்தில் பாதி ஆக்சைடு வடிவில் அமைந்துள்ளது. பூமியில் உள்ள மரம் செடி கொடிகள் நமக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறது. மரங்கள் எவ்வாறு ஆக்சிஜனை உருவாக்குகிறது என்பதை பின்வருமாறு காண்போம். மரத்தில் இருக்கும் செல்களில் குளோரோபிளாஸ்ட் அங்கும் இங்கும் ஓடி கொண்டிருக்கிறது. சூரிய ஒளி எந்த பக்கம் இருக்கிறதோ அதனை […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

105 நொடி தொங்கினால்…. “ரூ 2,000 பரிசு” சென்னை மாலில் சூப்பர் CHALLENGE….!!!!

இன்றைய காலகட்டத்தில் நடைபெறும் சேலஞ்ச் பற்றி சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். இன்றைய நவீன காலகட்டத்தில் நிறைய இடங்களில் சேலஞ்ச் நடைபெறுகிறது. அதாவது இந்த காரியத்தை செய்தால் உங்களுக்கு பரிசுப் பொருள் அல்லது பணம் கிடைக்கும் என்கிறார்கள். இந்நிலையில் சில நிறுவனங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் சில காரியங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்தால் அதற்கு தகுந்தார்போல் பரிசு மற்றும் பணம் கிடைக்கும் என்ற தகவல்களை வெளியிடுவதை நாம் பார்க்கிறோம். அந்த வகையில் சென்னையில் அமைந்துள்ள […]

Categories
பல்சுவை

அடேங்கப்பா…!! ஒரு மேகம் இவ்வளவு எடையா…?? உங்களுக்கான அறிவியல் காரணம் இதோ…!!

சாதாரணமாக நாம் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் போதும், இயற்கை அழகை கண்டு ரசிக்கும் போதும் மேகங்களை பார்க்கிறோம். மேகங்கள் காற்றில் அங்குமிங்கும் உலவி கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மேகங்களுக்கு எடை இருக்கிறதா? இல்லையா? மேகம் காற்றில் தான் பறந்து கொண்டே இருக்கிறது அதற்கு எப்படி இருக்கும் என நாம் நினைத்திருப்போம். அப்படி எடை இருந்தாலும் அது மிகவும் குறைவாக தான் இருக்கும் என்பது பலரின் கருத்து. ஆனால் ஒரு மேகத்தின் சராசரியான எடை 55 லட்சம் கிலோ எடையை […]

Categories
பல்சுவை

அடேங்கப்பா….!! 750 மி.லி தண்ணீர் 45 லட்ச ரூபாயா….? இதான் காரணமா…? சுவாரஸ்யமான தகவல் இதோ…!!

உலகத்திலேயே அதிக மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலின் விலை என்னன்னு தெரியுமா….? அக்வா டி கிறிஸ்டல்லோ டிரிபுடோ ஏ மோடிக்லியானி உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் ஆகும். இதன் 750 மில்லி லிட்டர் தண்ணீர் 45 லட்ச ரூபாய் ஆகும். இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் பிஜியில் உள்ள இயற்கை நீரூற்றுகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை இதில் சரியான அளவில் கலந்து வைத்துள்ளனர். இந்தியாவிலும் இதுபோன்ற இயற்கையான ஸ்பிரிங் வாட்டர் பாட்டில்கள் ரூ.50 முதல் ரூ.150 வரை […]

Categories
பல்சுவை

மயில் தோகை விரித்தால்…. மழை வருமா….? அறிவியல் சொல்லும் உண்மை என்ன….?

நம் நாட்டின் தேசிய பறவை மயில் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் இருக்கிறது. இதில் ஆண் மயில் அழகிய தோகையுடன் காணப்படும். இந்த ஆண் மயில் நீலம் மற்றும் பச்சை கலந்த பளபளப்பான நிறத்தில் காணப்படுகிறது. இதில் பெண் மயில்கள் மங்கலான பச்சை கலந்த சாம்பல் நிறம் மற்றும் பளபளப்பான நீல நிறமும் கலந்து காணப்படுகிறது. இந்த மயில்களின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் […]

Categories
பல்சுவை

என்னது 10 லட்சம் பேர் இறந்துட்டாங்களா…? “மிகவும் ஆபத்தான உயிரினம்” வெளியான அதிர்ச்சி தகவல்…!!

உலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரினம் என்றால் சிங்கம், பாம்பு, புலி, யானை போன்ற விலங்குகள் தான் நினைவுக்கு வரும். ஆனால் உலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரினம் கொசு என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு ஆண்டுக்கு ஏறக்குறைய 10 லட்சம் பேர் கொசு கடிப்பதால் ஏற்படும் நோய்களால் இறக்கின்றனர். இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் மனிதர்களை கடிப்பது பெண் கொசுக்கள் மட்டுமே. இதில் ஆண் கொசுக்கள் இலைகளில் உள்ள தண்ணீரை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளும். மேலும் […]

Categories
பல்சுவை

இது ஆண்களோட டிரஸ்ஸா?…. ஆனா இப்போ பெண்களுக்கான ட்ரெண்டிங்கா மாறிட்டு….!!!!!

ஆண்கள் மற்றும் பெண்களை கவரும் அடிப்படையில் இந்த உலகில் பெரும்பாலான ஆடை அலங்காரங்கள் ட்ரெண்டாகி வருகிறது. அவ்வப்போது பெண்களுக்கு பல்வேறு விதமான புதுப்புது ஆடை வடிவமைப்புகள் வருவது உண்டு. அதேபோன்று ஆண்களுக்கும் பல்வேறு விதமான பேஷன்கள் ட்ரெண்டாகி வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது வெயில் காலத்திற்கு ஏற்றாற்போல கிராப் டாப்ஸ் என்ற ஆடை ட்ரெண்டாகி வருகிறது. இந்த கிராப்டாப்ஸ் தற்போது பெண்களுக்கான விருப்பங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் இதுபோன்ற டாப்கள் பெண்களுக்கான பேஷனாக மாறுவதற்கு முன்னதாவே ஆண்களின் […]

Categories
பல்சுவை

ERASER பிங்க், வெள்ளை நிறத்தில் இருக்க காரணம்…. இதோ சுவாரஸ்யமான தகவல்….!!

ERASERS எதற்காக வெள்ளை அல்லது பிங்க் நிறத்தில் இருக்கிறது என்பது குறித்த சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். நாம் பயன்படுத்தும் ERSERS எதற்காக வெள்ளை அல்லது பிங்க் நிறத்தில் இருக்கிறது தெரியுமா? அது பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். இந்த ‌ERASERS 1916-ம் ஆண்டு முதன் முதலில் உருவாக்கப்பட்டது. இந்த ERASERS உருவாக்கும் போது Pumice என்பதை சேர்த்திருக்கிறார்கள். இந்த Pumice சேர்க்காவிட்டால் பென்சிலால் எழுதப்பட்டதை ERASER அழிக்காது. இந்த Pumice வெள்ளை மற்றும் […]

Categories
பல்சுவை

உயிரை காப்பாற்றும் 3 விஷயம்…. இதை பாலோவ் பண்ணுங்க…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் பிரச்சினை வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் சில குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தங்களது உயிரைக் காப்பாற்றக்கூடிய 3 விஷயங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். அந்த வகையில் ஒருவேளை நீங்கள் தெரியாமல் லிப்டில் மாட்டிக் கொண்டீர்கள் என்றால், அதன் கதவை இழுத்து வெளியே […]

Categories
பல்சுவை

“DO NOT TRY THIS AT HOME” மூக்கிற்கு நேராக நேர்கோடு….. கோழியை மயக்கும் வித்தை….!!

கோழி என்பது  மனிதர்களால் வீடுகளிலும் அதற்கான கோழிப்பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணி பறவையாகும். இதில் பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது. 2003-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையை காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் கோழியை வைத்து பல நாடுகளில் ஏராளமானவர்கள் ஹிப்னாஸிஸ் என்ற ஆராய்ச்சியை செய்துள்ளார்கள்.  என்னவென்றால் கோழியின் முதுகை தரையில் வைத்துப் பிடித்து, […]

Categories
பல்சுவை

“இந்தியர்களுக்கு அனுமதியில்லை” அவமானப்படுத்திய பிரிட்டிஷ் அரசு…. கெத்து காட்டிய ரத்தன் டாடாவின் தாத்தா….!!!!

பிரபலமான தாஜ் ஹோட்டலின் வரலாறு குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை‌ கொலாபா பகுதியில் பிரபலமான தாஜ் ஹோட்டல் மற்றும் தாஜ் டவர் அமைந்துள்ளது. இது ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ஆகும். இந்த தாஜ் ஹோட்டலில் மொத்தம் 565 அறைகள் உள்ளது. இந்த ஹோட்டல் இந்திய சராசனிக் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது 1903 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஹோட்டல் […]

Categories
பல்சுவை

அடடே இனி சினமா-ல வர மாறி….. நீங்களும் டபுள் ஆக்ஷன் பண்ணலாம்…. இந்த APP TRY பண்ணி பாருங்க….!!

எத்தனையோ தமிழ் சினிமா படங்களில் நடிகர்கள் டபுள் ஆக்ஷன் செய்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இன்றைய இளைய சமுதாயத்தினர் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் செய்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலானோர் சினிமா படங்களில் வரும் காட்சிகளை ரீ கிரியேட் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுகின்றனர். இந்நிலையில் டபுள் ஆக்ஷன் காட்சிகளையும் ரீ-கிரியேட் செய்ய வேண்டும் ஆசை இளைஞர்களுக்கு இருக்கிறது. அதற்கு மொபைலில் Splitvid என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். சொந்த கருத்துக்கள், கதைகளை மையமாக வைத்தோ அல்லது […]

Categories
பல்சுவை

டைட்டானிக் விபத்தில் தப்பித்த நபர்…. சொந்த நாட்டில் சந்தித்த அவமானங்கள்…. ஏன் தெரியுமா….?

டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர் பிழைத்த ஒருவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். டைட்டானிக் கப்பல் என்பது ஒரு ஆடம்பர சொகுசு பயணிகள் கப்பல் ஆகும். இந்த கப்பல் வட அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் உருவாக்கப்பட்டது. இந்த டைட்டானிக் கப்பல் 1912 ஆம் ஆண்டு முதன்முதலாக பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலில் சென்றது. இந்த கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தபோது ஒரு நள்ளிரவு நேரத்தில் வட அட்லாண்டிக் […]

Categories
பல்சுவை

இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க…. அப்புறம் இந்த அரசு வேலைக்கு உங்களால போகவே முடியாது….!!

நிறைய பேருக்கு அரசு வேலையில் சேர வேண்டும் என்பது மிகப்பெரிய லட்சியமாக இருக்கும். அதிலும் சிலர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற உயர் பதவிகளில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருப்பர். 18 வயது பூர்த்தியாகி அரசு தேர்வுக்கு படிக்கும் அனைவருக்கும் தேர்வு குறித்த விதிமுறைகள் நன்றாக தெரிந்திருக்கும். ஆனால் மிகவும் சிறுவயதில் இருந்து தான் ராணுவத்தில் சேர வேண்டும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவிகளில் சேர வேண்டும் என்ற கனவுகளோடு […]

Categories
பல்சுவை

“SUMMER SLEEP” மூன்று வருடம் அசராமல் தூங்கும் நத்தை….. பிரம்மிப்பூட்டும் அதிசயங்கள்….!!

நத்தை மெல்லுடலிகளில் வயிற்றுக்காலிகள் வகுப்பைச் சேர்ந்த விலங்கினமாகும். இவற்றின் முதிர்விலங்குகளில் சுருளி வடிவிலமைந்த ஓடு காணப்படும். ஓட்டின் கீழாக தசைப்பாதம் காணப்படும். நத்தை என்பது பொதுவாக கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை என்பவற்றைக் குறிப்பிடப் பொதுவாகப் பயன்படும். ஓடிலாத நத்தை வகைகளும் காணப்படுகின்றன. ஒரு வகை  நத்தைகள் நுரையீரல்களினால் சுவாசிக்கின்றன. அதேவேளை இன்னொரு வகை  நத்தைகள் பூக்களினால் (செவுள்களினால்) சுவாசிக்கின்றன. நத்தைகள் ஈரப்பதமுள்ள உடலின் மூலமாக மிக கடினமான இடங்களிலும் எளிதாக செல்லும் திறன் உடையவை. […]

Categories
அரசியல்

அட..! இது கூட நல்லா இருக்கே…. பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால்…. ஊழியர்கள் குஷி…!!!!

airbnb ஒரு அமெரிக்க நிறுவனமாகும். இது தங்குமிடம், முதன்மையாக விடுமுறைக்கு வாடகைக்கு தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கான ஆன்லைன் சந்தையை இயக்குகிறது. கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட இந்த தளத்தை இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாடு மூலம் அணுகலாம். Airbnb பட்டியலிடப்பட்ட பண்புகள் எதையும் சொந்தமாக வைத்திருக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு முன்பதிவிலிருந்தும் கமிஷன் பெறுவதன் மூலம் லாபம் பெறுகிறது. இந்த நிறுவனம் 2008 இல் பிரையன் செஸ்கி, நாதன் பிளெச்சார்சிக் மற்றும் ஜோ கெபியா […]

Categories
பல்சுவை மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரை மீனாட்சி அம்மன்” கட்டிடக்கலையின் சிறப்புகள்…. கோவிலின் வரலாறு குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்புகள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக மீனாட்சி அம்மனும், சோமசுந்தரேஸ்வரரும், சொக்கநாதரும் இருக்கின்றனர். இந்த கோவிலில் சித்திரை திருவிழா, நவராத்திரி, ஆவணி மூல திருவிழா, தை தெப்ப திருவிழா, ஆடிப்பூரம் என பல்வேறு விசேஷ நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது. […]

Categories
பல்சுவை

“திமிங்கல வாந்தி” 1 கிலோ 1 கோடி…. பல்வேறு விதமான பயன்பாடுகள்…. என்னென்ன தெரியுமா?….!!

திமிங்கல வாந்தி பற்றி இந்த செய்தி குறிப்பில் சில சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம். கடலில் வாழும் அம்பர்கிரிஸ் திமிங்கலம் தன்னுடைய செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் திடமான கழிவுப் பொருள் திமிங்கல வாந்தி என அழைக்கப்படுகிறது. இந்த திமிங்கல வாந்தி கருப்பு, சாம்பல், பழுப்பு மற்றும் வெள்ளை போன்ற பல விதமான நிறங்களில் காணப்படுகிறது. இந்த திமிங்கல வாந்தி அரபு நாடுகளில் அதிக விலைக்கு விற்பனையாகிறது. இந்த திமிங்கல வாந்தியின் ஒரு கிலோ 1 கோடி […]

Categories
பல்சுவை

“சைனைடை விட 1,000 மடங்கு விஷம்” 1 வருடத்திற்கு 10,000 டன் உணவாகிறது….. எந்த உயிரினம் தெரியுமா?…!!

உலகில் உள்ள மீன் இனங்களில் அதிக விஷத்தன்மை கொண்ட மீன் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். உலகத்தில் உள்ள பலவகையான மீன் இனங்களில் அதிக விஷத்தன்மை கொண்டதாக பேத்தை எனப்படும் புப்பர் ஃபிஷ் உள்ளது. இந்த மீன் பேத்தை, பேத்தா, தவளை மீன், முள்ளம் பன்றி மீன் மற்றும் பலாச்சி மீன் என பல வகையான பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த வகையான மீன் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த மீனின் முக அமைப்பு மனித […]

Categories
பல்சுவை

Online Games-க்கு செக்…. ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கப்போகும் அதிரடி முடிவு….!!!!!

ஆன்லைன் கேம்கள், குதிரைப்பந்தயம், கசினோ ஆகியவற்றுக்கு GST விதிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு ஆலோசனை நடந்து வந்தது. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை ரேஸ், கசினோ ஆகியவற்றுக்கு GST விதிப்பது பற்றி அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு மே 2 ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த குழுவில் கோவா அமைச்சர் மௌவின் கோடின்ஹோவும் ஒரு உறுப்பினராக இருக்கிறார். இது […]

Categories
பல்சுவை

“ரோல்ஸ் ராய்ஸ் கார்”… பார்த்து பார்த்து உருவாக்கிய இந்தியர்…. அப்படி என்ன இதுல ஸ்பெஷல்?….!!!!

நம் எல்லோருக்குமே ரோல்ஸ் ராய்ஸ் கார் பற்றி நன்றாகவே தெரியும். இந்த கார் பல்வேறு  சிறப்பம்சங்களுடன் இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் காரை மிஷின் வைத்து செய்யாமல், மனிதர்களின் கைகளாலேயே செய்துள்ளனர் என்பது தான் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வேண்டும் என்பதை விட அதை தொட்டுப்பார்க்க வேண்டும் என்றுதான் நம் அனைவரின் மனநிலையாக இருக்கும். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தேஜூபாய் என்ற நபர் தனக்கான ரோல்ஸ் ராய்ஸ் காரை உருவாக்கியுள்ளார். இந்தக் காரை […]

Categories
பல்சுவை

“41,700 வருடங்கள்” உயிர்வாழும் மண்புழு….. ஆராய்ச்சியில் தெரிந்த உண்மை….!!!

புழுக்கள் குறித்த ஆராய்ச்சியின் போது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு புழு குறித்த தகவல் கிடைத்துள்ளது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி கடந்த 2018-ம் ஆண்டு மண் புழுக்கள் குறித்த ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். இவர் 300 தனித்தனியான இடங்களிலிருந்து வெவ்வேறு வகையான மண் புழுக்களை சேகரிக்கிறார். அதன் பிறகு மண் புழுக்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.அவர் ஆராய்ச்சி செய்த அனைத்து மண் புழுக்களும் இறந்து விட்டது. ஆனால் 2 மண் புழுக்கள் மட்டும் […]

Categories
பல்சுவை

“அளவில் சிறியது மிகக் கொடியது” உலகில் ஆபத்தான உயிரினம்…. எது தெரியுமா?….!!!

உலகின் ஆபத்தான உயிரினம் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். உலகத்தில் மிகவும் ஆபத்தான உயிரினம் என்று நம்மிடம் கேட்டால் முதலில் நியாபகத்தில் வருவது பாம்பு, சிங்கம், புலி போன்ற விலங்குகள் தான். ஆனால் இதெல்லாம் ஆபத்தான உயிரினம் என்றாலும், இதை விட ஆபத்தான உயிரினம் உலகத்தில் உள்ளது. அது என்ன என்று தானே யோசிக்கிறீர்கள். அதாவது உலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரினம் கொசு ஆகும். ஒரு கொசு கடிப்பதினால் வருடத்திற்கு உலகம் முழுவதும் 10,00,000 லட்சம் […]

Categories
பல்சுவை

“மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்” பிரபல கால்பந்து வீரரின் செயல்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் மனநிலையை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக செய்யும் நெகிழ்ச்சி சம்பவம் குறித்து பார்க்கலாம். நோவா என்ற 10 வயது சிறுவன் மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்தார். இந்த சிறுவனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் காப்பாற்றலாம் என கூறியுள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் போது சிறுவனின் மனநிலை மகிழ்ச்சியாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் நோவாவின் பெற்றோருக்கு என்ன […]

Categories
பல்சுவை

“எல்லாமே வெள்ளை தான்” ஜெயில் கைதிகளுக்கு…. கொடுக்கப்படும் மிகக் கொடுமையான தண்டனை…!!!!

வெள்ளை அறை சித்திரவதை என்பது கைதிகளுக்கு கொடுக்கப்படும் மிகவும் விசித்திரமான தண்டனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. முழுவதும் வெள்ளை அறையில் எந்தவொரு பொழுதுபோக்கும் இல்லாமல் கைதிகள் இருப்பதால் கைதிகளுக்கு அதிகப்படியான மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்த சித்திரவதை முறை பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், ஈரானில் அதன் பயன்பாட்டினால் சமீபத்தில் பிரபலமடைந்தது. வெள்ளை அறை சித்திரவதை என்பது கைதிகளின் முழுமையான தனிமைப்படுத்தல் மற்றும் உணர்ச்சி இழப்பு தொடர்பான உளவியல் சித்திரவதை ஆகும். இந்த அறையிலிருக்கும் கைதிகளுக்கு உடை, படுக்கை, சாப்பாடு […]

Categories
பல்சுவை

மனித மூளையில் இவ்வளவு விஷயம் இருக்கா?…. இதுவரை நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்…!!!

மனித உடல் உறுப்பில் அனைத்து பாகங்களும் முக்கியமானது என்றாலும், மூளையின் செயல்பாடுகள் குறித்த சில சுவாரசியமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். மனிதனின் உடல் உறுப்பில் உள்ள அனைத்து பாகங்களும் ஏதாவது ஒரு வேலையை செய்கிறது. அதில் குறிப்பாக மூளை என்பது உடலின் மற்ற பகுதிகளிலிருந்து தகவல்களை பெற்று, அதை விளக்கி நம்மை வழிநடத்துகிறது. மனிதனின் தலைமை செயலகமாக மூளை செயல்படுகிறது. இந்நிலையில் ஒரு மனிதனின் மொத்த எடையிலிருந்து 2% தான் மூளையின் எடை . […]

Categories
பல்சுவை

“மெழுகுவர்த்தி” விண்வெளியில் எப்படி எரியும் தெரியுமா?…. வாங்க பார்க்கலாம்….!!!

மெழுகுவர்த்தியானது பூமியில் எரிவதை விட விண்வெளியில் வித்தியாசமாக எரியும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாம் பூமியில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் போது சுடரானது மேல்நோக்கி எரிகிறது. ஆனால் இதே மெழுகுவர்த்தியை விண்வெளியில் ஏற்றி வைத்தால் எப்படி எரியும் என்று யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? இந்த சோதனையை நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் செய்திருக்கிறது. அதாவது பூமியில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் போது அதிலிருந்து வரும் ஹாட் கேஸ் மேல் நோக்கியும், கூல் கேஸ் கீழ்நோக்கியும் செல்கிறது. […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

“1 மணி நேரத்திற்கு 100 விவாகரத்து” இதுமட்டுமல்ல இன்னும் பல…. பிரபல நாட்டின் சுவாரஸ்ய உண்மைகள் இதோ…!!!!

உலகிலேயே மிகவும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடுகளுடைய பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலகின் மிக முக்கிய நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது.இந்நிலையில் அமெரிக்க பற்றி நீங்கள் இதுவரை அறியாத மிக சுவாரஸ்யமான உண்மை தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம். இந்த நாட்டில் அதிகாரப்பூர்வ மொழி என்று எந்த மொழியும் அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. இங்குள்ள மக்களில் 249 மில்லியன் மக்கள் ஆங்கில மொழியை தான் பேசுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக ஸ்பானிஷ் மொழியில் பேசுகிறார்கள். ஆங்கிலம் மற்றும் […]

Categories
பல்சுவை

‘எனக்கு மொட்டையடிக்கணும்”…. அடம்பிடித்த சிறுவன்…. எதற்காக தெரியுமா?…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

கடந்த 2016 ஆம் வருடம் அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் எப்போதும் ஹேர்கட் செய்யும்போது ஒரு சிறுவன் வேண்டாம் என்று சொல்லி அடம் பிடிப்பான். இதையடுத்து அந்த சிறுவன் தன் தந்தையிடம் எனக்கு மொட்டையடிக்க வேண்டும் என்று கூறினார். இதனைக் கேட்ட அந்த சிறுவனின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். எனினும் சிறுவனின் விருப்பப்படி அவருக்கு மொட்டையடித்து விட்டார். அதன்பின் மறுநாள் சிறுவனை அவரது தந்தை பள்ளிக்கூடத்தில் விட சென்றார். அப்போது அந்த வகுப்பில் இருந்த 80 மாணவர்களும் மொட்டையடித்து […]

Categories
பல்சுவை

முதலைகள் நிறைந்த குளத்தில் இறங்கினால் என்னாகும்?…. வாங்க பார்க்கலாம்….!!!!

முதலைகள் நிறைந்த ஒரு குளத்தில் இறங்கினால் அடுத்து என்னாகும் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். முதலைகள் நிறைந்த ஒரு குளத்தில் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே மிகவும் பயமாக இருக்கிறது. ஆனால் முதலைகள் நிறைந்த ஒரு குளத்தில் நம்மால் பாதுகாப்பாக இறங்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அதாவது ஆஸ்திரேலியா நாட்டில் crocusaurs cove என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் முதலைகள் […]

Categories
பல்சுவை

மர்மம் நிறைந்த கிராமம்…. மனிதர்கள் வாழவே பயப்படுறாங்க…. அப்படி என்ன நடந்துச்சு?…..!!!!

நாம் வாழும் இந்த உலகத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்த இடங்கள் இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் உள்ள மனிதர்கள் வாழ பயப்படக்கூடிய குல்தாரா எனும் கிராமம். 1800ஆம் வருடத்திலிருந்து எந்தவொரு மனிதராலும் அங்கு சென்று வாழவே முடியவில்லை. அதற்கு காரணம் என்னவென்றால் பலிவால் பிராமின்ஸ் என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது ஒரு அமைச்சர் அந்த கிராமத்தில் இருந்த ஒரு பெண் மீது காதல் கொண்டார். ஆனால் கிராம மக்களுக்கு […]

Categories
பல்சுவை

“STONEHENGE” ஏலியன்களால் கட்டப்பட்டதா?…. பல்லாயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் மர்மங்கள்…!!!

உலகில் ஆச்சரியமூட்டும் இடமாக இருக்கும் Stonehenge குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். இங்கிலாந்து நாட்டில் உள்ள வில்ட்ஷயர் என்ற இடத்தில் Stonehenge உள்ளது. இந்த இடம் தற்போது பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கிறது. இந்த Stonehenge சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகும். இது ஒரு சுடுகாடாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒவ்வொரு பாறைகளும் 12 அடி உயரமும், 25 டன் முதல் 500 டன் வரை எடையும்  கொண்டுள்ளது. இவ்வளவு […]

Categories
பல்சுவை

Pisa கோபுரம் விழுந்து விடுமா?…. இன்ஜினியர்களின் செயல்…. வெளியான அறிவியல் காரணங்கள்….!!!

பைசா கோபுரம் சாய்வாக இருப்பதற்கான காரணம் குறித்தும், அதன் பெருமை குறித்தும் இந்த செய்திக்குறிப்பில் பார்க்கலாம்.   இத்தாலியில் பைசா கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரம் சாய்வாக இருந்தாலும் 100 ஆண்டுகள் தாண்டியும், கீழே விழாமல் உறுதியாக நிற்கிறது. இந்த பைசா கோபுரம் எதற்காக சார்ந்தது என்பது பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த பைசா கோபுரம் ஒரு ஆலயத்திற்கு மணிக்கூண்டு வேண்டும் என்பதற்காக முதலில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரம் கட்டுவதற்கான பணி 1173-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. […]

Categories
பல்சுவை

தண்ணீரில் மிதக்கும் பாலமா….? இயற்கை அழகை ரசிக்க அரிய வாய்ப்பு…. எங்க இருக்கு தெரியுமா…!!

தண்ணீரிலும், தரையிலும் இருக்கும் பலவிதமான பாலங்களை நாம் பார்த்திருப்போம். சீனாவில் உள்ள Enshi city-ல் தண்ணீரில் மிதக்கும் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 1640 மீ நீளமும், 4 1/2 அடி அகலமும் உடையது. இந்த பாலத்தை அப்பகுதியில் இருக்கும் காட்டிற்கு நடுவே அமைத்துள்ளனர். இந்நிலையில் பாலம் குறுகியதாக இருப்பதால் பெரிய வண்டிகள் இதன் வழியே போக முடியாது. சுமார் அரை கிலோமீட்டர் தூரம் தண்ணீரில் மிதக்கும் பாலத்தின் மீது நடந்து கொண்டே நாம் இயற்கை அழகை […]

Categories
பல்சுவை

“பழைய ஆண்டிராய்டு போன்”… எல்லா விபரங்களையும் அழிப்பது எவ்வாறு?…. இதோ முழு விபரம்…..!!!!!

கால் செய்வது அல்லது மெசேஜ் அனுப்புவது என்ற வரையறையோடு ஸ்மார்ட்ஃபோன்களின் பயன்பாடு முடிந்துவிடுவது இல்லை. முக்கியமான போட்டோ, வீடியோ, டாக்குமெண்ட்ஸ் உள்ளிட்ட டேட்டா, கான்டாக்ட்ஸ் ஆகிய இதர முக்கிய தகவல்கள் போனில் சேமிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பழைய ஃபோனிலிருந்து புதிய போனுக்கு மாறுவது சற்று சிக்கல் நிறைந்த காரியமாக இருக்கிறது. அதாவது பழைய போனிலுள்ள டேட்டா அனைத்தையும் புது போனுக்கு மாற்றவேண்டும். மேலும் புது போனில் நமக்கு தேவையான ஆப்களை இன்ஸ்டால் செய்து, ஒவ்வொன்றிலும் லாகின் செய்யவேண்டும். […]

Categories
பல்சுவை

தனி ஆளாக தெறிக்கவிடும் Rolls Royce Car பெயிண்டர்…. அப்படி என்ன பண்ணாங்க?…. வாங்க பார்க்கலாம்….!!!!!

நம் எல்லோருக்குமே ரோல்ஸ் ராய்ஸ் கார் பற்றி நன்றாகவே தெரியும். இந்த கார் சிறப்பம்சங்களுடன் இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் காரை மிஷின் வைத்து செய்யாமல், மனிதர்களின் கைகளாலேயே செய்துள்ளனர் என்பது தான் ஆகும். இந்தக் காரின் ஒரு பகுதியில் கோடு போடப்பட்டிருக்கும். அந்த கோடைகூட மிஷின் வைத்து போடாமல் ரோல்ஸ் ராய்ஸ் கம்பெனி என்ன செய்கிறார்கள் என்றால் அதற்கென்று தனியாக ஊழியர் வைத்திருக்கிறார்கள். அவ்வாறு காரில் கோடு போடுபவரின் பெயர் பெயிண்டர் மார்க் கோர்ட் என்று […]

Categories
பல்சுவை

நம்பவே முடியல!… 72 வருஷமா பாட்டி செய்த காரியம்…. வியக்கவைக்கும் சம்பவம்……!!!!!

உலகத்தில் நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்று உணவாகும். அவ்வாறு உணவு இல்லை என்றால் நம்மால் உயிர்வாழ முடியாது. இதில் சில பேருக்கு இனிப்பான உணவு பிடிக்கும், சிலருக்கு கசப்பான உணவு பிடிக்கும். ஆனால் ஒரு பாட்டி வினோதமான ஒன்றை சாப்பிட்டு வந்துள்ளார். அது என்னவென்றால் உத்திரபிரதேசத்தில் உள்ள குஷ்மா டாட்டி என்ற ஒரு பாட்டி 72 வருடமாக வெறும் மண் மற்றும் சாம்பலை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் சிலர் எதற்காக இதை […]

Categories
பல்சுவை

ஒரே ஒரு கிளிக்!…. வாழ்க்கையை முடித்துக்கொண்ட போட்டோகிராபர்…. அப்படி என்ன நடந்துச்சு?…..!!!!!

தென்ஆப்பிரிக்காவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கெவின்கார்ட்டர் பிறந்து வளந்தார். கடந்த 1983 ஆம் வருடத்தில் வாரஇறுதி விளையாட்டுக்களைப் புகைப்படம் எடுப்பவராகத் தொழிலில் இறங்கிய இவர்,மறு ஆண்டில் “ஜோகன்னஸ்பர்க் ஸ்டார்” எனும் பத்திரிக்கையில் இணைந்தார். கார்ட்டர் முதன் முறையாக கழுத்தணிக் கொலை எனப்படும் கொடியதொரு கொலை முறையை பத்திரிக்கையில் புகைப்படமாக வெளியிட்டார். இதேபோன்று பல்வேறு புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக கார்ட்டர் பசிக்காக மரணத்தை எதிர்நோக்கி போய்க்கொண்டு இருந்த ஒரு பிஞ்சுக் குழந்தையை, கழுத்து பார்த்துக் […]

Categories
பல்சுவை

WOW: இந்த மனுஷனோட திறமை வேற லெவல்…. 27 அடி உயரத்தில் “Angel Of Death”….!!!!!

ஆல்ஃபி என்பவர் கடந்த 1990-ல் SE லண்டனில் பிறந்தார். அடுத்ததாக 3 வயதில் இருந்து பிரான்சில் வளர்ந்தார். அங்கு அவர் ஒரு கல் செதுக்குபவர் மற்றும் ஒரு சிற்பியாகப் உருவெடுத்தார். இதையடுத்து கடந்த 2013-ல் இங்கிலாந்துக்குத் திரும்பினார். அங்கு அவர் உலோகத்துடன் சிற்பம் செய்யத் தொடங்கி, அவரது தொழில் வாழ்க்கை தொடங்கியது. அந்த சமயத்தில் அவர் தன் முதல் திட்டமான லண்டனிலுள்ள டெஃப்ராவின் முகப்பில் அமர்ந்து இருக்கும் காண்டாமிருகத்தின் தலை முதல் சர்வதேச அளவில் பிரபலமான ஸ்பூன் […]

Categories
பல்சுவை

எலுமிச்சை மீது வாகனம் ஏற்றுவது ஏன்….? பின்னால் இருக்கும் அறிவியல் என்ன…? வாங்க பார்க்கலாம்….!!

எலுமிச்சைபழம் இன்றி கோவில் நிகழ்வுகள், சுபநிகழ்ச்சிகள் ஏதும் உண்டா?.. என்று கேட்டால் கிடையாது. கோவில்களில் சுவாமி சிலைக்கு எலுமிச்சை மாலை போடுதல் வழக்கமாகும். அதேபோன்று நாம் ஏதாவது ஒரு வண்டி எடுத்தால் அதன் டயர் கீழ் எலுமிச்சை பழத்தை வைத்து ஏற்றுவது வழக்கமான ஒன்று. ஆனால் அவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்று நமக்கு தெரியாத ஒன்றாகும். எலுமிச்சை பழத்தில் பல நற்குணங்கள் இருக்கிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் கைகளில் எலுமிச்சைபழத்தை வைத்து கொண்டால் கையுறைகள் போட்டுக் கொண்டதற்கு […]

Categories
பல்சுவை

“EMU WAR” கோழிகளிடம் தோற்று போன ஒரு நாட்டின் ராணுவம்….!!

ஆஸ்திரேலியாவில் 1932-ஆம் ஆண்டு கிரேட் ஈமு வார் நடைபெற்றது. இது ஈமு கோழிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற போராகும். முதலாம் உலகப் போருக்குப் பிறகு போரில் வேலை பார்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட வீரர்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தினால் விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலங்களில் விவசாயிகள் தங்களது கோதுமை பயிர்களை வளர்க்க தொடங்கினர். 1932-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோதுமை பயிர்களின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்தது. அதே நேரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த கோதுமை […]

Categories

Tech |