நாட்டில் சென்ற சில தினங்களுக்கு முன் பனிக் காலம் துவங்கியதால் பல இடங்களில் பனிப் பொழிவு அதிகமாகவுள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லியின் நோய்டா நகரில் பனிப் பொழிவு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதியிலுள்ள பள்ளிகள் அனைத்துக்கும் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக கவுதம் புத் […]
Tag: பள்ளிகள்
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் […]
பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாளை முதல் அடுத்த மாதம் 1-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மெண்ட்களை வழங்கலாம். இந்நிலையில் 1-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு […]
பள்ளிக் கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஜனவரி மாதம் 4-ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில் நமது தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு இந்த மாதம் 16-ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்கியது. […]
அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மற்ற மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொது தேர்வு எழுதும் 10,11,12 -ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் விடைத்தாள்களை இந்த மாதம் இறுதிக்குள் திருத்த வேண்டும். மேலும் வருகின்ற 23-ஆம் தேதியுடன் இந்த தேர்வு நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் 24-ஆம் […]
மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதன் காரணமாக கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்தனர். இந்த நிலையில் இந்த விடுமுறை நாளை ஈடு செய்ய, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி பள்ளிகள் செயல்படும். இதேபோல் மேலும் பல மாவட்டங்களில் நாளை பள்ளிகள் இயங்க வாய்ப்புள்ளது. எனவே, […]
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (17.12.2022) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாட வேலையை பின்பற்றி முழு வேலை நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேபோல மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 2ஆம் தேதி விடுமுறை […]
சென்னை மாவட்டங்களில் சனிக்கிழமையான நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டங்களில் சனிக்கிழமையான நாளை (17.12.2022) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9ஆம் தேதி விட்ட விடுமுறையை ஈடு செய்ய வெள்ளி கிழமை அட்டவணைப்படி நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வெள்ளிக் கிழமை பாடவேளையை பின்பற்றி இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள 13,404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1. பணி: assistant commissioner-52 சம்பளம்: 78,800-2,09,200 வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். 2. பணி: Vice principal சம்பளம்: 56,100-1,77,500 வயது: 45க்குள் இருக்க வேண்டும். 3. பணி: post graduate teacher சம்பளம்: 47,900-1,42,400 […]
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் நமது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. தற்போது மாவட்ட அளவிலான போட்டிகள் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 27-ஆம் […]
மீண்டும் ஏழை, எளிய மாணவர்களுக்காக இலவச பேருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மற்ற மாநிலங்களைப் போல மாணவர்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தினம்தோறும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் பேருந்துகளும் குறைவாகவே இயக்கப்பட்டது. இந்த நிலையில் […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி கடந்த வாரங்களில் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மலைப்பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையை […]
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு இன்று (12ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், […]
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, […]
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. இதற்கிடையில் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கனமழையின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். மேலும் சில இடங்களில் […]
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று (05.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சாலைகள் மற்றும் வீதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் […]
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சாலைகள் மற்றும் வீதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக […]
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் மற்றும் சென்னையில் இன்று (04.11.22) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் […]
புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். […]
தமிழகத்தில் 11,265 அரசு பள்ளிகளில் 30 மாணவர்கள் மட்டும் படித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சமீபத்தில் பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது. அதில் எட்டாம் வகுப்பு வரை உள்ள 11,251 அரசு பள்ளிகள், ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 14 பள்ளிகளில் 30 மாணவர்கள் மட்டுமே படிப்பது தெரிய வந்துள்ளது. எதற்காக இந்த பள்ளிகளுக்கு 10,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்று […]
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (03.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை […]
தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புதிய இயக்குனராக நாகராஜ முருகன் என்பவர் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு முதன்மை செயலாளர் காகலா உஷா வெளியிட்டுள்ள செய்தியில்,ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கூடுதல் உதவி திட்ட இயக்குனர் நாகராஜ் முருகன் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக பணியில் இருந்த கருப்பசாமி என்பவர் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்ற நிலையில் அந்த காலி பணியிடத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் உதவி திட்ட இயக்குனர் […]
கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் கனமழைக்கு […]
தமிழகத்தில் மழைக்கால பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில், “வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மழைக்கால விபத்துக்கள், பாதிப்புகளை தொடங்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதற்கான நிதி வழங்கப்படவில்லை. ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வழங்கப்பட வேண்டிய இந்த நிதி நடப்பாண்டில் இதுவரை […]
குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் : அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள் […]
சிவகங்கை மாவட்டத்தில் வருடந்தோறும் அக்டோபர் 27ம் தேதி மருதுபாண்டியர் நினைவுதினம் கொண்டாடப்படும். இந்த வருடம் மருதுசகோதரர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்மாவட்டத்தில் அக்டோபர் 23 முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வீர பாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு 1801, மே 28ஆம் தேதி மருதுபாண்டியர்கள் அடைக்கலம் கொடுத்தனர். அதற்கு எதிராக ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். அதன்பின் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்று மருதுசகோதரர்கள் அக் 24ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். […]
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணத்தை இப்போதிருந்தே திட்டமிட ஆரம்பித்துள்ளனர். இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது திங்கட்கிழமை வர இருக்கும் நிலையில், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களுமே விடுமுறை தான். இந்த 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு முதலே சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி விடுவார்கள். இதனால் […]
தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10.10.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், […]
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் (இன்று) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கள்) பள்ளிகள் திறக்கப்படுகிறது. […]
தமிழக முழுவதும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அங்கன்வாடி மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெற்று வந்தது.அவ்வகையில் தமிழக முழுவதும் 2381 எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த வருட முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக அண்மையில் அரசு அறிவித்தது.அரசு இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற்று மீண்டும் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் செயல்படும் என […]
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம்.கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அது குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாடப்பட உள்ள நிலையில்தமிழக முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று புதிய மாணவர்களை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளில் ஒரு ஆசிரியர் ஆவது இருந்து மாணவர் சேர்க்கையை நடத்திட […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் வழக்கம் போல பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக பள்ளிகளில் புதிதாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.அதன் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது.இதனை தொடர்ந்து காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய அரசுக்கு கோரிக்கைகள் எழுந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் […]
தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஜாதி மற்றும் மத வேறுபாடு இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி மாணவர்கள் ஜாதி அடிப்படையில் கையில் கயிறு கட்டுவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதரிடையே தற்போது ஆர் எஸ் எஸ் அணி வகுப்பிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் […]
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலரும் உயர் கல்வி தொடராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் உயர் கல்வியில் அனைவரும் சேர்ந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.ஒருவேளை உயர் கல்வியில் சேரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாணவர்களை தொடர்பு கொண்டு காரணத்தை கேட்டறிய வேண்டும். அவர்கள் உயர் கல்வியில் சேர்ந்திட தேவையான […]
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலரும் உயர் கல்வி தொடராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி இயக்குனர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் உயர் கல்வியில் அனைவரும் சேர்ந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.ஒருவேளை உயர் கல்வியில் சேரவில்லை என்றால் […]
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 – 9ஆம் வகுப்பு வரை கலை பண்பாடு செயல்பாடுகள் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 – 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், இரு பாடவேளைகளை கலை, பண்பாடு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறக் கலை ஆகிய 5 கலைச் செயல்பாடுகளில் மாணவர்கள் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளும் முழுமையாக திறக்கப்பட்ட மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு நாளை தொடங்குகிறது.அரசு […]
தமிழகத்தில் பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,பாஞ்சால குளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் ஜாதியை பாகுபாடு கண்டறியப்பட்டால் உடனே தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.பள்ளிகளில் ஜாதியை பாகுபாடு நடைபெறுகிறதா என்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் முறையாக […]
தமிழக முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநில முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4,5ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் 26 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஒரே வகையான வினாத்தாளை கொண்டு முதல் பருவ […]
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. நடப்பு 2022-23ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்து பாடங்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் […]
புதுச்சேரி மாநிலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் பரவி வருவதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மூட சுகாதாரத் துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் மட்டுமே அனுபவித்து வந்ததால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளதாக ஆய்வுகள் வெளியிடப்பட்டது. இதனால் விரைந்து பள்ளிகள் நேரடி முறையில் செயல்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதால் நடப்பு கல்வியாண்டில் வழக்கம் போல் ஜூன் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. […]
இந்தியா முழுதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக சென்ற 2020 மற்றும் 2021 ஆம் வருடங்களில் பள்ளிகள் நேரடியாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் மாணவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டது. இத்தகைய சமயத்தில் கல்வி பாதிப்படையக் கூடாது என ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்துவந்தது. இதையடுத்து பல்வேறு கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக படிப் படியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதன் […]
கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் காலை வேளையில் பணிக்கு தாமதமாக வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கிறது. அண்மையில் மண்டியா மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிக்கு மந்திரி நாகேஸ் சென்றிருந்தபோது, அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்திருந்தார்கள். இந்நிலையில் கர்நாடகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிகள் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயத்தில் ஆசிரியர்களின் வருகைபதிவு செய்ய […]
அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு தொடர்பான சுற்றறிக்கையும் அனுப்பி வைத்துள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் கல்விச்சிறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. பல முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. அதுவும் திமுக பொறுப்பேற்ற பிறகு பள்ளி கல்வித்துறையில் புதிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது. தற்போது பள்ளிகளில் மாணவர்களை கொண்டு தூய்மை பணிகளை செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கமாக பள்ளியில் என்சிசி மற்றும் […]
சமீபத்தில் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகின்றது. இதனால் அதிகமானோர் உயிர் இழக்கின்றனர். அதற்கு காரணமாக முன்வைக்கப்படுவது ஹெல்மெட் அணியாமல் இருப்பதுதான். ஹெல்மெட் அணிவது மிக அவசியமானது. எனவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலிஸ் தரப்பில் அடிக்கடி அறிவுறுத்தி வரும் நிலையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நேற்று முந்தினம் காலை கோவை-திருச்சி ரோட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு […]
தமிழகத்தில் கடந்த 28/7/2022 முதல் 10.8. 2022 வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்கும் இடவசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள் அமைக்கப்படும் முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியா தீபம் போன்றவை பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் […]
தொடர் விடுமுறையின் காரணமாக மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் குறைந்ததையடுத்து மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான […]
தமிழகத்தில் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 6ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு செப்., 30 காலாண்டு தேர்வு முடியும் நிலையில், தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 26-ல் தொடங்கி 30 ஆம் […]