வன்முறை நிகழ்ந்த கனியாமூர் பள்ளியை இயக்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இயங்கி வரும் சக்தி மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி தொடர்ந்து நான்கு நாட்களாக மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் மாணவர் அமைப்பினர் […]
Tag: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவியின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்கும் என கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி ஸ்ரீமதி திடீரென விடுதியின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் ஸ்ரீமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் மாணவியின் பெற்றோர் தன்னுடைய மகள் தற்கொலை […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக நேற்று பயங்கர போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்த பென்ச், சார் உள்ளிட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தனர். காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சி மேற்கொண்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி ஆகியோர் […]
கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் அரசின் கொள்முதல் விலைக்கு டெண்டர் எடுக்க வர முற்படாததால், இலவச லேப்டாப் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனால், லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்தாகுமா என்று மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், […]
பிரபல கோவிலின் தேரோட்டத் திருவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் 4-வது தலமான சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பாக குலோத்துங்கச் சோழன் காலத்தில் கோவில் வளாகத்தில் திருத்தேர் வலம் வந்ததாக கல்வெட்டு குறிப்புகளில் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கு காரணமாக தேர் மதில் சுவர்கள் சேதமடைந்து தேரோட்டம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் […]
வகுப்பறைகள் மேம்பாட்டிற்காக 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 2022 -2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டுதொடர் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் இன்று சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் “இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் சார்பாகவும் அனைத்து எம்எல்ஏக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள கிண்டியில் நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. இங்கு இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியன்ஸின் சார்பில் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கும் போது நல்ல குழந்தையாகத்தான் பிறக்கிறது. ஆனால் அந்த குழந்தை நல்லவராவதும் தீயவராவதும் […]
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிகாகல்வித்துறை அமைச்சர்கள் விளக்கமளித்தனர். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலின் போது கல்வித்துறைக்கு 37,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 6-ஆம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கல்வித்துறை மீதான விவாதத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி […]
கிராமப்புறங்களில் நூலக சேவை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் நூலகங்கள் இல்லாத கிராமங்களில் நூலக நண்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இந்த சேவை தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலமாக 15 லட்சம் வாசகர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 56.26 லட்சம் நிதி ஒதுக்கப்படும். இதனையடுத்து 76 நூலகங்களில் மெய்நிகர் நூலகத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 1 லட்சம் மாணவர்கள் […]
தமிழகத்தில் ஆசிரியர்கள் பலரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டு பணியில் சேர முடியாமல் அவதியில் உள்ளனர். இதற்கிடையே எதிர்க்கட்சிகள் உடனடியாக ஆசிரியர்கள் பணி நியமனத்தை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தர்மபுரி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளை மேம்படுத்துவது […]
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று வட்டார கல்வி அலுவலர் களாக நேரடி பணி நியமனம் பெற்ற 95 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தரமான கல்வி வழங்குவது அரசின் கடமை ஆகும். அதனால்தான் முதல்வர் தனது அனைத்து நிகழ்வுகளிலும் கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து அதிகமாக பேசி வருகிறார். ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக மட்டுமே சீரான எதிர்காலத்தை உருவாக்க […]
தமிழகத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் குறித்த தேதிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டில் கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பின் அரசு ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அளித்தாலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு குறைந்ததையடுத்து பல மாதங்கள் சென்ற பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து […]
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை 50% வரை குறைக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பரவிய கொரோனா 2ஆம் அலை காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மதிப்பெண்கள் ஆனது மதிப்பீட்டு முறையில் வழங்கப்பட்டது. தற்போது நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி கல்வித்துறை பொது […]
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் முழுவதும் நடத்தி முடிக்க வேண்டுமென பள்ளிகல்வித்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கடந்த 2 வருடங்களாக அதிகரித்த காரணத்தால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. மேலும் பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பருவத்தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புக்கள் நடைபெற்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் 10 […]
திருமண மண்டபத்தின், திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான கொரோனா விதிமுறையை கடைபிடிக்காததை அன்பில் மகேஷ் நகைச்சுவையாக கூறியிருக்கிறார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு விழாவில் பங்கேற்ற போது, கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அதிக கூட்டம் கூடியதாக விமர்சனங்கள் எழுந்தது. அதாவது மயிலாடுதுறையில் திருமண மண்டபத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக உதவி எண்களை அறிமுகப்படுத்தி, மாணவிகள் அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முதல் கட்டமாக அனைத்து வகுப்பறைகளிலும் கரும்பலகையில் உதவி எண்கள் ஓட்டுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நோட்டுப் புத்தகங்களில் ஸ்டாம்ப் போல உதவி எண்களை ஒட்டுவதற்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அடுத்த […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி தொலைக்காட்சி […]
தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் தனி வேளாண் நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை மீதான 3-வது நாள் விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , இந்த நிதிநிலை அறிக்கையானது 6 மாதத்திற்கு மட்டுமே, அடுத்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் ஜூலை-31 ஆம் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில், தனியார் பள்ளி சார்பில் கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 200 பயனாளிகளுக்கு மளிகை பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றார். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்த்தும் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே பாடங்களை கற்று வருகிறார்கள். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள், work from Home உள்ளிட்டவற்றால் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், “ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது” என்று மின்சாரத்துறை அமைச்சர் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு விரைவில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் உடனான கலந்துரையாடலுக்கு பிறகு இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் கடந்த வருடமே மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் இந்த வருடமும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. தேர்வுகளும் ஆன்லைன் வழியே நடத்தப்பட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு கட்டாயம் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் கடந்த வருடமே மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் இந்த வருடமும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. தேர்வுகளும் ஆன்லைன் வழியே நடத்தப்பட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு கட்டாயம் […]
பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் படையெடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் குள்ளம் பாளையத்தில் அமைந்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு 500க்கும் மேற்பட்டோர் படையெடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் வெள்ளாளபாளையம் எனும் இடத்தில் காவல்துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டனர். அதாவது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வெயிட்டேஜ் முறையின் அடிப்படையில் பணிகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். எனினும் தேர்ச்சி பெற்று எட்டு வருடங்கள் கடந்த […]