கடந்த நான்கு மாதமாக கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்விநிலையங்கள் அடைக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றன. இருந்தாலும் மாணவர்கள் கல்வியை மேம்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தனியார் பள்ளிகளிலும் இணையம் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகின்றன. தமிழக அரசும் கல்வி தொலைக்காட்சியை ஆரம்பித்து வகுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசாங்கம் சார்பாக பள்ளிகளில் பாட புத்தகம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது.தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் […]
Tag: பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் ஆன்-லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பில் சில தேர்வுகளும் மட்டும் நடைபெற்றுள்ள நிலையில் 10ம்வகுப்பு உள்ளிட்ட மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு தற்போது வரை முடிவு எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் என்பதால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் […]
புதிய பாடத்தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 15ம் தேதி தொடங்க இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலாண்டு, அரசியாண்டு தேர்வுகள் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் 11ம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் 11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை பள்ளிகள் தொடங்கிவிட்டதாக புகார் […]
பத்தாம் வகுப்புக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எழுதாவிட்டாலும் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. மேலும், தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என உயர்நீதிதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த 2 […]
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர சிறப்பு அதிகாரிகளை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேவையான பேருந்துகளின் எண்ணிக்கை, வழித்தட விவரங்கள் வரும் 8ம் தேதி பகல் 3 மணிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி […]
வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.மேலும் பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு […]
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என மொத்தம் […]
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கல்வியாண்டு என்பது கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் குறைவாக இருக்கிறது. 210 நாட்கள் செயல்பட முடியாத ஒரு சூழல் என்பது ஊரடங்கால் ஏற்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டுதமிழக அரசு சார்பில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருந்தது. அதே போல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. தற்போது பெற்றோரிடமும் கருத்து கேட்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளிகளை திறந்தால் பெற்றோர்கள் குழந்தைகளை […]
வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் நேரடியாக 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஜூன் 15ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 25ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இதனையடுத்து தேர்வு நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 5 இணை இயக்குனர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூன் 15 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியை மேற்பார்வையிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அனைத்து பள்ளிகளும் […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனையில் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி ஜூன் 15ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 25ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என […]
11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே 11 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. அதேபோல 10ம் வகுப்பு பொதுதேர்வானது வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதற்கான பணிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. இதனிடையே 11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த நிலையில் 11, 12ம் வகுப்பு […]
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? இல்லையா? என்பது குறித்து எந்த விதமான முடிவுக்கும் தமிழக அரசு வரவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். ஒருவேளை அரசு தேர்வுகளை நடத்த உத்தரவிட்டால் தேர்வுகளை […]
10ம் வகுப்பு தேர்வு எழுத தனிமைப்படுத்த பகுதிகளுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவுகளுக்கு இடையே தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு […]
கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அந்தந்த பகுதியிலே தேர்வு மையம் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்வு ஜூன் 1ல் இருந்து 12 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு கேள்வியாக முன்வைக்கப் பட்டது என்னவென்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய மாணவர்கள் எப்படி இதில் பங்கேற்பார்கள் ? அவர்கள் அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு வெளியே விடுவதற்கு அனுமதி வழங்கப்படாதே ? என்ற […]
கொரோனவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை கணக்கெடுத்து பட்டியலை அனுப்புமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழகத்தில் 10ம் வகுப்பு […]
அரசு பள்ளி ஆசிரியர்கள், வரும் 21ம் தேதிக்குள் தற்போது பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” வெளிமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 21ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் இருப்பிடத்தை உறுதி செய்யவேண்டும் என்பவை […]
10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை திட்மிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பை தவிர ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி […]
கொரோனாவால் கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? என்பது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 15 நாளில் அறிக்கை அளிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், கல்விநிறுவனகள் ஆகியவை மூடப்பட்டன. ஒரு வருடத்திற்கு […]
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டிருந்த பிளஸ் 1 வகுப்புக்கான ஒரு தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. அப்படி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதியை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 11ஆம் வகுப்புக்கான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் இந்த மூன்று பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுகள் அனைத்தும் ஜூன் 2ஆம் தேதி […]
ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூன் 1ஆம் தேதி முதல் 12 தேதி வரை பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்காக என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதாத 36 ஆயிரத்து 842 மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும். 12 வகுப்பு […]
50 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள ஆசிரியர்களை கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. பல ஆசிரியர்கள் தன்னார்வமாக பணியாற்ற விருப்பம் தெரிவிப்பதால் மருத்துவம் அல்லாத பணிகளுக்கு பயன்படுத்தலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று வரை, தமிழகத்தில் கொரோனாவால் […]
புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக்கட்டணம், பேருந்துக் கட்டணத்தை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்து அரசு அலுவலங்ககள், தனியார் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள், வணிக வளாகங்கள், மால்கள் என அனைத்துமே மூடப்பட்டது. பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு […]
1-12ம் வகுப்புக்கான புத்தகங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு தேர்வுகள் ஒத்திவைப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் 10ம் வகுப்புக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அடுத்த கல்வி ஆண்டுக்கு மாணவர்களுக்கான புத்தகங்கள் […]
தனியார் பள்ளிகளில் கட்டாய சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடுவதற்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீட்டின் அட்டவணை என்பது ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி மே 23ம் தேதியோடு நிறைவடையும். ஏப்.2ம் தேதியில் இருந்து தனியார் பள்ளிகளில் எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் வெளியிடப்படும். அதன் பிறகு மே 3ம் தேதியில் இருந்து மே 18ம் தேதி வரை அதற்கான […]
வரும் 20 ஆம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவிட்டுள்ளது. அப்படி வரும் பணியாளர்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, பாடநூல் கிடங்குகளை கிருமி நாசினி தெளித்து தயார்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள், […]
தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் வெளியிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு தேர்வுகள் ஒத்திவைப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் 10ம் வகுப்புக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த […]
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏப்., 14 வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு ஏப்., 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு […]
கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாய் +1 தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல +1 , +2 பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டுமென ஆசிரியர்களும் , பெற்றோர்களும் கோரிக்கை வசித்துவந்த நிலையில் திட்டமிட்டபடி +1 , +2 தேர்வு நடைபெறுமென்று அரசு தெரிவித்து வந்தது. இதைத்தொடர்ந்து நாளை மாலை 6 மணி முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு , […]
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]
ஏப்ரல் 21 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இன்று காலை தமிழக முதல்வர் பழனிசாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். கடந்த வராம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை […]
சென்னை அரசு பள்ளியில் ஆசிரியை அடித்து மாணவன் கண்பார்வை பறிபோனது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர்கள் வேலு-ரேகா தம்பதியினர். வேலு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் முதல் மகனான கார்த்திக்(வயது 14), மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிக்குச் சென்ற கார்த்திக்கின் பின் மண்டையில் தமிழ் ஆசிரியரியாக பணிபுரியும் […]
பிளஸ் 2 பொதுத் தோவுகள் நாளை தொடங்கவுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16,359 மாணவர்கள் மற்றும் 19,166 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 35,525 பேர் எழுத உள்ளனர். இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் […]