சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்பது போன்ற செய்தி எப்படி வெளிவந்தது? என்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் எப்போதும் இருக்கக்கூடிய தேர்வு முறைதான் இருக்கும். பொதுவாக தனியார் பள்ளிகள் 11-ம் வகுப்பு பாடத்தை நடத்தாமலேயே […]
Tag: பள்ளிக்கல்வித் துறை
மாணவர்கள் பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், அதற்கான பொறுப்பை பெற்றோர்தான் ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிச் சொத்துகளுக்கு ஒரு குழந்தை சேதம் விளைவித்தால் பெற்றோர், பாதுகாவலரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்து தர வேண்டும் என்றும் பள்ளிக் குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபட்டால் முதலில் தக்க ஆலோசனை வழங்க வேண்டும் மேலும், தொடர்ந்து தவறுகள் செய்யும் மாணவர்களை வேறு […]
மாணவர்களுக்கு கலைத் திறன் மேம்பட பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளி கல்வி துறை ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடப்பாண்டிற்கு ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்த டெல்லியை சேர்ந்த பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்குவார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி கலை துறையில் […]
தேர்வு எழுதிய 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் ஆல் பாஸ் ஆக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு தனி தேர்வு நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் அனைவரையும் ஆல் பாஸ் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாடத்திட்டத்தில் மூன்றாவதாக ஒரு மொழி சேர்க்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் தவறானது என பள்ளி கல்வித்துறை விளக்கம் கொடுத்துள்ளது. இந்தியாவுக்கான புதிய கல்வி கொள்கை 2020-ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு முன்னதாக தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழி கொள்கை உள்ளிட்டவைகளுக்கு தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி புதிய கல்விக் கொள்கை வரைவு […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து 9 ஆம் முதல் 12-ஆம் வகுப்பு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோ பதிவு செய்ய தகுந்த ஆசிரியர்களை தேர்வு செய்து பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரை அனைத்து அழகுகளுக்கான பாடப் பதிவினை மேற்கொள்ள செய்யாமல் வெவ்வேறு ஆசிரியர்களை பயன்படுத்துதல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு உரிய பாட ஆசிரியர்கள் தேர்வு செய்வதுடன் அவர்களுக்குத் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக தகவல் அளித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் […]