தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் என அமைச்சர் அன்பில் மகெஷ் கூறியுள்ள நிலையில், போட்டித் தேர்வு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிகள் நவம்பர் 3ஆவது வாரத்தில் இருந்து தொடங்கப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு அரசு பயிற்சி அளிக்கிறது. 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இலவசமாக பயிற்சி பெறலாம். இந்த ஆண்டுக்கான பயிற்சிகள் […]
Tag: பள்ளிக்கல்வி ஆணையர்
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதான தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் (State Board) கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 9-ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. […]
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]