பீரங்கி குண்டு வெடித்ததில் நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மெட் மாகாணம் நாட் அலி மாவட்டத்தில் மத பள்ளிக்கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த மத பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்திற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு வெடிக்காத பீரங்கி குண்டு ஒன்று கிடைத்துள்ளது. இந்த நிலையில் அது வெடிகுண்டு என்பது அறியாத அந்த சிறுவர்கள் அதை பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் […]
Tag: பள்ளிக்கூடம்
உக்ரைன் நாட்டில் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 60 நபர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்து வருவதால் பக்கத்து நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என்று பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகளும் கட்டிடங்களும் குண்டுவீச்சு தாக்குதலில் பலத்த சேதமடைந்திருக்கிறது. இந்த போர் மேலும் தொடரும் என்று கூறப்பட்டிருப்பதால், சொந்த நாட்டிலேயே மக்கள் […]
ரஷ்ய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 பேர் பலியாகி உள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா 20-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் தெற்கே உள்ள மைகோலாயிவ் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள் மீது ரஷ்ய படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பள்ளிக்கூடம் தரைமட்டமாகி விட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக உக்ரேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் […]
ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடம் ஒன்றில் வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் மாகாணத்தில் ‘ஹம்சா அல் நோரியா மதராசா’ என்ற பெயரில் பழைய வீடு ஒன்றில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளிக்கூடத்தில் வழக்கம் போல் வகுப்பறைகள் செயல்பட்டு கொண்டிருந்த வேளையில் திடீரென ஒரு வகுப்பறையின் மேற்கூரை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்துள்ளது. இந்த பயங்கர […]
ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில் சென்னை அருகே திருப்போரூரில் நடிகர் விஜய் பள்ளிக்கூடம் கட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. தந்தை இயக்குனராக இருந்தாலும் தனது விடா முயற்சியின் காரணமாக இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பவர் தளபதிவிஜய். இந்த சூழலில் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில் சென்னையை அடுத்த திருப்போரூரில் நடிகர் விஜய் ஒரு பள்ளிக்கூடம் கட்டி வருவதாக […]
ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் விளையாட்டு நிகழ்ச்சியின் போது ஐந்து குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் டெவன்போர்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள ஹில்ரெட்ஸ் தொடக்கப்பள்ளியில் நேற்று பரபரப்பாக விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. அதில் பலூன் மூலம் வீடு போன்ற அமைப்பு ஒன்று விளையாட்டு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடு போன்ற அமைப்பானது முற்றிலுமாக காற்று நிரப்பப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு தயார் நிலையில் இருந்தது. அதேபோல் ஒரு பக்கம் குழந்தைகளுக்காக தண்ணீரில் […]
அரசு பள்ளிக்கூடத்தில் வில்லுப்பாட்டு உள்ளிட்ட புதிய முற்சியின் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 520 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டது. கடந்த 1 2/2 வருடங்களாக வீடுகளில் முடங்கி கிடந்த மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று […]
பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தை திறக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 6-வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 969 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்குள்ள விளையாட்டு மைதானம் பள்ளிக்கூடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தில் பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் சிலர் கைப்பந்து விளையாடி வந்துள்ளனர். இதனால் பள்ளிக்கூடத்தின் […]
அமெரிக்காவில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் வகுப்புகளை கவனித்துக் கொண்டிருந்த வேளையில் 15 வயது மாணவன் ஒருவன் தன்னுடன் பயிலும் சக மாணவர்களை பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளான். இந்த பயங்கர சம்பவத்தில் 17 மற்றும் 14 வயதுடைய மாணவிகள் 2 […]
அரசு பள்ளிக்கூடத்தில் வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள் நாற்காலிகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சியில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தை சுற்றிலும் உள்ள சுற்றுச்சுவரானது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விடுமுறை நாட்களில் அப்பகுதியை சேர்ந்த சிலர் பள்ளிக்கூடத்துக்கு வந்து சீட்டு ஆடுவது, மது அருந்துவது என பல்வேறு சம்பவங்களில் […]
பள்ளிக் கூரை இடிந்து விழுந்ததில் குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். பிரித்தானியா தலைநகரான லண்டனில் Dulwich என்ற பகுதியில் துர்லோ பார்க் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இருக்கும் Rosemead Preparatory என்ற பள்ளியில் விபத்து ஒன்று நடந்துள்ளது. இது குறித்து லண்டன் தீயணைப்பு குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “பள்ளியில் உள்ள இரண்டாவது மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 20 பேர் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு […]
மாநில அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் 250 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கொங்கு கல்வி நிலைய பள்ளிக்கூட வளாகத்தில் சதுரங்க சர்க்கிளின் சார்பாக மாநில அளவில் செஸ் போட்டியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சதுரங்க சரக்கிள் செயலாளரான ரமேஷ் தலைமை தாங்கினார். அப்போது கொங்கு கல்வி நிலைய பள்ளிக்கூட தாளாளர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 9, 13, 17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் […]
கனடாவில் பள்ளிக்கு அருகே சுமார் 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் செயின்ட் யூஜின்ஸ் என்னும் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது இந்த பள்ளிக்கூடம் கத்தோலிக்க திருச்சபையால் கடந்த 1912 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 1970 ஆம் ஆண்டு வரை இயங்கியுள்ளது. இதனையடுத்து தற்போது இந்த செயின்ட் யூஜின்ஸ் என்னும் பள்ளிக்கு அருகே சுமார் 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் உடல்கள் செயின்ட் யூஜின்ஸ் பள்ளியில் […]
மும்பையில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. மகா சக்தி அறக்கட்டளை சார்பில் உருவாகியுள்ள இந்த பள்ளியில் 25 பேர் கல்வி பயில்கின்றனர். சமூகத்தில் இன பாகுபாட்டை எதிர்கொள்ளும் திருநங்கைகளை மேம்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 5 லட்சம் திருநங்கைகள் இருப்பதாக தெரிய வந்த போதிலும் உண்மையில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை எங்கும் இல்லாத வகையில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு பள்ளிக்கூடம் […]
நைஜீரியாவில் பயங்கரவாதிகள் பள்ளி மாணவர்களை கடத்திச்சென்று தங்களுக்கு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்வதால் அந்நாட்டில் அமைந்திருக்கும் பாதுகாப்பில்லாத சுமார் 7 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவர்களை கடத்தி செல்லும் போகோஹரம் எனும் பயங்கரவாத அமைப்பு அவர்களை தற்கொலைப்படையினர்களாக மாற்றி வந்துள்ளார்கள். அதோடு மட்டுமல்லாமல் நைஜீரியாவிலிருக்கும் பிற பயங்கரவாத அமைப்புகள் பள்ளி மாணவர்களை கடத்திக் சென்று விட்டு தங்களுக்கு தேவைப்படுகின்ற விஷயங்களை சாதித்துக் கொள்கிறார்கள். மேலும் சில பயங்கரவாத அமைப்புகள் பள்ளிக்கூடங்களுக்கு உள்ளேயே புகுந்து அங்கிருக்கும் […]
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் விழுந்த விண்கல்லை ஆய்வு செய்யச் சென்ற நாசா விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்து முகம் சிவந்து திரும்பினர். ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் விண்கல் ஒன்று விழுந்துள்ள படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. விண்கல் தொடர்பாக விசாரிக்க நாசா விஞ்ஞானிகள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான மார்க் ஆலனை சந்தித்தனர். ஆசிரியர் அளித்த பதிலை கேட்டு விஞ்ஞானிகள் முகம் சிவந்து போனது. ஏனென்றால் படத்தில் இருந்த விண்கல் […]
கொரோனா பெருந்தொற்று காரணமாக 8 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதுவும் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த வகுப்புகள் நடைபெறுகிறது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி குறைந்த மணி நேரங்களே மாணவர்கள் பள்ளியில் பாடங்களை கற்க வழிகாட்டு நெறிமுறைகளில் படி அணுகப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி கடந்த ஆண்டை காட்டிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு வர இன்னும் இரண்டு மாதங்களே உள்ள […]
பள்ளியை திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் என்பது பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் ஐஏஎஸ் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைவருமே பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு பிறகு 16 ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய நான்கு வகுப்புகள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் […]
உத்திரபிரதேச அரசு வழிகாட்டுதலின்படி 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 19ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவியதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை விடப்பட்டது. கொரோனா இன்னும் குறையாத காரணத்தால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடைபெறுகிறது. ஊரடங்கு […]
குஜராத்தில் தமிழ் பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது – தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளிக்கூடத்தை மூட வேண்டாம் என அம்மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார்.அதில்,தமிழ் பள்ளிக்கூடம் மூடப்படுவது வேதனை அளிக்கிறது , தமிழக தொழிலாளர்களின் குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழ் வழி கல்வி செயல்படுவதற்கான செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என குறிப்பிட்டு இருக்கிறார்.இதன் மூலம் […]
சுற்றுசூழல் ஆர்வலராக இருந்த 17 வயது கிரேட்டா தன்பர்க், ஒரு வருடத்திற்கு பிறகு பள்ளியில் சேர உள்ளார். சென்ற வருடம் ஜூன் மாதம் தனது பள்ளிக் கல்வியை பாதியிலேயே நிறுத்துவிட்டு உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு சார்பான போராட்டங்களை கிரேட்டா தன்பர்க் முன்னெடுத்து செயலாற்ற தொடங்கினார். இதன் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு பிரச்சாரம் செய்ய பயணத்தை தொடர்ந்தார். அதனால் அவர் பள்ளிக்குச் செல்லாமல் தொலைதூர கல்வி முறையில் பாடங்களை கற்று வந்தார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த […]