நடப்பு கல்வி ஆண்டிற்கான பத்து மற்றும் பதினோராம் வகுப்புக்கான பொது தேர்வு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. அதற்காக மாணவர்களுடைய பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி அரசின் எமிஸ் செயலி வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த தளத்தில் தங்களுடைய மாணவ, மாணவிகளின் விவரங்களை சரி பார்த்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து, விவரங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு […]
Tag: பள்ளி தலைமை ஆசிரியர்
தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற இசேவை மூலம் விண்ணப்பிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இ சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக சரிபார்ப்பு செய்து சான்று வழங்கப்படும் என்றும் தமிழ் வழியில் படிப்பதற்கான சான்றிதழ் தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாகவே மட்டுமே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் மழை பெய்தால் பள்ளியின் தலைமை ஆசிரியரே விடுமுறை அறிவிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பகுதிகளில் மழை பெய்யும் அளவைப் பொறுத்து கல்வி அலுவலர்களிடம் தெரிவித்துவிட்டு […]
தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே நல்ல புரிதல் ஏற்படும் வகையில் எவ்வாறு மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்துகிறது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் வினை இயக்குனர்கள், முதன்மை, மாவட்ட மற்றும் வட்டார கல்வி அதிகாரிகள், பயிற்சி […]