விஷம் வைத்து பள்ளி சிறுவன் பாலமணிகண்டன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பொதுமக்கள், வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் இயங்காததால் நகரம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. பதற்றமான சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tag: பள்ளி மாணவன்
காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து நேற்றுமாலை 5:30 மணி அளவில் காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு போகும் அரசு பேருந்து புறப்பட்டு செல்லும்போது அந்த அரசு பஸ்ஸின் முன்பு படியில் பள்ளி மாணவர்கள் 4 பேர் தொங்கியவாறு பயணித்துள்ளனர். இதையடுத்து பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மேலே எறி வரும்படி கூறியுள்ளார். இதன் காரணமாக ஓட்டுநருடன் பள்ளிமாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பேருந்து நிலைய பின்புறம் பகுதியில் பேருந்தினை நிறுத்தி ஓட்டுநர் அந்த மாணவர்களிடம் படியில் பயணித்ததால் கீழே […]
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே 9ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படை காவலாளராக பணியாற்றி வருகிறார். இவர் மகன் சஞ்சய் வயது 15. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளியில் நன்றாக படிக்க வேண்டும் என சஞ்சய்க்கு எழுத்து பயிற்சி கொடுத்துள்ளதாக […]
குஜராத்மாநிலம் ஆமதாபாத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் அறிவியல் பாடத்தேர்வில் விடைத்தாளுடன் 500 ரூபாயை இணைத்து, இப்பணத்தை எடுத்துக் கொண்டு என்னை தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிடுங்கள் என எழுதி இருந்தது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த மாணவன் அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை செய்யப்பட்டிருப்பதுடன், இத்தேர்வில் தோல்வி எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் பல்கலைக்கழகத் தேர்வுகளில் நடைபெறுவது வழக்கம் ஆகும். எனினும் பள்ளித்தேர்வுகளில் இது போன்று நடந்ததில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வருடம் […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஹர்தோய் என்ற பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிளா சிங். இவர் தனது வகுப்பு மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விடக் கூறியுள்ளார். இதையடுத்து நாற்காலியில் சொகுசாக அமர்ந்திருந்த ஆசிரியருக்கு அந்த மாணவன் மசாஜ் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அப்போது மற்ற மாணவ, மாணவியர் வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். ஆசிரியைக்கு மாணவன் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து […]
நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. மாணவ, மாணவிகள் தொடர்ந்து இதனால் பெரும் டார்ச்சர் அனுபவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளிடம் தவறான எண்ணத்தோடு பழகுவது, ஆபாச வார்த்தைகள் பேசுவ.து தேவையில்லாத இடங்களில் தொட்டு பேசுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நெல்லையில் 10ஆம் வகுப்பு மாணவனுக்கு விடுதி காப்பாளர் மற்றும் 12ஆம் வகுப்பு சக மாணவன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்த […]
வடஅமெரிக்க நாடான மெக்ஸிகோவில் பழங்குடி மொழி பேசியது ஒரு குற்றம் என்று பள்ளி மாணவன் வகுப்பறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மெக்சிகன் பள்ளிமாணவன் வகுப்பறையில் தீவைத்து எரிக்கப்பட்டான். இனபாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர போராடும் ஒரு நாட்டில் பழங்குடியின மொழியில் பேசியதே அவனது ஒரே குற்றம் ஆகும். ஜூன் மாதம் மத்திய மாநிலமான குரேடாரோவிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இச்சம்பவத்தில் 14 வயது மாணவனான ஜுவான் ஜமோரானோவின் (Juan Zamorano) இருக்கையில் […]
கேரள மாநிலம் பத்தனம் திட்டா கொடு மண் சாலைக்கு அருகே ஒரு சுவாரசியமான பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு சிறுவனின் புகைப்படத்துடன் கூடிய கவர்ச்சிகரமான தலைப்பு ஒன்று உள்ளது. “சிலர் வரும்போது வரலாறு வழி மாறும்”என்ற தலைப்பின் சிறுவன் வைத்துள்ள அந்த பிளக்ஸ் அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு நடந்த முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற குஞ்சாக்கு ஜிஸ்ணு என்ற சிறுவன் தனக்குத்தானே வாழ்த்து தெரிவித்த […]
பீகார் மாநிலம் டர்பங்கா என்ற மாவட்டத்தில் அக்னிபாத் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாலை பள்ளியிலிருந்து மாணவ மாணவிகளை அடைத்துக்கொண்டு திரும்பிய வேன் ஒன்று போராட்டக்காரர்கள் மத்தியில் சிக்கியது. அதனால் வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர். வன்முறையாளர்கள் சிலர் பள்ளி வேன் மீது கற்களை வீசினர். அதனால் அப்பகுதியை பதற்றமான சூழ்நிலை ஆக மாறியது. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் நெருங்கியதால், பள்ளி வேன் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் வேனில் பள்ளி சீருடையில் […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்ற பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் திரு முருகன். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி திருமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரணி பகுதியில் உள்ள காந்திநகர் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் தந்தூரி சிக்கன் மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு வீட்டிற்குச் சென்ற திருமுருகனுக்கு இரவு முழுவதும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் […]
சென்னை ஆலந்தூர் மடுவின்கரை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரின் மூத்த மகன் விஷ்வா. இவர் ஆலந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி வகுப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து படுக்கையறைக்கு சென்று அவர் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதைப்பார்த்த இவருடைய பாட்டி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்தபோது விஷ்வா மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தொங்கியபடி இருந்துள்ளார். […]
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ படையினர் பிப்ரவரி 24ஆம் தேதி தாக்குதலை தொடங்கினர். உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவுக்கு இணையாக பதிலடி கொடுத்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் போர் தாக்குதலின்போது ரஷ்ய வீரர்களால் உக்ரைனிய பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அவற்றில் ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி உக்ரைனில் 17 வயது சிறுமி ஒருவர் அவருடைய தாயார் மற்றும் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத்தில் உள்ள மோடி நகரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி பேருந்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த அந்த மாணவன் ஜன்னலின் வெளியே எட்டி பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பம் ஒன்று சிறுவனின் தலையில் பயங்கரமாக மோதியது. அதனால் பலத்த காயமடைந்த சிறுவன் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். […]
சென்னையில் வேன் மோதி மாணவன் இறந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வேன் ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி ஆகியோர் மீது வழக்கு […]
அரசு பேருந்து ஓட்டுனரை பள்ளி மாணவன் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயில் பகுதியை சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுநர் காளிதாஸ். இவர் மாநகர அரசு பேருந்தை ஓட்டி சென்ற போது பேருந்தில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மிகவும் அட்டகாசம் செய்துள்ளனர். இதனை பொறுக்க முடியாத ஓட்டுநர் காளிதாஸ் போக்குவரத்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனால் அட்டகாசம் செய்த மாணவர்களை போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். அதன் பிறகு பேருந்தில் நான்கு மாணவர்கள் ஏறி […]
துறையூரில் பள்ளி மாணவன் காணாமல் போன தேதியில் ஆசிரியை காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியார் பள்ளியில்அப்பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுவன் கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவன் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் துறையூர் காவல் நிலையத்தில் மாணவனின் பெற்றோர் […]
நெற்குன்றம் அருகே பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் நெற்குன்றம் சக்தி நகரில் வசித்து வருபவர் காளிதாஸ். இவருக்கு 16 வயதில் அஜய் என்ற மகன் இருக்கிறான். இவர் அங்கு இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அஜயின் அப்பா – அம்மா இருவரும் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அஜய் மற்றும் அவருடைய அண்ணன் இருவரும் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவனை தலைகீழாக கட்டி தொங்க விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அஹ்ரௌராவில் உள்ள சத்பவ்னா ஷிக்ஷன் சன்ஸ்தான் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் சோனு யாதவ் என்கின்ற சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை உணவு இடைவேளையின் பொழுது மற்ற மாணவர்கள் அனைவரும் உணவு அருந்திக் கொண்டிருந்த வேளையில், இந்த சிறுவன் மட்டும் குறும்பு செய்து வந்துள்ளான். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பள்ளி […]
சென்னையில் இன்று அதிகாலை ரித்தீஸ் என்ற பள்ளி மாணவன் சைக்கிளில் சென்றுள்ளான். அப்போது அவரின் சைக்கிளை மறித்து முகமூடி கொள்ளையர்கள் கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் வண்டியில் துரத்தி வந்து செல்போனை கேட்டுள்ளனர். அப்போது மாணவன் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடியுள்ளார். அதன்பிறகு தப்பித்து ஓடும் போது கொள்ளையர்கள் கத்தியால் குத்தி உள்ளனர். பக்கத்தில் இருந்த டீக்கடையில் தான் தஞ்சம் புகுந்ததாகவும், கொள்ளையர்கள் வடமாநிலத்தவரை போல இருந்ததாகவும் […]
திண்டுக்கல்லில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவன் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆரியநல்லூரில் நிக்சன்பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக நிர்வாகி. அதே பகுதியில் வசித்து வரும் அதிமுகவைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கும் இவருக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அலெக்ஸ், நிக்சன்பால் ஆகிய இரு தரப்பினருக்கும் அலெக்ஸ் வீட்டின் அருகே இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் கம்பி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் […]
தமிழகத்தில் தஞ்சை, விழுப்புரத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
சென்னையை சேர்ந்த சிறுமி சமூக வலைத்தளம் மூலம் மலர்ந்த காதலால், தற்போது பரிதவித்து நிற்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் திருப்பாசூரை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவருக்கும் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தொடர்ந்து பேசி வந்தனர். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த சிறுமி சமூக வலைத்தளம் மூலமாகவே அந்த மாணவனை காதலித்து வந்துள்ளார். முகநூலில் அறிமுகமான மூன்று நாட்களில் […]