மராட்டிய மாநிலமான தானேபகுதியில் இன்று காலை ஒரு பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்நிலையில் சறுக்கலான பாதையில் டிரைவர் பின்னோக்கி போக முற்பட்டார். அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒரு பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக வேனிலிருந்து மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இதற்கிடையில் சில குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tag: பள்ளி வேன்
மத்தியபிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் 3 வயது சிறுமி நர்சரி வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமி கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அவ்வாறு பள்ளியிலிருந்து வீடிதிரும்பிய சிறுமியின் உடை மாற்றப்பட்டிருந்தது. மாற்று உடையை யாரோ சிறுமிக்கு அணிந்து அனுப்பியுள்ளனர். இதன் காரணமாக சந்தேசமடைந்த சிறுமியின் தாயார் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு பள்ளியில் வைத்து சிறுமியின் உடையை யாரும் மாற்றவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு உடல்நலக் […]
வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் 32 பள்ளி குழந்தைகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இலங்கை நாட்டில் வலஸ்முல்ல பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று திரும்பிய பள்ளி வேன் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 32 பள்ளி குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள […]