அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பரவியேற்ற பின் முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்திற்கு பழனிசாமி சென்றுள்ளார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் மலர் தூவியும் மேளதாளங்கள் முழங்கவும் வரவேற்பு அளித்திருக்கின்றனர். இந்த நிலையில் மின் கட்டண உயர்வுக்கு திமுக அரசே கண்டித்து சிவகாசியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசிய போது அதிமுக தமிழகத்தில் 32 காலம் ஆட்சி செய்துள்ளது. ஆனால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என […]
Tag: பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் கோவையில் உள்ள விமான நிலையத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது. நான் டெல்லியில் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை அவர் முன் வைத்தேன். அதில் முக்கியமானது நமது தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிவு நிலையில் உள்ளது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு […]
சென்னையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், “அண்ணன் ஓபிஎஸ்-ம் நானும் பிரிந்திருந்தோம்; 2017இல் மீண்டும் இணைந்தோம்; ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் அதை ரத்து செய்ய ஓபிஎஸ் முயற்சித்தது எந்த விதத்தில் நியாயம்” என்று கேள்வி எழுப்பினார். மாபெரும் இயக்கமான அதிமுகவை சில பேர் தன்வசம் கொண்டு போக முயற்சித்ததே இன்றைய நிலைக்கு காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.
சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் எடப்பாடி பி.ஏ. ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, சேலம் மாவட்டத்தில் சென்று ஒவ்வொரு அடிப்படை உண்மை தொண்டனையும் கேட்டால் தெரியும். சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் இளங்கோவன், எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பாளர்களாக 99 சதவீதம் தொண்டர்களுடைய மனநிலை, இருவருக்கும் எதிராக இருப்பது தான் உண்மை. நிச்சயம் ஓபிஎஸ் அவர்களை ஏற்றுக் கொண்டு வருங்கால அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஓபிஎஸ் தலைமையில் மாபெரும் வெற்றி காணும்… ஐயா […]
மேற்கு வங்காளத்தில் மாநில ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் ஆளுநர் சட்டமன்றத்தை முடக்கி வைத்தார். இதேபோல தமிழகத்திலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதனால் தமிழக சட்டப் பேரவையும் முடக்கபட வாய்ப்புள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மதுரையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் “தமிழக சட்டமன்றத்தை முடக்கிய விடுவோம் எனக் கூறுகிறார்கள். தைரியம் இருந்தால் முடக்கி […]
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் ஒன்றியத்தில் கடந்த 21-ஆம் தேதியன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில், பேச்சாளரை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேடையிலேயே கடுமையாகத் தாக்கினர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயக முறையில் நடந்த அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டத்தில், இவ்வாறு திமுக-வினர் அராஜகத்தில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினரைத் தடுக்காமல், அங்கிருந்த காவல்துறை கைகளைக் கட்டியபடி […]
கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு சீன தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார்.. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்த தமிழ்நாட்டு வீரர் பழனி என்பவருக்கு டெல்லியில் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை அவரது மனைவி வானதிதேவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இடம் பெற்றார்.. […]
சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஆட்சியில் இருந்தது. தற்போது சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதனால் அரசு பங்களாவை அங்கிருந்து அமைச்சர்கள் உடனே காலி செய்ய வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி, அங்கேயே தங்க கோரிக்கை வைத்தார். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிசாமி தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே […]
தமிழகத்தில் புதிய அரசு அமையும் வரை காபந்து அரசு செயல்படும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பழனிசாமியின் ராஜினாமாவை ஆண் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். மேலும் […]
எடப்பாடி க. பழனிசாமி மே 12ஆம் தேதி 1954 பிறந்தார். அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகின்றார். வாழ்க்கைக் குறிப்பு: இவர் சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் என்ற சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர் மற்றும் தவசியம்மாள் ஆகியோர்கள் ஆவர். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு […]
எடப்பாடி பழனிசாமி சசிகலாவை தொடர்ந்து எதிர்த்து வந்தால் ஸ்டாலினை அதிமுகாவே முதல்வர் பதவியில் அமர்த்தி விடும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கி வருவதால் நாடு முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது. அதன்படி அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள ஓட்டுக்களை அதிமுக பெற வேண்டும் என்றால் சசிகலாவை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அப்படி அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் தென் மாவட்டங்களில் இருந்து […]
தமிழக தேர்தலை கருத்தில் கொண்டு நேற்று திமுக சார்பில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்றைக்கு சென்னை மாநகரத்தில் பார்க்கிறோம் எங்க பார்த்தாலும் குப்பை நகரமாக மாத்திட்டாங்க. சிங்கார சென்னையை சீரழிந்த சென்னையாக ஆக்கிட்டாங்க. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200வார்டுகளிலும் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் தான் ஊருக்கு. குப்பை மேடுகளில் தான் இப்போ மக்கள் நடந்து போயிட்டு இருக்காங்க. குப்பைத்தொட்டிகளில் இல்ல, இருந்தாலும் அது நிரம்பி வழிஞ்சிட்டு இருக்கு, எடுக்குறது இல்ல.நிரம்பி […]
சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்திய சுதந்திரப் போரில் வரலாற்றுப் பதிவாக கொங்கு மண்டலத்தில் இருப்பது தீரன் சின்னமலை ஆங்கிலப் படைகளை எதிர்த்து நடத்திய போர். இந்த தீரன் சின்னமலையின் போர் படையில் முக்கிய தளபதியாக இருந்தவர்தான் பொல்லான். பொல்லான் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதால் அரசு அலட்சியப்படுத்துகிறது என்ற குரல்களும் எழுந்தது. முதலமைச்சரிடம் பல்வேறு அமைப்பு சார்பில் […]
பேரறிஞர் அறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் விட் செய்துள்ளனர். திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும்,தமிழக முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அனுசரிக்கப்படுகிறது. அவரின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ட்வீட் செய்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவீட்டில், தமிழ்மொழி,தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைக்க வீர சபதம் ஏற்போம் என்று தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும் சபாநாயகர் தனபால், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவின் நினைவிடம் அவரது சமாதியை மையமாக வைத்து சுமார் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 15 மீட்டர் […]
சேலம் எடப்பாடியில் உள்ள காளியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு விநாயகர் ஓம் காளி அம்மன் திருக்கோயில் உள்ளது. 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட இந்த கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவருக்கு கும்ப மரியாதை அளித்து கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். இவ்விழாவிற்கான […]
கோவையில் இரண்டாம் நாள் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் பழனிசாமி தீய சக்தியான திமுகவை தேர்தலில் இருந்து புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரண்டாம் நாள் பரப்புரை தொடங்கினார். அதன்பின் அவர் மக்களிடையே பேசியதாவது,சிங்காநல்லூரில் பொதுமக்களிடம் பேசிய ஸ்டாலின் வேறு அவதாரம் எடுத்து விட்டார். தேர்தல் என்றாலே அவர் பல்வேறு நாடகங்களை நடத்தும் நடிகராக மாறுகிறார். இந்த நாடகத்திற்கு வடநாட்டில் உள்ள பிரசாந்த் கிஷோர் […]
சென்னையில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும்”,”சாதித்து காட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள அருள்முருகன் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, சுய உதவிக் குழுக்களுக்கு உயிர் கொடுத்தவரே ஜெயலலிதா தான். திமுக ஆட்சி காலத்தில் சேவைக் குழு பெண்களுக்கு வங்கி இணைப்பு தொகையாக […]
முக அழகிரியால் திமுக உடையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து வருகிறார். திமுக கட்சியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே முக அழகிரி நீக்கப்பட்டார். ஆனால் அவரது பெயர் இன்னும் அரசியலில் ஓங்கி ஒலிக்கிறது. சமீபத்தில் மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை நடத்திய அழகிரி ஸ்டாலினால் நிச்சயம் முதலமைச்சராக முடியாது என்று தெரிவித்தார்.அதற்கு முன் சென்னைக்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முக அழகிரி சந்திப்பார் என்ற தகவல் கசிந்தது. […]
முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க உள்ளார். சென்னை மெரினாவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் நினைவிட பணி இன்னும் ஓரிரு தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பதற்காக வரும் 18ம் தேதி டெல்லி சென்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுக்க உள்ளார்.மேலும் முதலமைச்சர் பழனிசாமி ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று பார்வையிட்டு அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று கூறினார். வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் அனைத்து இடங்களிலும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்றும்,நாளையும் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இன்று காலை பவானியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது, நான் பவானி அரசு பள்ளியில் தான் ஆறாம் வகுப்பு முதல் […]
திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெத்துவேட்டுகளின் சாயம் வெளுக்கிறது என்று பதிவிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். அதிமுக- திமுக இடையே கருத்து மோதல் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி குற்றங்களை சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவினை […]
நாமக்கல்லில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “முதலமைச்சர் நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல” என்று தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கிறது. அதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் தற்போது அவர்களின் அரசியல் பிரச்சாரத்தை தொடங்கி யுள்ளனர். அரசியல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து கடந்த 19ஆம் தேதி பிரசாரத்தை […]
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக பரபரப்பு கடிதம் ஒன்று வந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க இருப்பதால் முழுவேகத்தில் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஒருவரையொருவர் சமூக வலைத்தளங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் பிரச்சாரத்திற்கு செல்ல இருக்கும் நிலையில் மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் பழனிசாமி மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவேன் என்று சென்னை கேகே நகர் […]
மக்களின் வாழ்வாதாரம், GST நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும் சட்டப்பேரவையில் விவாதிக்கவில்லை என்று மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் மூன்று நாட்கள் மட்டுமே கூடிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக கோரிய ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தனவா ? ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம், முதலீட்டாளர்கள் மாநாடு-முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் ஈர்த்த முதலீடுகள் வேலைவாய்ப்புகள் எவ்வளவு? ஜல் ஜீவன் மிஷன் திட்ட […]
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவை மதிக்காமல் முதலமைச்சரே ஊருக்கு ஊர் கூட்டம் கூட்டி விழா நடத்துவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டி டி வி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டி டி வி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 5 பேருக்கும் மேல் பொது இடத்தில் கூட கூடாது என்று சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை […]
மூத்த அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில வாரங்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.. இது தமிழகத்தில் பேசு பொருளாகி வருகிறது. முதல்வர் வேட்பாளர் யார்? என்ற விவாதம் […]
நில அளவை உட்பிரிவு, புல எல்லை அமைத்தல், மேல்முறையீடு வழங்குதல், கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குவதற்கான கட்டணங்களை வருவாய் துறை உயர்த்தியுள்ளது. அதன்படி அளவீடு புத்தகப் பிரதி (பக்கம் ஒன்றுக்கு) A4 அளவுக்கு ரூ. 20-ல் இருந்து ரூ. 50 ஆகவும், புல அளவீட்டு புத்தகப் பிரதி ( பக்கம் ஒன்றுக்கு) A3 அளவுக்கு ரூபாய் 100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில், தமிழக […]
கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் தான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் மேலும் கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்துத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. அரசு சார்பில் 45, தனியார் சார்பில் 30 பரிசோதனை மையங்கள் […]
கொரோனா பாதிக்கப்படுபவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் ஏதும் இருப்பதில்லை என முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 20% பேருக்கு மட்டுமே அறிகுறி தெரிகிறது. அதிலும், 7% அல்லது 8% பேருக்குத்தான் தீவிட பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கடைகளில் பொருட்களை […]
சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” கொரோனா நோய் தடுப்புக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனது தலைமையில் மருத்துவ வல்லுனர்கள் உள்ளிட்ட குழுக்களுடன் பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 54% ஆக அதிகரித்துள்ளது. வீடு வீடாக சென்று நோய் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் வீதி வீதியாக ஒலிபெருக்கிகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. […]
சீன ராணுவம் தாக்குதலில் வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் பழனியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். லடாக் எல்லையில் நேற்று இரவு சீன துருப்புகளுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சீனா ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட ஒரு உயர் அதிகாரி வீரமரணம் அடைந்தனர். 1975க்கு பிறகு சீனாவுடன் […]
கொரோனா உயிரிழப்பு தொடர்பான தகவல்களை மறைப்பதாக கூறப்படுவதால் எந்த உண்மையும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா உயிரிழப்பை எப்படி மறைக்க முடியும்?, உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு எந்த நன்மையும் இல்லை என கூறியுள்ளார். இன்று சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார். அதன்பின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்ப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 6.09 லட்சம் பேருக்கு தமிழகத்தில் […]
சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள 8 மருத்துவ மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்தது முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அக்யுரே,பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டம், சீமென்ஸ் ஹெல்த் கேர், ஜிஈ ஹெல்த் கேர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உகந்த சூழல்களை பட்டியலிட்டு, 8 நிறுவனங்களுக்கு தனித்தனியே முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் தேவைகளுக்கு ஏற்ப ஊக்கசலுகைகளை அரசு […]
கொரோனா காரணமாக பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், […]
விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தபோது தலைமைக்காவலர் சேட்டு விபத்தில் பலியானார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சேட்டு என்பவர் ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் கர்நாடக – தமிழக எல்லையில் உள்ள ஜூஜூவாடியில் கொரோனா […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்தம் அடிப்படையில் 2,570 செவிலியர்கள் அடுத்த 6 மாத காலம் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆவர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு […]
வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிய விரும்பினால் பணி செய்யலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறியதாவது: ” அரசின் அறிவிப்புகளை மக்கள் கடைபிடித்தாலே கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரியலாம். மேலும் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல தொழிலாளர்கள் விரும்பினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். படிப்படியாக […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் பேசி வருவதாவது, ” நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பரவலை தடுக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் தினமும் 3 […]
எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கூறியதாவது, ” அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காமல் விடுபட்டவர்களை கண்டறிந்து வழங்குங்கள். நோய்த்தடுப்பு பகுதிகளில் நகரும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல விவசாயிகளுக்கு தடை இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம், சமூக விலகலுடன் முகக் கவசம் அணிந்து நடைபெறுவதை உறுதி […]
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த 3 மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் […]
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். மருத்துவரின் மனைவி மற்றும் மகனிடம் பேசிய முதல்வர் தனது ஆறுதல்களை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது தொடர்ச்சியாக எழும் எதிர்ப்பு மருத்துவ சமூகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ” தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இனியும் காலதாமதம் செய்யமால் விரைவில் முடிவு செய்ய வேண்டும் முதலமைச்சர் பழனிசாமிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதேபோல, கொரோனா நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ.5000 மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். கொரோனா தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக ஒத்துழைப்பு அளிக்கும். தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா […]
ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது கொரோனா தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா தொற்று சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைக்க, பிரதமர் மோடி இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு தமிழகத்தில் […]
நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே வர வேண்டும் எனவும், மளிகை கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்குக்கு முன்னதாகவே தமிழகஅரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது பள்ளி மாணவர்கள் தேர்ச்சி இன்றி தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் நடைமுறையையும் அமல்படுத்தியது. கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் தமிழக சுகாதாரத்துறை சிறப்பான பணியை மேற்கொண்டு வருகின்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கொரோனா […]
விழித்திரு..விலகியிரு.. வீட்டிலிரு.. கொரோனா காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவி வருகிறது என்று முதல்வர் கேட்டுக்ண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, விழித்திரு..விலகியிரு.. வீட்டிலிரு.. சாதி, மதம், மொழி வேறுபாடின்றி ஒற்றுமையாக கொரோனாவை தடுக்க போராடுவோம். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல, உங்களையும், உங்களின் குடும்பத்தையும் காப்பாற்றும் அரசின் உத்தரவு. கொரோனாவை தடுக்க தற்போது ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து […]
அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும், அத்தியாசிய தேவைகளுக்காக வெளியே சென்றால், சமூக விலகலை கடைபிடியுங்கள் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். சாதி, மத இன வேறுபாடுகளை கடந்து கொரோனாவை விரட்ட உறுதியேற்போம். அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். அச்சப்பட வேண்டாம். அத்தியாசிய தேவைகளுக்காக வெளியே சென்றால், சமூக விலகலை […]
21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல, உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும் தமிழக மக்களையும் பாதுகாக்க உறுதியேற்போம். மருத்துவர்களின் உதவியின்றி சுய மருத்துவம் செய்ய வேண்டாம். கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு.. பொறுப்பான […]
உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன், கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு… தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும் தமிழக மக்களையும் பாதுகாக்க உறுதியேற்போம். மேலும் “பொறுப்பான குடிமகனை இருந்து நம்மையும், சமூகத்தையும் பாதுகாப்போம். 21 நாள் ஊரடங்கு என்பது […]