நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியதை அடுத்து அவர் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் வந்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கழகத்தினுடைய நிறுவன தலைவர், பொன்மன செம்மல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், காலமெல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும், வணக்கம்: பண்பும், பாசமும், பற்றும்,பரிவும் கொண்டு நல்லாட்சி நடத்திய இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் […]
Tag: பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பை அசைத்து பார்ப்பதற்காக ஓ பன்னீர்செல்வம் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னை வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது குழு நடைபெற்றது இந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் பொன்னையன் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளரான கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கோபாலனிடம் செல்போனில் பேசும் 9 நிமிட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த […]
நாட்டில் நடத்தப்பட்டு வரும் லஞ்ச ஒழிப்பு சோதனை அதிமுகவினரை பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் உயர் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன். இவரது வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி அவருடைய மனைவி மல்லிகா மகன்கள் […]
தனது தனிப்பட்ட உதவியாளர் கைது செய்யப்படுவதால் எடப்பாடிபழனிசாமி அதிர்ச்சியில் உறைந்துள்ளார் என்று கூறுகின்றனர். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அத்தனை ஊழல்களையும் தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிக்கொண்டு வருவோம் என்று மு க ஸ்டாலின் கூறியிருந்தார். திமுக ஆட்சி அமைத்த போது தொற்று அதிகமாக இருந்ததால் அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் விஜயபாஸ்கர் ,எஸ் பி வேலுமணி, வீரமணி, சி விஜயபாஸ்கர் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் […]
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மேச்சேரி, ராசிபுரம், எடப்பாடி ஆகிய மூன்று கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மின்சாரம் வழங்கும் நேரம் 14ல் இருந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும், என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ஒரு பிரச்சினையை அவையில் சுட்டிக்காட்டியிருப்பதாக கூறினார். […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஊரடங்கு அமல் படுத்தப் படுவது தடுப்பூசி போடும் பணி, பரிசோதனை எண்ணிக்கையை கூட்டுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. அதனால் மக்களுக்கு சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை முழுமையாக நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா பரிசோதனையில் குளறுபடி நடக்கிறது. […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]
முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் காரணமாக ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொள்ள முத்ல்வர் பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வந்துள்ளதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என ABP மற்றும் CVoter நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது . தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு , பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது .மே2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து […]
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் […]
தமிழகத்தோட கடனை அதிகப்படுத்தியது தான் முதல்வர் பழனிச்சாமியோட ஒரே சாதனை என முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், 2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி 19.64%. இன்றைக்கு பழனிசாமி ஆட்சியில் அது பாதியாக குறைந்து வெறும் 9.10%தான். 2009 – 2010 திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 28.66% இருந்தது. அதில் 3இல் ஒரு பங்கு கூட இப்ப இல்ல. […]
தமிழக முதல்வர் பழனிசாமி பயணம் செய்த விமானத்திலிருந்து கைக் குழந்தையுடன் பெண் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுகிறார். அதனால் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திப்பதற்கு டெல்லி பயணம் சென்றிருந்தார். அப்போது முதல்வர் […]
உங்களுடன் நேருக்கு நேர் மோத நான் ரெடி நீங்கள் ரெடியா பழனிசாமி? என்று ஸ்டாலின் சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை […]
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அந்தர்பல்டி பதிலை தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. இதற்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்தது. ஆனால் தமிழக […]
சேலம் மாவட்டம் பெரிய சோரகை பெருமாள் கோவில் அருகே 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்குகிறார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் […]
புதிதாக உருவாகியுள்ள புரேவி புயல் காரணமாக மக்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 950 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய புயல் காரணமாக பொதுமக்கள் வெளியில் […]
புதுச்சேரியில் வரும் 23ம் தேதி முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் நாராயணசாமி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல் பங்குகள் மாலை 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டல்களில் மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம் […]
சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறிய விஷயங்கள் பின்வருமாறு: கோயம்பேடு சந்தையை முதலிலேயே வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம். ஆனால் அதற்குவியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று சொல்வது தவறு என அவர் கூறியுள்ளார். கோயம்பேடு வியாபாரிகளிடம் பல முறை அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை என கூறியுள்ளார். […]
கோயம்பேடு சந்தையை முதலிலேயே வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம். ஆனால் அதற்குவியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ” ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டாக கோயம்பேடு திகழ்ந்து வருகிறது. சுமார் 20 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக வீடு திரும்புகின்றனர். தமிழக அரசின் தீவிர முயற்சியால் கொரோனா தொற்று பரவல் […]